Shadow

சினிமா

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. நாஞ்சில்நாடு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி. 1956இல் மொழி வாரி மாகாணங்கள் அமைவது வரை திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மலையாளத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த அந்த நாஞ்சில் நாட்டுப் பகுதி தமிழுக்கு அளித்த கொடை மிக அதிகம். தசாவதானி செங்குத்தம்பி பாவலர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ம.அரங்கநாதன், பொன்னீலன், தமிழவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, தோப்பில் முகம்மது மீரான் போன்ற மிகச் சிறந்த இலக்கிய வாதிகளை தமிழுக்குத் தந்திருக்கிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிகச் சிறந்த கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக் குட்டி' 'தம்பியே ...
சவரகத்தியின் இடையில்

சவரகத்தியின் இடையில்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, 'சவரகத்தி' எனும் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தைப் பற்றி அறிவித்துள்ளார். ‘ட்ரான்ஸ் வேர்ல்ட் டெலி கம்யூனிகேஷன்ஸ் (Trans World Telecommunications)’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. 'சவரகத்தி' படத்தின் இடைவிடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குநர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்....
வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த படம். அவர் தனது மாஸ்டர் பீஸை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு, நான் வாயடைத்துப் போனேன். அவர் திரைக்கதையைக் கையாண்ட விதத்திலும், கதாபாத்திரத் தேர்விலும் மாயம் செய்துள்ளார். அனைவரும் உண்மையிலேயே படத்தில் வாழ்ந்துள்ளனர். தினேஷ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்துக்கும், மொத்த குழுவிற்கும் பெரிய வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து வகையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்திய சினிமாவின் அடையாளமாகவே ஒட்டுமொத்த உலகிற்கும் விளங்கப் போகிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு பெருமையான தருணமாக இது அமையப் போகிறது. படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே பார்க்க முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய படம். திரையரங்குகளில் வெளியானதும், தவறவிடாமல் அனைவரும் பாருங்கள். மனதைக் கனக்க வைக்கும் அனு...
எவரெஸ்ட் 3டி விமர்சனம்

எவரெஸ்ட் 3டி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Everest 3D) 1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிரட்டலான படம். ‘அட்வென்ட்சர் கன்சல்டன்ட்ஸ் (Adventure Consultants)’ என தான் தொடங்கிய நியூசிலாந்து ட்ரெக்கிங் நிறுவனத்தின் சார்பாக, எவரெஸ்ட் சிகரமேற ராப் ஹால் எட்டுப் பேரை அழைத்துச் செல்கிறார். அந்தக் குழு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றத்தை முப்பரிமாணத்தில் காட்டி முதுகு தண்டைச் சில்லிட வைத்துள்ளார் இயக்குநர் பல்டசர் கொர்மக்குர். குழுவை வழிநடத்தும் தலைவர் ராப் ஹாலாக ஜேஸன் க்ளார்க் நடித்துள்ளார். இவர், போன வருடம் வெளிவந்த ‘டான் ஆஃப் த ப்ளேனட் ஆஃப் த ஏப்ஸ்’ படத்தில் நாயகன் சீஸரைக் கண்டு வியக்கும் மால்கமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரையும் எவரெஸ்ட் சிகரத்திலேற்றி, அவர்கள் மகிழ்வதைக் கண்டு ரசிக்கும் பொறுப்பான வழிகாட்டியாக உள்ளார். குழுவில் இருந்து, மிகவும் பின் தங்...
கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நிரூபித்த ஓர் இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு. கலைஞர் மு. கருணாநிதி, கதை வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிக அளவில் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்கிற எஸ்.எம்.சுப்ரமணியம். 1936இல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த 'சந்திரமோகனா' என்னும் திரைப்படத்தில் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபாலாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன்பிறகு 1937இல் மைனர் ராஜாமணி என்கிற படத்தில் ஒரு நல்ல வேடம். சிங்காரப் பப்புச் செட்டியார். தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், நந்தனார் (ஜெமினி) பக்த நாரதர், தாசி அபரஞ்ச...
பாயும் புலி விமர்சனம்

பாயும் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை அதிகாரி ஒருவர், எப்படியெல்லாம் பாய்ந்து தன் கடமையைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அசிஸ்டெண்ட் கமிஷ்ணர் ஜெயசீலனாக விஷால். ஒரு எஸ்.ஐ.-இடம் தனது செயலுக்கான நியாயத்தை மிகவும் பொறுமையுடன் விளக்கும் நல்லவர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். படத்திலுள்ள அனைத்து வில்லன்களும் எத்தனை பேரைக் கொல்கிறார்களோ, அதை விட அதிகமான நபர்களை இவர் கொல்கிறார். சாரி, என்கவுண்ட்டர் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனராம். சாலையைக் கடக்கப் பயப்படும் செளம்யாவாக காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கவர்ந்தது போல் கவரவில்லை. படத்தின் முதல் பாதியைக் காப்பாற்றுவது, படத்தோடு சம்பந்தமில்லாத காமெடி ட்ராக்கில் வரும், மனைவிக்குப் பயந்த கான்ஸ்டபிள் சூரிதான். இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துகிறார் தொழிலதிபர் செல்வமாக வரும் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவின் தவிர்...
திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

சினிமா, திரைத் துளி
“12 வருடம் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தேன். ரீமேக் படம் மட்டுமே எடுக்கிறேன் எனச் சொன்னாங்க. நான் நிஜமாவே படம் எடுக்கிறேனா? நான் இயகுநர்தானா என்றெல்லாம் சந்தேகமாக இருந்தது” என்று மிகவும் கலங்கிப் போயிருந்ததாகச் சொன்னார் மோகன் ராஜா. “எங்கண்ணனோட திறமை என்னென்னு எங்க குடும்பத்தினருக்கே மட்டுமே தெரிந்த விஷயம் இப்ப அனைவருக்கும் தெரிந்திருக்கு. இந்த வெற்றி எனக்கு ஆச்சரியம் தரலை. அதற்காக அவர் எப்படிலாம் உழைச்சாருன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும். இந்தக் கதை காம்ப்ளக்ஸ்ன்னா மைன்ட் கேம். நான், எங்கண்ணன் என்பதால் ஒத்துக்கிட்டேன். ஆனா கணேஷ் வெங்கட்ராம், ராகுல், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண் எல்லாம் எங்கண்ணனை நம்பி வந்தாங்க. இப்ப எங்க குடும்பத்தில் ஒருத்தராகிட்டாங்க. தம்பி ராமையா சார் கலக்கிட்டார். அவர் நடிச்ச கேரக்டருக்கு ரெஃபரன்ஸே கிடையாது. ஆனா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிட்டார். சுரேஷ் சார், பாலா சார் ...
சகோதரர்களின் ஜெயம்

சகோதரர்களின் ஜெயம்

சினிமா, திரைத் துளி
தனி ஒருவன் ஈட்டிய வெற்றியில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர் ஜெயம் சகோதரர்கள். தனி ஒருவனின் வெற்றிக்கு முன்பே, ஜெயம் ராஜா தன் பெயரை மோகன் ராஜா என மாற்றிக் கொண்டார். இப்போது, தனி ஒருவனின் வெற்றிக்குப் பின்பு, ஜெயம் ரவியும் தன் பெயரை ‘தனி ஒருவன் ரவி’ என மாற்றிக் கொள்வாரா என்ற கேள்விக்கு, “ஜெயம் என்பது என் விசிட்டிங் கார்ட். எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கடைசி வரை நான் ஜெயம் ரவிதான். ஆனால் தனி ஒருவனுக்கு என் நெஞ்சில் இடம் கொடுத்துள்ளேன். தனி ஒருவன் - என் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட முத்திரை போன்றது” என்றார் ஜெயம் ரவி. “மோகன் ராஜா என நான் பெயர் மாத்தியதற்கு நிறைய பேர் திட்டினாங்க. ஜெயம் ராஜா என்ற ப்ராண்ட் நேமை எப்படி நீங்க மாத்தலாம்னு கேட்டாங்க. எனக்குள்ள சினிமாவைத் திணிச்சது என் அப்பா. அவருக்கான ட்ரிப்யூட்தான் இந்தப் படம். இந்தப் படத்தில் அவர் பெயர் வ்ர்ணும்னு நினைச்சேன். ...
பாரதிதாசன்

பாரதிதாசன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம். இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார். பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார். இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்கிற கவிதை மிகவும் பிரபலமானது. 1937இல் முதன் முதலாக 'பாலாமணி' என்கிற படத்திற்குப் பாடல்கள் இயற்றினார். பிறகு 1940இல் 'காளமேகம்' என்கிற படத்தின் வசனம் - பாடல்கள் இவரால் எழுதப்பட்டது. எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத...
உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்

உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> தீபக் பரமேஷ் >> ஜாக்குலின் பிரகாஷ் >> குணாலன் மோகன் >> மோர்ணா அனிதா ரெட்டி >> 'மைம்' கோபிதொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு நிறுவனம் – ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் >> தயாரிப்பு - ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின் >> இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம் >> கதை – M.R.K. & ஸ்ரீநாத் ராமலிங்கம் >> ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி >> படத்தொகுப்பு – ஹரி ஹரன் >> இசை – சிவ சரவணன் >> கலை - C.H.மோகன்ஜி...
சீரியஸான ஹாரர் படம்

சீரியஸான ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
“இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, சிங்கப்பூரில் வேலை செய்து, இப்போ சென்னையில் படமெடுத்துள்ளார் ஸ்ரீநாத். இப்ப வர படமெல்லாம் காமெடி பேய்ப்படமாகத்தான் இருக்கு. ஆனா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ சீரியஸான ஹாரர் படம். இவர்ட்ட இருந்து இப்படியொரு படம் எதிர்பார்க்கவே இல்லை” என்றார் பிரபு வெங்கட், மேலும், “நேத்து நானும், ரம்யாவும், என் பொண்ணு ஷிவானியும் படம் பார்த்தோம். காதை அடிக்கடி பயத்தில் மூடிக்கிட்டாங்க. ஹாரர் படத்துக்கு முக்கியமானது இசை. சிவசரவணன் கலக்கியுள்ளார்” என்றார் வெங்கட் பிரபு. படத்தொகுப்பாளர் ஹரிஹரன், இசையமைப்பாளர் சிவரசவணன், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என பலருக்கும் இதுவே முதல் படம். ஷண்முகசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்தை, ஆரா பிலிம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார். தொடர்ந்து நல்ல படங்களை வெளியிடவும் தயாராகயிருப்பதாக அறிவித்தார். விநாயக சதுர்த்திக்கு படம் வெளிவர உள்ளதென்ற மகிழ்ச்சி...
அதிபர் விமர்சனம்

அதிபர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்க...