‘எழு வேலைக்காரா’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்படியே சோம்பலாக எல்லோரும் எழுந்து வர, தர்ஷன் தனக்குத் தெரிந்த 3 ஸ்டெப்பில், ஒன்றை மட்டும் போட்டு ஆடிக் கொண்டிருந்தார். காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். ‘Why don’t you make me love?’ என ஷெரின் கவினிடம் சொல்லிவிட்டாராம். அதற்காக நேற்றிலிருந்து ஒரே வேலையாக இருந்தார். ‘ஏன்டா அதுக்காக பாத்ரூம் போனா கூடவா பின்னாடியே போகணும்? கக்கூஸ் கவின்’ என அவருக்குப் பெயர் வைத்ததில் தப்பே கிடையாது.
மார்னிங் டாஸ்க், ‘ஜெயிச்ச மொமென்ட்டில் எப்படிப் பேசுவீங்க?’ என எல்லோரும் ஸ்பீச் கொடுக்கவேண்டும். கவின் பேச வரும்போது அவரைத் தள்ளிவிட்டார் ஷெரின். ‘இப்படித்தான் உங்களைத் தள்ளிவிடுவாங்க, அதுல இருந்து மேலே வந்து ஜெயிக்கணும்’ எனச் சொல்லிவிட்டு பெக்கபெக்கவென சிரித்தார். டைமிங்கில் பேசிட்டாராம். தன் முறை வந்த போது, ‘கவின் மாதிரி சின்னச் சின்ன இரிட்டேசன் உங்களுக்குக் குறுக்க வரும், அதைத் தாண்டி ஜெயிக்கணும்’ என கவுன்ட்டர் கொடுத்தார் ஷெரின். எல்லோரும் இப்பவே நன்றி சொன்னார்கள்.
மறுபடியும் கவின்-ஷெரின் தான். லாஸ் கூட முன்ன மாதிரி பேச முடியாது. அதிக நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. கவினை அதிக நேரம் நாம பார்த்தது, இந்தப் பெண்கள் கூட, இல்ல பாய்ஸ் டீம் கூட. இப்ப அதிக நேரம் ஃபூட்டேஜ்ல வருவதற்காக, இதைச் செய்கிறாரோ என்று ஒரு டவுட். இந்த வாரம் நாமினேஷனில் வேற இருக்கிறார். இரண்டு நாளாக, எதையாவது செய்து தன்னை முன்னிலையில் வைத்துக் கொள்கிறார். தர்ஷன், முகின்லாம் சீன்லேயே இல்லை. கவின் என்ன செய்தாலும், இது ஸ்ட்ராட்டர்ஜியா இருக்குமோ என்று தான் யோசிக்க முடிகிறது.
சாண்டி ஒரு கேனோஸ் – சாண்டிமேன் கதை சொன்னான். ப்பா…. சேரன் காதில் ரத்தம் வந்தது, நமக்கே தெரிந்தது. இதில என்ன கொடுமை என்றால், இந்தக் கதையை இரண்டு நாளைக்கு முன்னாடியே அன்சீன்ல கேட்டுத் தொலைத்துவிட்டேன். பயங்கரம்.
மறுபடியும் பாத்ரூம் வரைக்கும் பின்னாடியே போனவரை, ‘உள்ளேயும் வரப்போறியா?’ எனக் கேட்க, என்ன நினைத்தாரோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, வீட்டுக்குள் வந்தவர், கிச்சனில் இருந்த லாஸிடம் போனார் (ஷெரின் ஏதாவது திட்டியிருக்கலாம்). முகத்தில் ஒரு சோகக்களை. கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸ். யேய் யப்பா, நீ நடிகன்ய்யா.
‘நீதான்…. நீதான்’ என ஒரு பாட்டு பாடினார் முகின். அவரே கம்போஸ் பண்ணியது போலிருக்கு. சூப்பராக இருந்தது. நேரம் மட்டும் நன்றாக இருந்தால் பயலுக்கு செம்ம எதிர்காலம் இருக்கு.
ஃபைனல் டிக்கெட்டுக்கான மூன்றாவது டாஸ்க் ஆக்டிவிட்டி ஏரியாவில் நடந்தது. ஒரு பெரிய குடுவை. அதில் தண்ணி இருக்கு. அதே மாதிரி சின்னச் சின்னதா சோதனைக்குழாய், அதில் கலர்கலராகத் திரவம். கவரில் இருக்கிற மேட்டரைப் படித்துவிட்டு, அது யாருக்கு பொருந்துமோ, அவங்க குடுவையில் திரவத்தை ஊற்றவேண்டும். கவரில் இருந்தது எல்லாமே வில்லங்க மேட்டர் தான்.
தனித்தன்மை இல்லாதவர்கள், அனுதாபம் தேடுபவர்கள், ஒருவரைச் சார்ந்து இருப்பவர்கள், மற்றவரின் மேல் பயணம் செய்பவர்கள் என வரிசையாக வெடிகள் தான். கவினும், லாஸும் தான் மானாவாரியாக வாங்கினார்கள். அடுத்தது சாண்டி.
இந்த டாஸ்கில் முதல் இடம் ஷெரினுக்குக் கிடைத்தது. இரண்டாவது சேரன். நான்காவது இடத்துக்கு முகின், லாஸ் இரண்டு பேருமே இருந்ததால், ‘யாராவது ஒருத்தர் பேரை நீங்களே சொல்லுங்க’ என பிக்பாஸ் சொல்ல, முகின் நாலாவது இடத்துக்கு வந்தார்.
அடுத்ததாக நான்காவது டாஸ்க். ஒரு தராசு. ஒரு பக்கம் சின்னதாக மணல் மூட்டை. இன்னொரு பக்கம், காலால் அதை இழுத்து சமநிலைப் படுத்தி அது மேல், கட்டைகளை அடுக்கவேண்டும். சேரன் முதலில் அவுட்டானார். தர்ஷன் இரண்டாவதாக வெளியே போனது ஆச்சரியம். ஒவ்வொருத்தராக வெளியே போக கவின், முகின், லாஸ் இடையே கடுமையான போட்டி. எல்லாக் கட்டையையும் அடுக்கினது இவர்கள் மூவர் தான். லாஸும் அவுட் ஆக, கவின் – முகின் நடுவில் செம்ம போட்டி. கடைசியில் கவின் அவுட்டாக, முகின் ஜெயித்தார். முதல் தடவையாக, உருப்படியாக ஒரு டாஸ்க் பண்ணிருக்கார் கவின். எல்லோருமே கவினைப் பாராட்டினார்கள். நாமும் பாராட்டலாம் தான். இப்ப அவசரப்பட்டுப் பாராட்டிவிட்டு, நாளைக்கே, “ச்சே இவனையா கும்பிட்டோம்? வீட்டுக்குப் போன உடனே கையை அடுப்புல வச்சு கரிக்கிடணும்” மொமென்ட் ஆகிவிடும். ஏனெனில் நம்ம சாரோட எஸ்டிடி அப்படி. ஆக, அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.
அடுத்ததாக, உங்க மனதில் என்ன தோன்றுகிறதோ அதை நீங்க பிக் பாஸிடம் பேசலாமெனச் சொல்ல, ஆளாளுக்கு ஒவ்வொரு மூலைக்கு ஓடினார்கள். பேசி முடித்த தர்ஷன், ‘இரவு உணவுக்கு பரோட்டாவும் சிக்கனும் அனுப்புங்க’ என ஒரு பிட்டைப் போட்டார். எல்லோரும் பேசி முடிக்க, ‘பிக்பாஸ், இப்ப நீங்க உங்க மனசுல இருக்கறதை சொல்லுங்க’ என சாண்டி கலாய்க்க, மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். “எல்லோரும் நல்லா பேசுனீங்க. போய் சமைச்சுச் சாப்ட்டுட்டு, நல்லா தூங்குங்க” என பல்பு கொடுத்தார் பிக்பாஸ். எப்படியாவது பரோட்டா வாங்கிவிட வேண்டுமென கெஞ்ச ஆரம்பித்தார். அதோடு நாள் முடிந்தது.