Shadow

சினிமா

தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

சினிமா, புத்தகம்
தமிழ்த்திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான கண்மணி ராஜாமுகமது எழுதிய, "பால்யகால சொர்கவெளி (கவிதைத் தொகுப்பு)”, "நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை (சிறுகதைத் தொகுப்பு)” நூல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூல்களை வெளியிட ராஜ் டிவி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். கவிஞர் இசாக், விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, M.M.அப்துல்லா வரவேற்றுப் பேசினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், "பேச்சு வழக்கில் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சுருங்கி, நாம் ஏறத்தாழ அவற்றை இழந்து வருகிறோம். இப்போதெல்லம் நல்லவற்றைக் குறித்து சொல்லும் போது 'செம' என்றும் சரியில்ல என்பதற்கு 'மொக்கை' என்றும் சாதரணமாக அனைவரும் சொல்லப் பழகிவிட்டனர். நம் பண்பாடு, கலாச்சாரத்தின் இனிய சொற்களை இழந்து வருவது, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சனை...
வெற்றிப் பூரிப்பில் சக்தி

வெற்றிப் பூரிப்பில் சக்தி

சினிமா, திரைத் துளி
சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு. தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடுகின்றது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனித் திறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும்...
தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்

தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ்’ என்ற வீடியோ கேமை, சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. பறக்க இயலாத பறவைகளுக்கு, பச்சை நிறப் பன்றிகள் மேல் அப்படியென்ன கோபம்? ஏன் வெஞ்சினம் கொண்டு பன்றிகளைத் தாக்குகிறார்கள் என்பதே படத்தின் கதை. ரெட் (Red - Hot head) எனும் சிவப்பு நிறப் பறவைக்கு பெரிய புருவங்கள்; நண்பர்களும் கம்மி. ஊருக்கு ஒதுக்குபுறமாக வீடு கட்டி வாழ்கிறது. கோபம் அதிகமாக வருகிறதென, கோபத்தைக் குறைக்கும் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே ரெட்-க்கு இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒன்று மஞ்சள் நிற சக் (Chuck – Speed Demon); மற்றொன்று பாம் (Bomb – Short Fuse). சக்-கிடம் அபிரிதமான வேகம் இயல்பிலேயே இருக்கும். எள் என்றால் எண்ணெயாய் இருத்தல் என்பது என்னவென்று அறிய நீங்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கணும். பாம்-க்கு கோபம் வந்தால் அவ்விடத்தைத் தீக்கனல்களால் தெறிக்க விட்டுவிட...
இது நம்ம ஆளு விமர்சனம்

இது நம்ம ஆளு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிவாவிற்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவனால் ‘தன்னுடைய ஆள்’ எனக் காதலிக்க ஒருவரையும் தீர்மானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது காதலின் ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும் ஃபினிஷிங்கில் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. சிவா தன்னுடைய ஆளைக் கண்டடைந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘எனக்கு லவ் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற ஒற்றைப் பரிமாணக் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பேசிப் பேசியே மாய்கின்றனர் கதாபாத்திரங்கள். சூரி: அந்தப் பொண்ண பார்த்ததுமே உனக்குப் புடிச்சிப் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா? சிம்பு: என்ன? சூரி: ஒன்னு உன்னோட பருவம். இன்னொன்னு அந்த பொண்ணோட புருவம். நயன்தாராவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் என்பதால் நயன்தாராவைப் பார்த்ததுமே சிலம்பரசனுக்குப் பிடித்துப் போய் விடுகிறதாம். அப்படின்னு சூரி சொல்றார். இப்படி இலக்கற்ற கதைப் போக்கினாலும், கடியான வசனங்...
உறியடி விமர்சனம்

உறியடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண்கள் கட்டப்பட்ட நிலையில், கம்பைச் சுழற்றி ஊசலாடும் பானையை குறி வைக்க வேண்டிய விளையாட்டின் பெயர் உறியடி. அப்படி மறைந்திருந்து அரசியல் செய்யும் ஆட்களை நாயகர்கள் குறி வைக்கிறார்கள் என்ற குறியீடுதான் படத்தின் தலைப்பு. மனதை உலுக்கும் ரத்தமும் சதையுமுமான கதை. சமூகத்தின் மீது அச்சத்தையும் நம்பிக்கையின்மையும், அதீதமான பயத்தையும் ஏற்படுத்துகிறது. சாதீய நஞ்சு ஊறிப் போன மனங்களையும், அம்மனங்களை முதலீடு செய்ய நினைக்கும் முதலாளிகளும், அவர்கள் தம் குயுக்திகளையும் பற்றிப் படம் பேசுகிறது. அத்தனையையும், படிப்பதை விட சந்தோஷமாக இருப்பது முக்கியமென நினைக்கும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சுற்றி நடப்பதே படத்தின் சிறப்பு. மிகுந்த விறுவிறுப்புடன் படம் பயணித்து சட்டென இடைவேளை வந்துவிடும் பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியே! மயிர்கூச்செறிய வைக்கும் காட்சி அ...
ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். 1950 - 60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெயகாந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது.  பாரதியாரையும் புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ஜெயகாந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு. ஜெய காந்தனின் இயற்பெயர் டி.முருகேசன். தண்டபாணிப் பிள்ளை முருகேசன்.1934 ல் கடலூரை அடுத்த மஞ்சக் குப்பம் என்கிற ஊரில் பிறந்தவர். படிப்பில் அதிக நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.சென்னையில் அடித்தட்டு மக்களிடையே வாழவும்,அவர்களுடைய வாழ்க்கையைத் தானும் அனுபவிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது...
ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை. கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி 'தி ரோபாட்'டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார். ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா. ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத் ...
உன்னோடு கா விமர்சனம்

உன்னோடு கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து தலைமுறைக்கு முன், இரண்டு குடும்பங்களுக்குள் மூண்ட பகை, சிவலிங்கபுரம் எனும் ஊரையே வடக்கு, தெற்கு என இரண்டு ஊராகப் பிளவுபடுத்தி விடுகிறது. சிவலிங்கபுரம் மீண்டும் எப்படி ஒன்றிணைகிறது என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவைப் படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களே! இப்படத்தின் கதாபாத்திரத் தேர்வுகள் கச்சிதமாகக் கதையோடு பொருந்துவதோடு நகைச்சுவௌக்கும் உத்திரவாதமளிக்கிறது. தன் கதையை, இயக்குநர் ஆர்.கே.-விடம் தந்து படத்தைத் தயாரித்துமுள்ளார் அபிராமி ராமனாதன். ஆர்.கே.வின் திரைக்கதையும் வசனங்களும் நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. தேசத்தின் அடையாளமாகவும், சிலை கடத்தல்காரர் காசியாக வரும் மன்சூர் அலிகானும், ஆள் கடத்தல்காரர் 'யோகா மாஸ்டர் மார்த்தாண்ட'மாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் அதற்கு உதாரணங்கள். தங்களது மகனும் மகளும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என அறிந்ததும் அதைக் கொண்டாடுகின்றனர் ஐந்து தலைமுறை பகையாளிகள...
100+ ஜப்பான் கலைஞர்கள் இன் ஜம்பு 3டி

100+ ஜப்பான் கலைஞர்கள் இன் ஜம்பு 3டி

சினிமா, திரைத் துளி
அம்புலி 3டி, ஆ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஹரி - ஹரீஷ் இரட்டை இயக்குநர்கள் இயக்கும் 'ஜம்புலிங்கம் 3டி' படத்தில் 100க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடிகர்களும் நடனக் கலைஞர்களும் படத்தில் நடித்துள்ளனர். “தயாரிப்பாளர் திரு. ஹரி ஜப்பான் கலாச்சார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானியக் கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும்பாலும் ஊமை மொழியில் தான் இருந்தது. அதை படமாக்கி இருந்தாலே, அதுவே ஒரு பெரிய நகைச்சுவைப் படமாக இருந்திருக்கும். இந்தப் படத்தின் கதை ஓர் இந்திய கிராமத்தில் துவங்கி ஜப்பானில் சென்று முடிகிறது. நமது ஊரில் குழந்தைகளுகான படங்களே வெளி வருவதில்லை என்ற குறையை ஜம்புலிங்கம் 3டி தீர்க்கும். இந்தப் படத்தை திரையிடத் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக்...
கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா

கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா

சினிமா, திரைத் துளி
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிக்கும் கோ – 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இயக்குநர் விஷ்ணுவர்தனின் ‘பில்லா’, இயக்குநர் சக்ரி டோலேட்டியுடன் ‘பில்லா’ 2 முதலிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள சரத் ,இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்புள்ள, உணர்ச்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஒருவருடன் என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. தப்பென்று பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாபாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டியிருப்பது எனக்குப் பெருமைதான். 'கோ 2' படத்தில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ளத் தெளிவாக...
ஜம்புலிங்கம் 3D – படக்குழுவினர்

ஜம்புலிங்கம் 3D – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கோகுல் நாத் >> அஞ்சனா >> சுகன்யா >> பேபி ஹம்சிகா >> யோக் ஜபீ >> ஈரோடு மகேஷ் >> கும்கி அஸ்வின்பணிக்குழு:>> தயாரிப்பு - G.ஹரி & K.ஒகிடா >> இயக்கம் - ஹரி & ஹரீஷ் >> ஒளிப்பதிவு & 3D ஸ்டீரியோகிராஃபி - G.சதிஷ் >> இசை (பாடல்கள்) - ஸ்ரீவித்யா >> பின்னணி இசை - K.வெங்கட் பிரபு ஷங்கர் >> கலை - ரெமியன்...
ஃபேண்டசியா விழாவில் மிருதன்

ஃபேண்டசியா விழாவில் மிருதன்

சினிமா, திரைத் துளி
இன, மொழி, தேசிய பேதமற்று உலக மக்கள் அனைவரையும் கவரும் கண்ணியாக இருக்கும் விஷயங்களில் பிரதானமானது சினிமாவே! சமீபமாக தமிழ் சினிமாக்களும் உலகளாவிய அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அப்படிக் கவனம் பெறும் பட்டியலில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படமும் சேர்ந்துள்ளது. கனடாவில் நடைபெறும், ‘ஃபேண்டசியா சர்வதேசத் திரைப்படா விழா 2016’ -இற்கு மிருதன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முதல் ஜோம்பி படமான மிருதன், அதன் பிரம்மாண்டட்தாலும் நேர்த்தியான திரைக்கதையாலும் இப்பொழுது உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திரையில் மட்டுமன்று நிஜ வாழ்விலும் சிறந்த மகனான ஜெயம் ரவி தன்னுடைய மகிழ்ச்சியை, அன்னையர் தினத்தன்று அனைத்து அம்மாக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இத்தகைய அங்கீகாரங்கள் தன்னை மேலும் நன்றாக உழைக்கணுமென உந்துகிறது எனச் சொன்னார் ஜ...
ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

சினிமா, திரைச் செய்தி
“குழந்தைகளுக்கான சினிமா என்பது தமிழில் அருகிவிட்டது அல்லது இல்லவே இல்லைன்னு சொல்லலாம். அந்த வகையில், ஜம்புலிங்கம் 3D எனும் படத்தை நான் ‘தமிழ் ஹாரி பாட்டார்’ எனச் சொல்வேன். மிகச் சுவாரசியமான படம்” எனப் புகழ்ந்தார் Y.G.மகேந்திரன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு, எஸ்.வி.சேகர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வாழ் தமிழரான ஹரி இப்படத்தைத் தயாரித்துள்ளார். நாடகம், இசை என தமிழ்க்கலை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பொறுப்பேற்பெடுத்து ஜப்பானில் அரங்கேற உதவி செய்து வருபவர். அதனால்தான் நாடகக் கலைஞர்களான க்ரேசி மோகன், எஸ்.வி.சேகர், Y.G.மகேந்திரன் போன்றோர்களும், இசைக் கலைஞர்களான கங்கை அமரன் முதலியவர்களும் ஹரியின் நட்பிற்காகவும் நற்குணத்துக்காகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த ஜப்பானியர் ஒருவரின் அழகு தமிழ் கொஞ்சும் உரை மனதிற்கும் காதிற்கும் இனிமையா...