Shadow

சினிமா

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை வியந்தோதிய படங்களையும் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ படமாக ரசிக்க வைக்கிறது இப்படம். தலைப்பே, அத்தகைய பகடியின் ஒரு வடிவம் தான். ‘நைனா’ எனும் அதீத அதிகாரத்தை வழங்கும் நாற்காலியில், உட்காரத் தகுதியான நபரைத் தேடுகிறான் தாஸ். ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் ஜானியை, கொலைகள் புரியும் பெரிய ‘மாஸ்’ வீரனென நினைத்து தெரியாத்தனமாக நைனாவாகத் தேர்வு செய்து விடுகிறான் தாஸ். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கலகலப்பான கதை. Cigarette smoking is injurious to health என நான் கடவுள் ராஜேந்திரன் குரலில் ஆங்கில உச்சரிப்பைக் கேட்ட நொடி முதல், திரையரங்கில் கேட்கும் பார்வையாளர்களின் சிரிப்பொலி, அனேகமாக முதல் பாதி முழுவதும் எதிரொலிக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில், சரவணனுக்கு முன் ஜீ.வி.பிரகாஷ் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சி அதகளம். இப்படியொரு கலகலப்...
மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’

மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
1996 இல் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. 75 மில்லியன் டாலர் பொருட்செலவில் உருவான அப்படம், 817 மில்லியன் டாலர் சம்பாதித்தது. அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்பதோடு, சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. 20 ஆண்டுகள் கழித்து அதன் அடுத்த பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச். இம்முறை 200 மில்லியன் பொருட்செலவில் வரவுள்ளது ‘இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜன்ஸ்’. வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பூமி வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னறிவிக்க வேற்று கிரகவாசிகள் விட்டுச் செல்லும் தொழில்நுட்பத்தையே உபயோகித்து, ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) என்ற அமைப்பை உருவாக்குகிறது ஐக்கிய சபை. அவ்வமைப்பை, செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் ரேயாவிலும் (சனி கிரகத்தின...
இறுதியாகச் சிலர்

இறுதியாகச் சிலர்

கட்டுரை, சினிமா
மாயலோகத்தில் தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இதுவரை 21 பழம்பெரும் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. இவர்கள் அனைவரும் நமது நினைவில் வாழ்பவர்கள். இவர்களைத் தவிர மேலும் சிலரும் இலக்கியத்தோடு, திரைத்துறைக்கும் பங்களித்துள்ளனர். இந்தப் பகுதியில் அவர்களில் சிலரைப் பற்றிய மிகச் சிறிய குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சாண்டில்யன் பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஒரு தீவிர வைஷ்ணவ பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதோ கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. நெற்றியில் எப்...
தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'தி கான்ஜூரிங்’ என்றால் இந்திரஜாலம் அல்லது அமானுஷ்யச் சம்பவங்கள் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு இரண்டாவது பொருளே பொருந்தும். தூங்கிக் கொண்டிருக்கும் 11 வயது சிறுமியான ஜேனட், விழிக்கும் பொழுது கீழ்த் தளத்தில் இருக்கிறாள்; அந்தரத்தில் மிதக்கிறாள்; 72 வயது முதியவரின் குரலில் பேசுகிறாள். அவள் ஆவியால் பீடிக்கப்பட்டது உண்மைத்தானா அல்லது அந்தச் சிறுமியின் குடும்பம் நாடகமாடுகிறதா என அறிய, அமெரிக்கத் திருச்சபை எட் – லோரைன் தம்பதியை இங்கிலாந்து செல்லுமாறு பனிக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் கதை. பேய்ப் படம் என்பதை மீறி படம் சில இடங்களில் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “நான் ரொம்ப சோர்ந்துட்டேன். என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க” என ஆவியால் பீடிக்கப்படும் 11 வயது பெண் நம்பிக்கையிழந்து சொல்கிறாள். எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் அவளது அக்கா மார்க்ரெட் கூட, “நீ தான் ...
க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

சினிமா, திரைத் துளி
பொதுவாகவே இயக்குநர் அறிவழகனின் படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும்.  அதுவும் இது ஓர் அதிரடிப் படம் என்பதால், சண்டைக் காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது 'குற்றம் 23' , அருண் விஜய்யின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும்  கலை கட்டி வருகிறது. 'சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து  நடிக்கும் இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் 'ரேடான்  திசினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்யின்  'குற்றம் 23' படத்தின் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையிலு...
இளம் 007

இளம் 007

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, வயதைக் குறைத்து புது பொலிவுடன் 007 பாத்திரத்தைக் களமிறக்க உள்ளனர். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஸ்கைஃபால் , ஸ்பெக்டர் ஆகிய படங்களிலேயே அவதானித்து இருக்கலாம். மிக இளமையான ஜேம்ஸ் பாண்ட்டாக "தியோ ஜேம்ஸ்" நடிக்கவுள்ளார். 31 வயதாகும் இவர், "என் சிறு வயது கனவிது. விஷயத்தைக் கேள்விபட்டவுடன் நாற்காலியில் இருந்து நழுவி விழப் போனேன். கனவு காண்பது போலுள்ளது" எனத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட்டில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஃபிப்ரவரியில் வெளிவரவுள்ளது. அது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....
பைசா முக்கியம் – நடிகை ஆரா

பைசா முக்கியம் – நடிகை ஆரா

சினிமா, திரைத் துளி
பணத்தை கதைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பைசா. விஜயின் 'தமிழன்' திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்க, பசங்க புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாபாதிரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் இந்தப் படத்தைத் தயாரிக்க கராத்தே கே.ஆனந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார். நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்திற்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் பைசாவை மையமாக வைத்துக் கொண்டு உருவான பாடல்கள் ஏராளம். பிரபு தேவாவின், 'சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம்’, சிலம்பரசனின், ‘நோ மணி நோ ஹனி’, கருணாகரனின்,‘காசு பணம் துட்டு மணி’ என ஏகப்பட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம...
‘ஒழுக்கம் முக்கியம் மகனே!’ – சமுத்திரக்கனி

‘ஒழுக்கம் முக்கியம் மகனே!’ – சமுத்திரக்கனி

சினிமா, திரைத் துளி
தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டுமென நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் "கொளஞ்சி" படத்தின் கதை. சிம்புதேவன், நவீன் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் "கொளஞ்சி" படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் "கொளஞ்சி" படத்தைத் தயாரிக்கின்றார். இவர் மூடர்கூடம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கிப் பலரின் பாராட்டைப் பெற்றவர். சமுத்திரக்கனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர். ராசிப்புரம், கோக்கராயன் பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது "கொளஞ்சி" படத்தின் இற...
இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம். பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ போடும்பொழுதே எழும் மழையின் பின்னணி இசை, நம்மை ஏதோ ஓர் அனுபவத்திற்காகத் தயார்ப்படுத்துகிறது. பொன்னி, யாழினி, மீனாக்ஷி ஆகிய மூவருக்கும் மழையில் இறங்கி நனைய ஆசை இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சூட்சமத் தளைகள் அவர்கள் நனைவதைத் தடுத்து கையை மட்டும் நீட்டி மழையைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. இம்மூவரில், ஒருவரை மட்டும...
‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்

‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்

சினிமா, திரைச் செய்தி
மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் "தி ஹிந்து" ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த "மோ" படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் புதிய படமொன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்த மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் என்பதால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களிடம் கூடியுள்ளது. தயாரிப்ப...
ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

சினிமா, திரைத் துளி
‘குற்றம் 23’ திரைப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா. படத்தில் அவரது கதாபாத்திரம் பெயர் தென்றல். 'மெளன ராகம்' திவ்யா, 'வேட்டையாடு விளையாடு' ஆராதனா, 'காக்க காக்க' மாயா, 'அலைபாயுதே' சக்தி போல மகிமா ஏற்று நடிக்கும் தென்றல் பாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்குமென அடித்துச் சொல்கின்றனர் படக்குழுவினர். "முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய் சாருடன் நடிக்கப் போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரின் சுமுகமான பண்பும், நட்பு ரீதியாகப் ...