Shadow

சினிமா

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சினிமா, திரைச் செய்தி
“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினார் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன். ‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார். ‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா செய்யலாம்’ எனச் சொல்லியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்ததோடு அன்றி, “நீங்க கிஷோர்க்கிட்ட போய் இந்த ஸ்க்ரிப்ட் கொடுங்க. அவருக்குக் கண்டிப்பா பிடிக்கும். உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க. டிமாண்ட் செய்ய மாட்டார். நான் கிஷோர்கிட்டப்...
காதலும் கடந்து போகும் விமர்சனம்

காதலும் கடந்து போகும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக இருக்கும் கதிரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகமும், நட்புமுமே படத்தின் கதை. வசனங்களில் நகைச்சுவை இருந்தாலும், படம் ஆங்காங்கே, குறிப்பாக முடியும் வேளையில் மனதை வருடிச் செல்கிறது. 'உனக்கொரு வாழ்க்கை உண்டு' எனச் சொல்லி, ஒருவனுக்கு மூளைச்சலவை செய்யப்படும் பொழுது, மெல்ல பதற்றம் எட்டிப் பார்க்கிறது. எல்லா மூளைச்சலவைக்கும் பின்னும் ஓர் அழகான கனவு தூண்டிலாக்கப்படும். உலகைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்களின் சிறு விதை இப்படித்தான் முளைக்கிறது. அப்படி, 'தாம் உபயோகிக்கப்படுத்தப் பட்டுள்ளோம்' என்ற உண்மையை சலவை செய்யப்பட்டவர்கள் உணரும் பொழுது ஏற்படும் வலி என்பது மிக மிகக் கொடியதாக இருக்கும். அது தன்னைப் போல் பிறருக்கும் ஏற்பட்டு விடக்கூடாதென்ற மனமிருக்கில்லையா..!? அதை கமலின் மொழியில் சொல்வதென்றால், 'அப்படிப்பட்ட மனம் வ...
ரெமோவுடன் இணையும் ராஜா

ரெமோவுடன் இணையும் ராஜா

சினிமா, திரைத் துளி
இன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். “இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி வருகிறார்” என மகிழ்ச்சியாகச் சொன்னார் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா. ரெமோ குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விசாகப்பட்டினம் கிளம்ப ஆயுத்தமாக உள்ள சூழலில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர்.“நன்றாகத் தொடங்கப்ப...
பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

கட்டுரை, சமூகம், சினிமா, திரைச் செய்தி
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார். “நான் விஜய் ஆண்டனியிடம்...
கரையேறிய ஓடம் – ராடான் குறும்பட விழா

கரையேறிய ஓடம் – ராடான் குறும்பட விழா

சினிமா
ராடான் நிறுவனம் நடத்திய சர்வதேச குறும்பட விழாவின் முதற்பதிப்பின் இறுதிச் சுற்று இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.  உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட ‘ஓடம்’ படம், சிறு குழந்தைகள்  தங்கள் பெற்றோரை  விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் முதற்பரிசை வென்றது. வாய்ப்புள்ளவர்கள் தவறாது காண வேண்டிய படம். உங்கள் மனதை உலுக்கிவிடும்.  அஞ்சலி இயக்கிய திகில் கதையைக் கொண்ட படமான ‘நிழல்’ இரண்டாம் பரிசையும் பெற்றது.  இவற்றிற்குப் பரிசளித்துப் பேசிய ஆர்யா, “குறும்படம் எடுப்பது வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர்களுக்கு அவசியமான ஒன்று. அதைவிட்டுவிட்டு ஒரு மூனு மணி நேரம் கொடுங்க. முழுக் கதையையும் சொல்கிறேன் என்று யாராவது கேட்டால் எரிச்சலை உண்டாக்கும்.  பத்தாயிரம் சம்பள வேலைக்கே பதினைஞ்சு சர்டிஃபிகேட்டுகள் தேவைப்படுன்றன. அப்படி இருக்கும்போது க...
சங்கு சுப்ரமணியம்

சங்கு சுப்ரமணியம்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. "சுதந்திரச்சங்கு" என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன. அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு பத்திரிகை வெளிவந்து, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. அப்பத்திரிகைதான் "சுதந்திரச்சங்கு". இதன் தலையங்கம் படிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம் என்பவர். கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1905இல் பொருள...
சிவகவி (1943)

சிவகவி (1943)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா)பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு. பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது. என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில...