வனிதா
தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். “வனிதாக்காடா” என முஷ்டி மடக்கி சிம்பல் போட்டதை அவர் உண்மை என நினைத்துவிட்டார் போல. அது சர்காஸம் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், போன தடவை இருந்ததை விட இன்னும் வீரியமாகச் சண்டை போடுகிறார்.
வனிதா பேசுவதை ஸ்பீச் வகையறாவில் தான் சேர்க்கவேண்டும். அது ஒரு உரையாடலாக எப்பவும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் ஒதுங்கிப் போகின்றனர். கமல் உட்பட! சாக்கடையில் கல் எறிந்தால், நம்ம மேல படவும் வாய்ப்பு இருக்கு இல்லையா? சேரன் எதிர்த்துப் பேசவில்லை, கமல் சாஃப்ட்டாகப் பேசுகிறார் என்றால், இந்த மாதிரி அடுத்தவர்களைப் பற்றி துளி கவலை கூட இல்லாத, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாத, பழகினவர்களைக் கூட சடுதியில் தூக்கி போடக்கூடிய மனநிலை கொண்டவரிடம் யார் தான் பேச முடியும்? இங்க வனிதாவுக்கு தேவை ஒன்றே ஒன்று தான். எந்த விவாதமாக இருந்தாலும் அவர் வெல்லவேண்டும். இல்லையெனில் எதிராளி தலை தெறிக்க ஓடி விடவேண்டும். அவ்வளவு தான்.
அப்படி இருந்தும், நேற்று கமல் வைத்துச் செய்துவிட்டார். வனிதா மாதிரியான நபர்களை இப்படித்தான் பழி வாங்க முடியும். வனிதா பேசும் பொழுதெல்லாம் பார்வையாளர்களைக் கைதட்ட வைத்து, சானலே வைத்துச் செய்கிறார்கள். கமல் அவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறமும், ‘நான் செஞ்சது தப்பே இல்லை’ என மீண்டும் சொல்கிறார் எனில், வனிதா மனித இனமே இல்லை என்று தான் அர்த்தம். இனி அவரைப் பத்தி பேசுவதே சிம்ப்ளி வேஸ்ட்.
கமல்
சிம்ப்ளி ஆசம். நேற்று வந்ததில் இருந்தே படு வேகமாக, படு ஸ்டைலாகத் தன்னோட மொத்த வித்தையும் காண்பித்து அதகளம் பண்ணினார். கவின் பேசும் போது, “நீங்க என்னங்க வனிதா மாதிரி அழக்கூடாதுன்னு சொல்றிங்க” என கவுன்ட்டர் கொடுக்க ஆரம்பித்து, வார்த்தை விளையாட்டு, தன் மேனரிசம்ஸ், சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்ஸ், தன்னோட ஆக்டிங் ஸ்கில்ஸ், என கமல் செய்தது எல்லாமே வாவ்! இதைப் பற்றி எழுதுவதெல்லாம் வேஸ்ட். ஒரு மணி நேரம் தான் பார்த்து என்ஜாய் பண்ணிடுங்க. ஒரு அரை மணி நேரம் வனிதா பேசினது தான் வரும். சங்கடமே படாமல் ம்யூட் பண்ணிவிடவும்.
வனிதா: என் கேம் என்ன சார்? என் கேமே எனக்குப் புரில (ரொம்ப புத்திசாலித்தனமா கேக்கறாங்களாம்.)
கமல்: வெளிய வந்து பாருங்க புரியும்.
வனிதா: நான் இங்க தோனினதை அப்படியே பேசிருவேன் சார்.
கமல்: உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன். யோசிச்சுப் பேசுங்க.
வனிதா: ஙே! ஷெரின் எங்கிட்ட நிறைய தடவை பேசி அழுதுருக்காங்க. அது யாருக்கும் தெரியாது.
கமல்: (அருகில் நின்ற சாக்ஷியைக் காண்பித்து) சாக்ஷி இல்லைன்னு சொல்றீங்களா? இல்லை சாட்சியே இல்லைன்னு சொல்றிங்களா? (மக்களைக் காண்பித்து.)
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். கூடவே மற்ற ஹவுஸ்மேட்ஸையும் அப்பப்போ ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.