32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 248 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 248)
மனதில் மாயம் செய்தாய் சினிமா

மனதில் மாயம் செய்தாய்

தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ  அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் “மனதில் மாயம் செய்தாய் (M M S)”. ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், […]

13/11/2013 admin
தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா சினிமா

தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து,  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியைக்  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்ஷரா..  அந்தக் காட்சியைப் பற்றியும் , ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார். ‘நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்துக் கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்தத் […]

12/11/2013 admin
பொல்லாதவனாக கணேஷ் வெங்கட்ராமன் சினிமா

பொல்லாதவனாக கணேஷ் வெங்கட்ராமன்

ஹிந்தியில் முதன்முறையாக,  “கன்ஸ் ஆஃப் பெனாரஸ் (Guns of Benares)” என்னும் படத்தில் அறிமுகமாகிறார் கணேஷ் வெங்கட்ராம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படம் தான் ஹிந்தியில், ‘கன்ஸ் ஆஃப் பெனாரஸ்’ என மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. டேனியல் பாலாஜி நடித்த பாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். “இயக்குநர் சேகர் சூரி எனது கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லும் பொழுது எனக்கும் முழுவதும் பிடித்து விட்டது. இதற்கு முன் கேங்ஸ்டராக நடித்ததில்லை.  முழுப் படமும் பெனாரசில் தான் எடுக்கப்படவுள்ளது. […]

12/11/2013 admin
ஜெய் “ஆந்திரா மெஸ்” சினிமா

ஜெய் “ஆந்திரா மெஸ்”

தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும். ரசிகர்களைக் கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டியுள்ள படங்கள் உடனே பிரபலமாகாவது  வித்தியாசமான தலைப்புகளைப் புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.  ‘ஷோ போட் (Show boat)’  ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்  படத்தின் தலைப்பு ‘ஆந்திரா மெஸ்‘.  சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது […]

07/11/2013 admin
“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண் சினிமா

“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த  S .P.சரணின்  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் ‘திருடன் போலீஸ்‘. திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர்    எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது […]

07/11/2013 admin
இல்ல ஆனாலும் இருக்கு சினிமா

இல்ல ஆனாலும் இருக்கு

மனம் கவரும், இளமை தளும்பும், தொழில் நுட்பத்தில் முத்திரை பதிக்கும் தரமான படங்களை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம்,  விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம்  ஆகிய படங்களை  தொடர்ந்து தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் ‘யான்’ படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தலைப்பில் மட்டுமின்றி படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க முனையும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு  ‘இல்ல ஆனாலும் […]

06/11/2013 admin
ஆரம்பம் விமர்சனம் சினிமா

ஆரம்பம் விமர்சனம்

அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை  ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும். ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை. அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக […]

31/10/2013 admin
சுட்ட கதை விமர்சனம் சினிமா

சுட்ட கதை விமர்சனம்

சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம். ‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை. கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் […]

26/10/2013 admin
ரகளபுரம் விமர்சனம் சினிமா

ரகளபுரம் விமர்சனம்

ரகளபுரம் – கருணாஸ் மிக சிரமப்பட்டு தயாரித்து நடித்துள்ள படம்.  பயந்தாங்கொள்ளி வேலுவிற்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. பிறகு என்னாகிறது என்பது தான் கதை. படத்தின் கதாநாயகன் தொடைநடுங்கி வேலுவாக கருணாஸ். தன்னை ‘கதையின் நாயகன்’ என்றே சொல்லிக் கொள்கிறார். கதாபாத்திரத்திற்கு அவர் முகம் பொருந்துகிறது. நன்றாக நடனம் ஆடுகிறார். கதைப்படி, துப்பறியும் சாம்பு பாணியில் இன்ஸ்பெக்டராகி விடுகிறார். ஆனால் அதற்கான சுவாரசியமும் திருப்பமும் போதிய அளவு திரைக்கதையில் இல்லை. மேலும் கருணாஸ் நாயகன் என்றால் நகைச்சுவைப் […]

20/10/2013 admin
உலகநாயகனைச் சந்தித்த அட்லி சினிமா

உலகநாயகனைச் சந்தித்த அட்லி

இயக்குநர் அட்லி தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி‘ திரைப்படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே  நிருபனம் செய்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குநருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த  இளம்  இயக்குநர் அவர் மீது  உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி. ‘ராஜா […]

19/10/2013 admin
வருகிறது கொரியன் ‘கொரில்லா’ சினிமா

வருகிறது கொரியன் ‘கொரில்லா’

தென் கொரியாவும் சீனாவும் இணைந்து தயாரிக்கும் படம், மிஸ்டர் கோ (Mr. Go). ஆசியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ்டர் கோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். நவம்பர் 14 அன்று இப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் 3டி-யில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வெளியாகும் முதல் கொரியப்படம் ‘மிஸ்டர் கோ’ என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்பால் விளையாடும் லிங் லிங் […]

14/10/2013 admin
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின் சினிமா

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

விளம்பரங்களுக்குப் பணம் இல்லாமையாலும், பெரிய பேனர்களின் விளம்பரங்களுடன் போட்டியிட முடியாததாலும், இயக்குநர் மிஷ்கின் சாலையில் இறங்கி படத்தின்  போஸ்டரை அவரே ஒட்டி வருகிறார்.                 “தோள் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,                 இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,                 கை கொடுத்த விநியோகிஸ்தர்களுக்கும்,           […]

03/10/2013 admin
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம் சினிமா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார். பாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.   சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் […]

02/10/2013 admin
முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி! சினிமா

முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும்  தொடர் வெற்றி  ‘ராஜா ராணி‘. அக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த ‘ராஜா ராணி’ முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து […]

01/10/2013 admin
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம் சினிமா

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

ஏராளமான ஆச்சரியங்கள். அதில் பேராச்சரியமாக, ‘டாஸ்மாக்’ பாடலில்லாமல் வந்திருக்கும் மிஷ்கினின் படமிது. ஏன் மருந்துக்குக் கூட படத்தில் ஒரு பாடல் இல்லை. அதனால் படத்தில் கதாநாயகியும் இல்லை. படத்தைச் செலுத்துவது இளையராஜாவின் பின்னணி இசை. படக் கதையின் கருவிற்கு நம்மை தயார்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகாமல் பார்த்துக் கொள்கிறார் இசைஞானி. அவரை கெளரவப்படுத்தும் வகையில் ‘முன்னணி இசை கோர்ப்பு’ எனப் படம் தொடங்கும் முன் எழுத்துகள் வருகின்றன. இரவில் நடக்கின்ற கதை. ஒரு படம் முழுவதும் பார்வையாளரை […]

29/09/2013 admin