Search

டூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்

விக்டோரியன் காலகட்டத்தில் நடக்கும், டாக்டர் டூலிட்டிலின் பிரபலமான கதை, புதிய கதாபாத்திரங்களுடன் பெரிய திரையில் ஜனவரி 17, 2020 அன்று வெளியாகவுள்ளது.

டூலிட்டில் என்னும் புனைவுக் கதைகளின் மிக உறுதியான கதாபாத்திரங்களின் ஒன்றாகவும், மிருகங்களுடன் பேசும் திறன் கொண்ட ஒரு மனிதனின் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளியாகும் அதே தினத்தில், டூலிட்டில் திரைப்படம் இந்தியாவிலும், ஆங்க்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக் இப்படம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகத் தனது மனைவியை இழந்த, துடிப்பான டாக்டர் ஜான் டூலிட்டில், பிரபலமான மருத்துவராகவும், குயின் விக்டோரியாவின் இங்கிலாந்தில் செயலாற்றும் ஒரு விலங்குகள் வல மருத்துவராகவும் திகழ்கிறார். மேலும், டூலிட்டர் மேனரின் உயரமான சுவர்களுக்குப் பின்னால் தனக்குப் பிடித்தமான மிருகங்களின் துணையோடு வாழ்ந்து வருகிறார்.

இளம் ராணி உடல் நலம் குன்றியதன் காரணமாக, அதற்குத் தீர்வு காண டூலிட்டில் நிர்பந்திக்கப்படுகிறார். ஒரு மாயாஜாலத் தீவிற்குப் படகில் பயணம் செய்கிறார். தானாய்ச் சேர்ந்து கொள்ளும் ஒரு இளைஞன், பயந்தாங்கொல்லி கொரில்லா, துடிப்பான மந்த புத்தியுள்ள வாத்து, எதன் மீதும் நம்பிக்கையற்ற வான்கோழி, துறுதுறுவென்ற பனிக்கரடி, ஓர் அறிவார்ந்த கிளி ஆகியவர்களோடு அமையும் கலகலப்பான பயணம் தான் இப்படத்தின் கதை.