32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 233 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 233)
துவங்கியது ‘பாம்பு சட்டை’ சினிமா

துவங்கியது ‘பாம்பு சட்டை’

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் […]

11/02/2015 Dinesh R
பொங்கி எழு மனோகரா விமர்சனம் சினிமா

பொங்கி எழு மனோகரா விமர்சனம்

அம்மா செண்ட்டிமென்ட் கொண்டு படம் வந்து நாளாகும் குறையைத் தீர்க்க வந்துள்ள படம். சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் தன் சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிகிறான். மீண்டும் தனது அன்னையுடன் இணைகிறானா இல்லையா என்பதுதான் கதை. சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் கதையும் திரைக்கதையும். திரைக்கதையிலேனும் சுவாரசியப்படுத்தல்களை கவனம் செலுத்தியிருக்கலாம். எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் ரங்கசாமி. மனோகரனாக, சுண்டாட்டம் படத்தில் நாயகன் இர்ஃபான் நடித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்குப் பயப்படுவது, […]

06/02/2015 Dinesh R
என்னை அறிந்தால்… விமர்சனம் சினிமா

என்னை அறிந்தால்… விமர்சனம்

அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. […]

06/02/2015 Dinesh R
நட்பு சூழ் கோலிவுட் சினிமா

நட்பு சூழ் கோலிவுட்

இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் நண்பனுக்காக தயாரிப்பாளர்களாகப் பரிணாமிப்பவர்களின் எண்ணிக்கை கோலிவுட்டில் கணிசமான உயர்ந்து வருகிறது. சிநேகாவின் காதலர்கள், அமர காவியம், கப்பல் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்பொழுது அதில் பட்ற படமும் அடக்கமும். பட்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜெயந்தன் மற்றும் தயாரிப்பாளர் காந்தி குமாரின் நட்பைப் பற்றி சிலாகித்த இயக்குநர் பாக்கியராஜ் தன் அனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார். “நான் சேலத்துக்கு குடி பெயரந்த போது, அங்க கேரம்போர்ட் விளையாடப் போவேன். நான் […]

03/02/2015 Dinesh R
இசை விமர்சனம் சினிமா

இசை விமர்சனம்

தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது. அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் […]

03/02/2015 Dinesh R
யுரேகாவின் தொப்பி சினிமா

யுரேகாவின் தொப்பி

மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார்.  நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் […]

02/02/2015 Dinesh R
அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன் சினிமா

அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

விவேக்கின் கால்ஷீட் கிடைக்காததால்தான் வி.டி.வி.கணேஷை விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கெளதம் மேனன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஆனால் எப்போ கெளதம் என்னிடம் கேட்டார்? ஒருவேளை நான் மறந்திருப்பேன்’ எனச் சமாளித்தார் விவேக். மின்னலே இயக்கிய கெளதம்க்கும், என்னை அறிந்தால் அறிந்தால் கெதம்க்கும் என்ன வித்தியாசமெனக் கேட்ட பொழுது, “மின்னலே கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர். என்னை அறிந்தால் கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; […]

31/01/2015 Dinesh R
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – படக்குழுவினர் சினிமா

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – படக்குழுவினர்

நடிகர்கள்: >> பாபி சிம்ஹா >> லிங்கா >> பிரபஞ்ஜெயன். DN >> சரண்யா >> பனிமலர் >> நிஷா >> அல்போன்ஸ் புத்ரன் >> கார்த்திக IB >> வத்ஸன் வீரமணி >> செல்வம் >> மகுடபதி >> விஜயலஷ்மி >> சுகன்யா >> ஜவஹர் >> சார்லஸ் சுரேஷ் >> மாஸ்டர் ஸ்ரீராம் >> ரவி ஸ்ரீநிவாசன் பணிக்குழு: >> எழுத்து, இயக்கம், தயாரிப்பு – M. மருதுபாண்டியன் >> தயாரிப்பு நிறுவனம் – […]

30/01/2015 Dinesh R
இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன் சினிமா

இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன்

“எங்க ஊர்ல படம் பார்த்துட்டு வருபவர்களிடம், படமெப்படின்னு கேட்பேன். அவங்க நல்ல படம் எனச் சொன்னால், படத்தின் எத்தனை சண்டைக் காட்சி எத்தனை கற்பழிப்புக் காட்சின்னு கேட்பேன். அவங்களும் நாலு சண்டைக் காட்சி, ரெண்டு கற்பழிப்புக் காட்சி என கணக்கு சொல்வாங்க. இந்த மாதிரி படம்லாம் நான் ரசிச்சுப் பார்த்துட்டு இருந்தேன். அப்போ நான் பதினொன்னாவது படிக்கிறப்ப மண் வாசனைன்னு ஒரு படம் பார்த்தேன். ஜெயமோகன் சார் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். வியாபார நோக்கத்தோடு எழுதப்படுற எழுத்த மட்டும் […]

30/01/2015 Dinesh R
துறுதுறு மலபார் அழகி நேஹா சினிமா

துறுதுறு மலபார் அழகி நேஹா

ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியைச் சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரைப் புகழ் தீபக் நாயகனாக நடிக்கிறார். “மாடல், விளம்பரப் படம் என நடித்துக் கொண்டிருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்துப் […]

27/01/2015 Dinesh R
நல்லா இருந்த ஊரின் டீச்சர் சினிமா

நல்லா இருந்த ஊரின் டீச்சர்

“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நான் ஒரு கிராமத்துச் சாயலில் ஒரு கதாபாத்திரம். நான் இவ்வகையான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நெடு நாளாய்க் காத்திருந்தேன். இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா இந்தக் கதையைக் கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார் ரம்யா நம்பீசன். […]

27/01/2015 Dinesh R
ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம் சினிமா

ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம்

ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் A. வெங்கடேஷ், ரொம்ப நல்லவன்டா நீ என்ற காமெடி த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் சர்வஜித் நடிக்கிறார். அங்காடி தெரு படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காமெடி த்ரில்லராக தயாராகி வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் […]

23/01/2015 Dinesh R
தொட்டால் தொடரும் விமர்சனம் சினிமா

தொட்டால் தொடரும் விமர்சனம்

நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை. காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் […]

23/01/2015 Dinesh R
மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு சினிமா

மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு

சிம்புவின் படம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இது சிம்புவால் மட்டுமே இயலும். இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பைத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கும் எஸ் டி ஆரின் மூன்று படங்கள் வெளிவர உள்ளது. 2015, எஸ் டி ஆருக்கு அதிர்ஷ்டமான வருடமான அமையவுள்ளது. ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று இருக்கிறது. […]

22/01/2015 Dinesh R
அஜித் சார்ன்னா பாசிடிவ் சினிமா

அஜித் சார்ன்னா பாசிடிவ்

எதிர்பாராத விதமாக அஜித் படத்தில் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார் விக்னேஷ் சிவன். “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடும். இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுதச் சொன்னவுடன் தலை, கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதிக் கொடுத்தேன். பின்னர், ஹாரிஸ் சார் […]

19/01/2015 Dinesh R