Shadow

சினிமா

“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

சினிமா, திரைத் துளி
தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா, தனது ரீ-என்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்குத் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் . ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”. நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாளத் திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ-என்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் உள்ளார் நமீதா. புலிமுருகனில் நடித்த அனுபவத்தைக் குறித்து, “கடந்த ஆண்டு ரீ-என்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்தப் படத்தின் இயக்குநரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்ச்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமான...
M.S.தோனி விமர்சனம்

M.S.தோனி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்கு மட்டுமில்லாமல், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’-க்கும் கேப்டனாக இருந்து, தமிழ் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமானவர் நாயகன் தோனி. தமிழகத் திரையரங்குகளில் ரசிகர்கள் ‘விசில் போட்டு’ உற்சாகத்தில் மிதக்க இந்தவொரு காரணம் போதாதா? பயோபிக் வகை படமென இதைக் கூற முடியாது. அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டும் விடுகின்றனர். நாயகனை வியந்தோதும் மற்றுமொரு இந்தியப் படமே! ஆனால், சமகால விளையாட்டு வீரரைப் பற்றிய படம் என்பதே அனைத்து விசேஷங்களுக்குமான காரணம். இந்தப் படம், அதீத பாசிடிவ் எனர்ஜியைத் திரையரங்குகளில் பரப்புகிறது. தோனியின் வெற்றி என்பது இந்திய அணியின் வெற்றி, இந்தியாவின் வெற்றி எனப் படம் முடிந்தாலும், இது தோனி மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது நண்பர்களின் வெற்றியாகவே மனதில் ஆழப் பதிகிறது. ‘தோனி கீப்பிங்கிற்கு சரிபடுவான்’ எனக் கணிக்கிறார் அவரது பயிற்சியாளர். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்பொழுது, கண்...
இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான 'டாவின்சி கோட்' மற்றும் 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்' திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்ஃபான் கான் நடித்திருக்கும் 'இன்ஃபர்நோ' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த 'இன்ஃபெர்நோ' திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. ஓர் இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்கும் பெருமை அன்றோ? "இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவர் இர்ஃபான் கான் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஹிந்தி சினிமா தற்போது துடிப்பான திரையுலகமாக மாறி இருப்பதைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இர்ஃபான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர்...
கேமியோ – அதர்வா – ராஷி

கேமியோ – அதர்வா – ராஷி

சினிமா, திரைத் துளி
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பிக் கொண்டு வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாகச் செயல்படுவது கதைக்களம் தான். அந்தக் கதைக்களத்தைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்குக் கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களைப் போல இந்தப் படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது.இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அ...
கள்ளாட்டம் விமர்சனம்

கள்ளாட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாப நோக்கத்தோடு சட்ட விரோதமாக ஆடுவதும்; உண்மையில்லாமல் பாவனையாக ஆடுவதும் கள்ளாட்டம் ஆகும். வில்லனான ஏழுமலை முன்னதையும், அதைத் தோற்கடிக்கும் முயற்சியில் நாயகன் தமிழரசன் பின்னதையும் ஆடுகின்றனர். வெற்றி யாருக்கு என்பதே படத்தின் கதை. ஒரு சிறுமியின் அழகான முகத்தில் இருந்து படம் தொடங்குகிறது. அந்தத் தாக்கம் மறையும் முன், ஒரு விபத்தின் மூலமாக படம் வேகம் எடுக்கிறது. சிறுமியின் தந்தையான மகேந்திரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. திக்கற்று கதி கலங்கிப் போயிருக்கும் மகேந்திரனுக்கு அக்கறையோடு உதவுகிறார் இன்ஸ்பெக்டர் தமிழரசன். உதவ வந்த இன்ஸ்பெக்டருக்கு அதனால் இக்கட்டு நேருகிறது. மகேந்திரனாக ரிச்சர்ட்டும், தமிழரசனாக நந்தாவும் நடித்துள்ளனர். கள்ளாட்டம் ஆடும் நந்தா தான் படத்தின் நாயகன். நந்தா காட்டும் விறைப்பும் தீவிரமும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் நேர்மையையும் மனநிலையையும் கச்சிதம...
தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் வி...
ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை. போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜய்...
சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி

சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி

சினிமா, திரைத் துளி
2014ஆம் ஆண்டு, H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "சதுரங்கவேட்டை". அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நடிக்க, சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுத, சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் பாகத்தையும், மனோபாலாவின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தான் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் "சதுரங்கவேட்டை" படத்தில் கூறியிருந்தார்கள். முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் ...
தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு, தொடரியில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் டச்-அப் பெண்ணான சரோஜா மீது கண்டதும் காதல் வருகிறது. அந்தத் தொடரியின் ஓட்டுநர் இறந்து விடுவதால், நிறுத்துவாரின்றி தொடரி தறி கெட்டு ஓடுகிறது. தொடரி எப்படி நின்றது என்றும் பூச்சியப்பன் சரோஜா காதல் என்னானது என்பதே படத்தின் முடிவு. சதா ஃபோனில் தொணத்தொணத்துத் தொந்தரவு செய்யும் ஒரு மனைவியின் குரல் படத்தில் ஒலிக்கிறது. அப்படித் தொணத்தொணப்பவர் அசிஸ்டென்ட் லோகோமோட்டிவ் பைலட்டின் (ALP) மனைவி. ஏ.எல்.பி. விதிகளை மீறி வேலை நேரத்தில் ஃபோனை அணைக்காததோடு குடிக்க வேற செய்கிறார். ஒருவரின் பொறுப்பற்றத்தனம் சுமார் 700 சொச்சம் பயணிகளின் உயிர்களைக் கேள்விகுறியாக்குகிறது. ஏ.எல்.பி.யின் நிலைக்குக் காரணம் அவருக்கு வரும் மனைவியின் ஃபோன் என்பதாகக் காட்டப்படுகிறது. இயக்குநர் பிரபு சாலமன், மைனா படத்தின் சிறை அதிகாரியின் மனைவியை...
இது உலக சினிமா செல்லம்

இது உலக சினிமா செல்லம்

சினிமா, திரைச் செய்தி
இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர். “நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்...
சதுரம் 2 விமர்சனம்

சதுரம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சைக்காலஜிக்கல் த்ரில்லர்களான ‘சா (SAW)’ தொடர் படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்தப் படத்தின் கருவை எடுத்தாண்டு, பிளான்த்ராஃபிக்கல் த்ரில்லர் (Philanthropical thriller) என்ற வகைமைக்கு சதுரம் 2 படத்தை மாற்றி உருவாக்கிள்ளனர். சதுர வடிவிலான அறையில் மருத்துவர் வாசுதேவனும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். அங்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு, அவ்விருவராலும் சதுரத்தில் இருந்து வெளியேற முடிகிறதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஸ்லாஷர் (slasher) வகை படங்கள், தமிழுக்குத் தேவையா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது ரத்தக் களறியுடன் ஒருவரைக் கொடூரமாக அறுத்து கொலை செய்யப்படுவதாகச் சித்தரிக்கும் படங்களை ஸ்லாஷர் படங்கள் எனலாம். ஆனால், பெரும்பாலான ஹீரோயிசம் மிகுந்த (மலிந்த) மாஸ் படங்கள் கிட்டத்தட்ட ஸ்லாஷர் படங்கள் போன்றே காட்சியளிக்கின்றன. இப்படமோ மிக லாவகமாக சென்சா...
ஆண் தேவதை – படக்குழுவினர்

ஆண் தேவதை – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> சமுத்திரக்கனி >> ரம்யாபாண்டியன் >> கவின் >> கஸ்தூரி >> 'பூ' ராமு >> இளவரசு >> ஸ்ரீநிகா >> பிரகதீஷ் >> அறந்தாங்கி நிஷா >> யாழ் நிலா >> மயில்சாமி >> அருண்மொழி >> திலீபன்பணிக்குழு:>> தயாரிப்பு நிறுவனம்  - சிகரம் சினிமாஸ் >> தயாரிப்பு - ஃபக்ருதீன் >> இயக்கம் - தாமிரா >> ஒளிப்பதிவு - விஜய் மில்டன் >> இசை - ஜிப்ரான் >> படத்தொகுப்பு - காசிவிஸ்வ நாதன் >> கலை - ஜாக்சன் >> சண்டை - ரன் ரவி >> உடை வடிவமைப்பு - கீர்த்திவாசன் & ஷோபியா சவுரிராஜன் >> தயாரிப்பு நிர்வாகம் - அண்ணாமலை >> மக்கள் தொடர்பு - ஆ. ஜான்...
சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

சினிமா, திரைத் துளி
ஆண் தேவதையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி. பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை' எனத் தலைப்பின் மூலமாகவே யோசிக்க வைக்கின்றனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலசந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்தவர். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்வொர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதாரச் சூழலும், கடன் வாங்க...