32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 249 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 249)
ராஜா ராணி விமர்சனம் சினிமா

ராஜா ராணி விமர்சனம்

எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லியின் முதல் படம். எனினும் பெரிய படங்களுக்கு ஒப்பான விளம்பரத்தினை தயாரிப்புக் குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்விக்கு பின்பும் காதலும்/வாழ்க்கையும் உண்டு என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை. ஏர்வாய்ஸ் கம்பெனியின் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் டெலிகாலர் சூர்யாவாக ஜெய். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படத்தில் அதே போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். […]

27/09/2013 admin
தங்க மீன்கள் விமர்சனம் சினிமா

தங்க மீன்கள் விமர்சனம்

சிறுகதை ஒன்றினைக் கவிதையாக்கிக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் ராம். ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள் தான். செல்லம்மாவிற்கும் அவளது தந்தை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை.  செல்லம்மாவாக சாதனா. பெரிய மனித தோரணையில் ஏற்ற இரக்கத்துடன் பேசும் திரைப்படங்களுக்கே உரித்தான குழந்தை. ‘அவர் நல்ல அப்பா. ஏமாத்த மாட்டார்’ என்னும் பொழுது ரசிக்க வைக்கிறார். வசனமற்ற காட்சிகளில் முக்கியமாக ‘ஆனந்த யாழ்’, ‘ஃபர்ஸ்ட் லாஸ்ட்’ […]

20/09/2013 admin
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி சினிமா

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

‘விண்ணைத் தாண்டி வருவாயா‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் […]

14/09/2013 admin
மூடர்கூடம் விமர்சனம் சினிமா

மூடர்கூடம் விமர்சனம்

உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே!! அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன். சிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை. வெள்ளையாக ராஜாஜி. படத்தில் நாயகன் என தனித்து யாருமில்லை எனினும், ராஜாஸ் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறான். அழகான மான்டேஜ் காட்சிகளுடன் டூயட் சாங் ஒன்றும் உள்ளது. ஆக படத்தின் […]

13/09/2013 admin
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம் சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர்.  சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை. போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் […]

09/09/2013 admin
“அம்மா அம்மம்மா” – சரண்யா சினிமா

“அம்மா அம்மம்மா” – சரண்யா

ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். “நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்தப் படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி. ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச்  சென்றிருந்தபோது […]

04/09/2013 admin
“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி சினிமா

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ‘ ஷிவானி’  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி,  “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர  படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே.  நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும்.  நான் இயல்பாகவே பயந்த பெண் தான். […]

01/09/2013 admin
தலைவா விமர்சனம் சினிமா

தலைவா விமர்சனம்

தலைவா – எதிர்ப்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமான தலைப்பு. இயக்குநர் விஜயும் நடிகர் விஜயும் இணையும் முதல்படம். சற்றே பெரிய படம்.  காதலியை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க இந்தியா வருகிறான் விஸ்வா. தொழிலதிபர் என நினைத்துக் கொண்டிருந்த தந்தை, மக்கள் கூட்டம் ஒன்றின் தலைவர் எனத் தெரிய வருகிறது. தன் கண் முன்பே இறக்கும் தந்தையின் மறைவிற்குப் பின், விஸ்வாவின் நிலைப்பாடு என்ன என்பது தான் கதை. டான்ஸ் மாஸ்டர் விஸ்வாவாக விஜய். இளமை துள்ளலுடன் அமைதியாக […]

21/08/2013 admin
ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம் சினிமா

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

101 நிமிடப்படம்.   கல்லூரி மாணவர்களான கார்த்திக்கும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். கார்த்திகுடனான நெருக்கத்தால் ஸ்வேதா கருவுறுகிறாள். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.    கார்த்திக்காக நடித்துள்ளவர் சந்தோஷ் ரமேஷ். சில காட்சிகளில் இளித்து பயமுறுத்துகிறார். எனினும் பொறுப்பற்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளலாம். காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என பேருந்தில் இருந்து விழுகிறார். ஒருவன் உயிரைக் கொடுக்க துணிந்தால், அவன் தன் மீது அதிகமான காதல் […]

16/08/2013 admin
தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ் அயல் சினிமா

தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இரு வாரங்களுக்கு முன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரபல முத்து காமிக்ஸ் நாயகனான இரும்புக்கை மாயாவியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி கொண்டுள்ளனர். படத்தில் எந்த மாயாவியும் இல்லை. ஜங்கள் வில்லேஜ் என்ற கிராமம் பல போராளி குழுக்களின் தலைமையகம். அவ்வூரின் வழியாக கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, லயன் குழுவின் தலைவர் கோல்ட் லயனிடம் ஒப்படைக்கிறார் அப்பிராந்தியந்தின் கவர்னர். […]

14/08/2013 Dinesh R
அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா சினிமா

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ‘ இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் […]

13/08/2013 Dinesh R
ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம் சினிமா

ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும். விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம். அரவிந்தாக பரத். சிக்ஸ்-பேக் கட்டுடலுடன் களம் இறங்கியுள்ளார். நாயகர்கள் ஈர்க்குச்சி போலிருந்தாலே வில்லன்கள் ஆளுக்கொரு மூலையில் […]

12/08/2013 admin
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை இசை விமர்சனம்

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம். படத்தில் மொத்தம் 7 பாடல்கள்.  1. பாடல் – ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் – பபோன், மரியா  வரிகள் – நா.முத்துக்குமார்   பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த […]

08/08/2013 Dinesh R
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா சினிமா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை […]

06/08/2013 Dinesh R
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா சினிமா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. “எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான்.  ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். […]

03/08/2013 Dinesh R