சினிமா

உதவி இயக்குநரான நாயகி மிஷா கோஷல்
நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். தற்போது, ‘உன்னோடு கா’ எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
R.K. இயக்கி, C.சத்யா இசையமைக்கும் இந்தப் படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் அபிராமி மெகா மால் இணைந்து தயாரித்துள்ளனர்.
"அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது என்பது நான் செய்த பாக்கியம். இயக்குநர் ஆர்.கே. புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக் காலத்தில் திட்டமிட்டப்படியே படப்பிடிப்பை முடித்து இருப்பதே இதற்கு சான்று. இசையமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்திருக்கிறார். வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும...

குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு
இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான 'குற்றப்பரம்பரை'க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா.
வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் 'கூட்டாஞ்சோறு'. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை "குற்றப்பரம்பரை" எனப் பெயர் மாற்றி 'டிஸ்கவரி புக் பேலஸ்' எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் பெயர் குழப்பமே அனைத்துக்கும் ஆதாரச் சுழி. இதனை பாலா, பாரதிராஜாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்நிலையில், "பாலா, என் எச்சிலைத் திங்க மாட்டான் என நம்புகிறேன்" என பாரதிராஜா பேட்டியளித்துள்ளார். மூத்த இய...

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்
பேய்ப் படம் என்றாலே காமெடிப் படம் என்றாகி விட்டது சூழல். இந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விட்டாலே மக்கள் ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
சாலை விபத்தில் சிக்கி இறக்கும் பெண்ணின் மொபைலைத் திருடி விடுகிறான் திருடனான நாயகன். மொபைலில் இன்கம்மிங் காலாக வரும் பேய் செய்யும் அட்டகாசம் தான் படத்தின் கதை.
கதாநாயகனாக வைபவ். தனக்குக் கிடைத்த சோலோ வாய்ப்பைச் சிந்தாமல் சிதறாமல் உபயோகித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது.
வசனம், கதாபாத்திரத் தேர்வு, நாயகன் வீட்டின் உட்புற கலை அமைப்பு, குத்து டான்ஸ் பள்ளியின் முகப்பு என படம் நெடுகும் கலகலப்பை அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்க விட்டுள்ளார் இயக்குநர் S.பாஸ்கர். இயக்குநர் சுந்தர்.சி, இந்தப் படத்தைத் தயாரித்ததில் ஓர்...

டார்லிங் – II விமர்சனம்
ஐந்து நண்பர்கள் ஒரு மாளிகையில் பேயிடம் சிக்கிக் கொள்வதால், 'ஜின்' எனப் பெயரிடப்பட்ட படம் 'டார்லிங்-II' ஆனது. படத்தை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியது தலைப்பு மாற்றதுக்கான பிரதான காரணம். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது.
ஒரு விளையாட்டுத்தனம் எப்படி விபரீதம் ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.
'காற்றில் ஒரு' என்ற பாடலுடன் தொடங்குகிறது படம். அந்தப் பாடல், படத்தைப் பற்றிய முழுப் பிம்பத்தை அளிப்பதோடு, மனப்பிழற்வுக்கு உள்ளாகும் ஒரு இளம்பெண்ணுடைய குடும்பத்தின் மனநிலையையும், குறிப்பாக உடைந்து போகும் அவள் தந்தையின் நிலை குறித்தும் அழகாகப் பதிந்துள்ளது. பீட்சா படத்தில், 'பீட்சா ஷாப்' ஓனரான நரேனும் இதே போன்றதொரு பரிதவிப்பில்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
டார்லிங் படத்தில், பேயின் அட்டகாசத்திற்குப் பின் ஒரு வலுவான காரணம் முன் வைக்கப்பட்டது. பட...

ஜகதலப்ரதாபன் (1944)
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, எம்.எஸ்.சரோஜினி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாரதாம்பாள்)ஜகதலப்ரதாபன் என்றால் அனைத்துத் துறைகளிலும் கை தேர்ந்தவன் – மிகுந்த திறமைசாலி எனப் பொருள் கொள்ளலாம். இப்போது ‘சகலகலா வல்லவன்’ என்கிறோமே – அதைப்போல.
நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு ஜகதலப்ரதாபன் இருந்தார். அவர் தான் பி.யு.சின்னப்பா.
தமிழ்த் திரையில் ஆரம்பகாலங்களில் நடிப்பு என்பது, திரையில் தோன்றிப் பாடுவதுடன், பிராமண மற்றும் மணிப்பிரவாள நடையில் ஒரு மாதிரி இழுத்து இழுத்துப் பேசுவதாகத் தானிருந்தது. பாகவதரின் பல படங்களில் இதைப் பார்க்க முடியும். இதே மாதிரி தான் அனைவரும் பேசியும், பாடியும், நடித்தும் வந்தார்கள். அவர்கள் மத்தியில் அருமையாகப் பாடுவதுடன், நடிப்பாற்றலிலும் வல்லவராக விளங்கிய ஒரே நடிகர் பி.யு.சின்னப்பா. எனவே தமிழ்...

புகழ் விமர்சனம்
ஏரியாவில் யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக போய்த் "தட்டி"க் கேட்பவன் புகழ். அப்பழக்கம் அவனை எங்குக் கொண்டு போய் விடுகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் கம்யூனிசத்தின் தேக்க நிலையை பொதுப்புத்தியின் நோக்கில் விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. எனினும் அதிகாரத்தின் முன் எதுவும் செல்லுபடியாகாது என்ற அதிருப்திக்கு படம் இட்டுச் செல்கிறது. தோழராக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன், அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு.
படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் மிக இயல்பாய் வந்து ஈர்க்கின்றன. ஒன்று, அரசியல்வாதியாக வரும் தாஸ். வீட்டிலிருப்பவரைச் சமாளிக்கணும், கட்சியினரைச் சமாளிக்கணும், அமைச்சரைச் சமாளிக்கணும், காவல்துறையை நட்பாக வைக்கணும் என மனிதனுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள். இத்தனையையும் தாஸாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து சுமந்துள்ளார். இரண்டாவது, ஊர் வம்ப...

பஸ் 657 விமர்சனம்
தன் மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக, தான் வேலை செய்த கேசினோவை ஜேசன் காக்ஸுடன் இணைந்து கொள்ளையடிக்கிறார் லூக் வான். கொள்ளையடித்து விட்டு ஓடும்போது, தப்பிப்பதற்காக பேருந்தொன்றில் ஏறுகின்றனர். ரோந்துப் பணியில் இருக்கும் க்றிஸியா எனும் காவல்துறை அதிகாரி சந்தேகத்தோடு அப்பேருந்தைத் தொடருவதால், லூக் வான் குழு வேறு வழியின்றி பேருந்தைக் கடத்துகின்றனர். மொத்த காவல்துறையும் அப்பேருந்தை பின் தொடர்கிறது. இச்சிக்கலில் இருந்து லூக் வான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
எந்தப் புதுமையும் இல்லாத கதை. நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை.
சில கொள்கைகளோடு வாழ்பவர் ஃப்ரான்சிஸ் சில்வியா போப். ‘எவரையும் திருட அனுமதிக்கக் கூடாது’ என்பது அதில் மிக முக்கியமானது. தொழிலின் பலமே அதில் தான் உள்ளதென உளமாற நம்புபவர். எவரேனும் அப்படித் திருடினால், திருடனையோ - திருடர்களையோ கண்டுபிடித்துச் சலனமேதுமின்றி கொல...

சவாரி விமர்சனம்
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி. சாலமனும் ஒரே காரில் சவாரி செய்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் எந்தப் பூச்சுகளையும் நம்பாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடக்கி விடுகிறது. அங்கிருந்தே செழியனின் ஒளிப்பதிவு உங்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. எதையெல்லாம் ரசிகர்களால் யூகிக்க முடியுமோ, அதற்கு இடம் தராமல் இயக்குநரே முந்திக் கொண்டு அதைச் சொல்லி விடுகிறார். இடைவேளை வரை இப்படி விறுவிறுப்பாகச் செல்லும் சவாரி, அதன் பின் சற்றே நிதானமாய்ப் பயணிக்கிறது.
ஏ.சி.பி. சாலமனாக புதுமுகம் பெனிட்டோ நடித்துள்ளார். படத்தின் பலம் அதன் கதாபாத்திரத் தேர்வுகளே! மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டுள்ள படத்தில், நடிகர்கள் நிறைவாக நடிக்காவிட்டால் சோடை போய்விடும். இவ்விஷயத்தில் இயக்குநர் குகன் சென்னியப்பன் மிகத் தெளிவாக தியேட்டர் ஆர்டிஸ்ட்களையும், தேர்ந்த நடிகர்களையும் உபய...

ஹரிதாஸ் (1944)
(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி)‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு.
இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது.
ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம்.
இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்ட...

அவியல் விமர்சனம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், நான்கு குறும்படங்களை ஒன்றாக்கி 132 நிமிட அவியலாக்கியுள்ளனர்.
நான்கும் ஒவ்வொரு விதம்.
மோஹித் மெஹ்ராவின் 'ஸ்ருதி பேதம்', புறத்திணைப் பிரிவுகளான பெருந்திணையையும் (பொருந்தாக் காதல்) கைக்கிளையையும் (ஒரு தலை காதல்) கலந்து கட்டிய கதை. தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. இது போன்ற பேசுப்பொருள்களை நாடகப் பாணியில் திரையில் உலவ விடுவதில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சமர்த்தர். ஆனால், மோஹித் மெஹ்ராவோ முற்றிலும் நகைச்சுவையுடன் இதை அணுகியுள்ளார். சில நிமிடங்களே எனினும், இந்தப் பேசுப்பொருள் தருகின்ற கிளர்ச்சி அலாதியானது.
ஆனால், கலாச்சாரக் காவலர்களுக்கு வேலை வைக்காமல் படம் சுபமாகவே முடிகிறது. சித்தி ஸ்ருதியாக அம்ருதா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மணிரத்னம் படத்து நாயகிகளை நினைவுபடுத்துகின்றது. மற்ற மூன...






