போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1
போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான "ஜென்"னைத் தோற்றுவித்தவர். 'தனித்திரு; பசித்திரு; விழித்திரு' என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான் போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத் தொற்றுநோயையும் தடுக்க அன்று.1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட 'மாஸ்டர் ஆஃப் ஜென்' என்ற படம் போதி தர்மரை நெருக்கமாக உணர உதவுகிறது. உண்மையிலேயே போதி தர்மரைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம். படத்தின் தலைப்பு தோன்றும் முன்பே.. போதி தர்மரைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஷவோலின் மட பிக்குகளுக்கு 'குங் ஃபூ' கற்று தந்தார் என்றாலும், போதி தர்மரின் தனித்துவம் ஜென் கோட்பாடுகளைப் போதித்ததிலியே இருந்தது என்கிறது வாய்ஸ்-ஓவர். சீன ப...