32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 234 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 234)
தொடங்கியது டார்லிங் இன்னிங்ஸ் சினிமா

தொடங்கியது டார்லிங் இன்னிங்ஸ்

இந்த மாதம் 22 ஆம் தேதி துவங்க உள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா எனும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கயல் படத்தின் ஆனந்தியும் நடிக்கவுள்ளனர். டமால் டுமீல் படத்தைத் தயாரித்த கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார், தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். பல்வேறு இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்த ஆதிக் ரவிsசந்திரன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். பல்வேறு […]

19/01/2015 Dinesh R
வானவில் வாழ்க்கை ஜனனி சினிமா

வானவில் வாழ்க்கை ஜனனி

“எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 13 வருடமாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள் பாடியுள்ளேன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்குப் பாடவும் நடிக்கவும் தெரிந்தவர்களே மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜேம்ஸ் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதி கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை. நிறைய பாட்டு வாங்கி நிறைய ஆட்டம் ஆடி வாங்கிய […]

18/01/2015 Dinesh R
அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர் சினிமா

அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

பார்வதி நாயர். அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தகர். இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர் ஆவர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிப்பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் […]

17/01/2015 Dinesh R
இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம் சினிமா

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘உப்பு கருவாடு’ ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். […]

16/01/2015 Dinesh R
தி தியரி ஆஃப் எவரிதிங் அயல் சினிமா

தி தியரி ஆஃப் எவரிதிங்

The THEORY of EVERYTHING ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க […]

15/01/2015 Dinesh R
உழுத வயலின் சேறு வாசனை சினிமா

உழுத வயலின் சேறு வாசனை

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியைத் துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிக் கொண்டே போகலாம். ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல் தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்துக் கூறும் வரிகளைக் கொண்டுள்ளது. “அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில் வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, […]

15/01/2015 Dinesh R
ஐ விமர்சனம் சினிமா

ஐ விமர்சனம்

இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் […]

14/01/2015 Dinesh R
வளரும் கலைஞர்கள்… சினிமா

வளரும் கலைஞர்கள்…

கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. கோச்சடையான் – நூற்றாண்டைக் கொண்டாடும் […]

03/01/2015 Dinesh R
இளவரசி ஹன்சிகா! சினிமா

இளவரசி ஹன்சிகா!

தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களின் மனதைக் கவர்ந்திருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்றவர் ஹன்சிகா. அவர் பிறக்கப் போகும் 2015 ஆம் ஆண்டை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் தனக்கு மிகவும் பொன்மயமாக அமையும் என்ற அவரது நம்பிக்கையே மகிழ்ச்சித் திளைப்பிற்குக் காரணம். அரண்மனை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெற்றுத் தந்த விசாலமான இடத்தை, இந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் “மீகாமன்” படம் தக்க வைக்க […]

17/12/2014 Dinesh R
சிக்ஸ்-பேக் அருண் விஜய் சினிமா

சிக்ஸ்-பேக் அருண் விஜய்

2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கும் என்னை அறிந்தால்.. படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் அருண் விஜய். கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார் அருண் விஜய். அப்படி உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவதை தான் மிகவும் விரும்புவதாக கூறும் அருண் விஜய், “ஷூட்டிங் நாட்களிலும், இரவு ஜிம்க்கு வந்து என் பெர்ஸனல் ட்ரெயினர் ஷிவக்குமாரின் உதவியுடன் வொர்க்-அவுட் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது” என்கிறார்.

13/12/2014 Dinesh R
கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் சினிமா

கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

திக்கெட்டும் பயணித்து, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் பல விருதுகளை அள்ளி வருகிறது. ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்பட விழாக்களைப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழு சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது. இந்த வருடம் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது […]

13/12/2014 Dinesh R
ஹீரோவாகும் சிம்ஹா! சினிமா

ஹீரோவாகும் சிம்ஹா!

இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை. “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் […]

13/12/2014 Dinesh R
லிங்கா விமர்சனம் சினிமா

லிங்கா விமர்சனம்

பேரன் லிங்கா திருடன்; அவனது தாத்தா லிங்கேஸ்வரனோ மஹாராஜா. மஹாராஜாவின் பேரன் ஏன் திருடனானான் என்பதுதான் கதை. கன்னக்கதுப்புகளில் வயோதிகம் எட்டிப் பார்த்தாலும், ரஜினியின் சின்ன கண்களின் ஷார்ப்னெஸும், துள்ளலான உடல்மொழியும் ஈர்க்கவே செய்கிறது. அதனால்தான் மூன்று மணி நேரம் திரையரங்கில் அமர முடிகிறது. ரஜினிக்கு நிச்சய வெற்றிய அளிக்கும் இரு வேடங்களில் வருகிறார். ஃபிளாஷ்-பேக்கில் பணக்காரராகவும், நடப்பில் சாமானியாகவும் வருகிறார். ஆனால் சாமானியன் திருடனாக உள்ளான் இப்படத்தில். ‘சூது கவ்வும்’ காலத்துக்கு ஈடு கொடுக்க இருக்குமோ […]

13/12/2014 Dinesh R
நண்பேன்டா ரஜினி!! சினிமா

நண்பேன்டா ரஜினி!!

‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே! மேலும் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படப்பிடிப்பின்போது சந்தித்துள்ளார். அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருக்கும் உயிரே.. உயிரே.. படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்துள்ளார். படத்தை வெகுவாகப் பாரட்டிய சூப்பர் ஸ்டார் ‘உயிரே.. […]

12/12/2014 Dinesh R