32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 252 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 252)
நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம் சினிமா

நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன். ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது. நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் […]

11/05/2013 admin
சூது கவ்வும் விமர்சனம் சினிமா

சூது கவ்வும் விமர்சனம்

படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் ‘சூது கவ்வும்’ குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 […]

04/05/2013 admin
மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம் சினிமா

மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம். கண்ணுக்கு குளிர்ச்சியாய் மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். ‘உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?” என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், ‘அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க’ என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக […]

03/05/2013 admin
எதிர்நீச்சல் விமர்சனம் சினிமா

எதிர்நீச்சல் விமர்சனம்

உங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் படத்தின் நாயகனுக்கு அது தான் பிரச்சனை. அவனது பெயருடன் எதிர்நீச்சல் போட்ட வண்ணம் உள்ளான். நாயகன் ஹரீஷாக சிவகார்த்திகேயன். இவரது பூர்வாசிரம பெயர் தான் குஞ்சிதபாதம். அசட்டுத்தனமாய் சிரித்தபடி முகத்தை வைத்திருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். விஜய் டி.வி.யில் பெற்ற அடையாளங்களை, 3 படத்திற்குப் பிறகு முடிந்த மட்டும் உதறியுள்ளார். நாயகி கீதா மிஸ்ஸாக ப்ரியா ஆனந்த். வாமனன், புகைப்படம், 180 […]

02/05/2013 admin
நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம் சினிமா

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

தன்னை போல் இருக்கும் ராஜாவைத் தேடி, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சென்னை புறப்படுகிறான் ஜீவா. ஜீவா ராஜாவை சந்திக்கிறானா இல்லையா என்பதற்கு பதிலுட்ன் படம் நிறைவேறுகிறது. நாயகனாக நகுல். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படம் மீண்டும் வந்துள்ளது. அவரது முதற்படமான ‘பாய்ஸ்’ வந்து பத்து வருடங்கள் ஆகிறது. எனினும் அவர் கொஞ்சி பேசும் தமிழ் மட்டும் இன்னும் மாறவே இல்லை. இந்தப் படத்தில் கிக்-பாக்சிங் வித்தகராக, திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட்டில் ரசிக்க வைக்கிறார். ரேனிகுண்டா […]

28/04/2013 admin
யாருடா மகேஷ் விமர்சனம் சினிமா

யாருடா மகேஷ் விமர்சனம்

படத்தின் ட்ரெயிலர் தான் படத்தின் மூளதனமே!! (‘ல’ குறில் அல்ல நெடிலே!! மூளையின் மழூஉ.) பொறுப்பற்ற ஞாபக மறதிக்காரனான ஷிவா சிந்தியாவைக் காதலிக்கிறான். கல்யாணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு குழந்தையும் பிறந்து விடுகிறது. மகேஷ் என்பவரிடமிருந்து சிந்தியாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. யார் “அந்த” மகேஷ் என்றும், அவனை சிவா கண்டுபிடித்தானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.  இந்தப் படத்தில் வரும் அனைத்தும் “குறியீடுகள்” என்ற வாசகம் எழுத்தாகவும், அதை மேஜர் சுந்தரராஜன் குரலில் படித்தும் காட்டுகின்றனர். […]

27/04/2013 admin
உதயம் விமர்சனம் சினிமா

உதயம் விமர்சனம்

மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது. கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய […]

22/04/2013 admin
2500$ பெறுமானமுள்ள படம் கட்டுரை

2500$ பெறுமானமுள்ள படம்

சேட்டை படத்திற்கு, “ஆபாசம்.. நாராசம்.. கவிச்சி” என ஏகப்பட்ட அர்ச்சனைகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட ‘ஒன்பதுல குரு‘ என சொல்கின்றனர். ஆனால் படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் சேட்டை ஹிந்திப் படமான ‘டெல்லி-பெல்லி’யின் ரீ-மேக். அந்தப் படத்தின் அழகான வசனங்களை எல்லாம் வடிகட்டி மொன்னையான படமாக சேட்டையை எடுத்துள்ளனர். “This girl has given me blow job.. I am 21st century man, I […]

19/04/2013 Dinesh R
சேட்டை விமர்சனம் சினிமா

சேட்டை விமர்சனம்

அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த ‘டெல்லி-பெல்லி’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீ-மேக்.  கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மூன்று பத்திரிகையாளர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை. காமெடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் சந்தானம். மேலும் படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கும் (ஸ்க்ரிப்ட்) பொறுப்பேற்கிறார் சந்தானம். பாட்ஷா ரஜினி போல் டையமன்ட்டை ஒப்படைத்து விடாலும் என்ற பிரேம்ஜியின் யோசனைக்கு,  ‘ரஜினி நக்மாவை உஷார் பண்றதுக்காக டையமன்ட்டைக் கொடுத்தார்’ என சிந்தாமல் சிதறாமல் கவுன்ட்டர் வசனம் பேசி.. எப்பொழுதும் போல் படத்தின் […]

06/04/2013 admin
சென்னையில் ஒரு நாள் விமர்சனம் சினிமா

சென்னையில் ஒரு நாள் விமர்சனம்

ட்ராஃபிக் என்ற மலையாளப் படத்தின் அழகான தமிழ் ரீ-மேக். ஓர் உயிரைக் காப்பாற்ற ஒன்றரை மணி நேரத்தில் 170 கி.மீ. தரை வழியாக பயணித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தப் பயணம் வெற்றிப் பெற்றதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. ட்ராஃபிக் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியாக சேரன். லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட அவமானத்தில் இருந்து மீள ஒரு சாகசத்திற்கு தயாராகும் நல்லவர். எதையோ இழந்தாற் போலவே முகத்தை வைத்துள்ளார். பயணத்தில் வெற்றியடைந்த பின்பும் கூட அவருக்கு அகமும், […]

02/04/2013 admin
கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம் சினிமா

கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம்

தனது முதல் மற்றும் மூன்றாவது கதாநாயகனுடன் இணைந்து தனது நான்காவது படத்தைப் படைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். கேசவனும், பட்டை முருகனும் இணைப்பிரியா நண்பர்கள். வேலையும் பொறுப்பும் அற்றவர்கள். எங்கே காதலித்தால் நட்பு பிரிந்து விடுமோ என காதலிக்காத உத்தமர்கள். ஆனால் விதியாகப்பட்டது வலியது என்பதால்.. பட்டை முருகன் பாப்பாவைப் பார்க்கிறான்; கேசவன் மித்ர மீனலோஷனியைப் பார்க்கிறான். காதல் வந்தாலும் பொறுப்பு வந்தபாடில்லை. வியர்வை சிந்தாமல் அரசியலில் குதித்து பொறம்போக்கு நிலங்களை தங்கள் போக்கு நிலங்களாக மாற்றிக் கொள்ளும் […]

30/03/2013 admin
பரதேசி விமர்சனம் சினிமா

பரதேசி விமர்சனம்

இன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு. மீண்டும் அதை, முன்பை விட அழுத்தமாக உணர்த்துகிறது ‘பரதேசி’. லட்சணமாய்ப் பார்த்துப் பழகிய நாயகன் முகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு அழுக்குப்படுத்தி விடுவார் பாலா. அத்தகைய நாயகனின் பிம்பம் கொண்டு பார்வையாளர்கள் மீது முதல் தாக்கத்தினை ஏற்படுத்துவார். அந்த அழுக்கு முகம் கொண்ட நாயகர்கள், மற்ற தமிழ்ப்பட நாயகர்களைப் போல சராசரியானவர்களே. உதாரணம் ஷங்கரின் நாயகர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், பேரரசின் நாயகர்களுக்கு ரவுடியிசமும் பெருங்குற்றம். பாலாவின் நாயகர்களுக்குத் தங்களை […]

18/03/2013 admin
வத்திக்குச்சி விமர்சனம் சினிமா

வத்திக்குச்சி விமர்சனம்

“வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில..” ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் அதனால் எவரும் எரியப்படவில்லை என்பது தான் […]

15/03/2013 admin
சுண்டாட்டம் விமர்சனம் சினிமா

சுண்டாட்டம் விமர்சனம்

கேரம்-போர்ட் விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் என்பதை தான் ‘சுண்டாட்டம்’ என்ற தலைப்பு உணர்த்துகிறது. படத்தின் களம் வடச் சென்னை என்பதிலிருந்தே கதையை யூகிக்கலாம். ‘படத்தில்இரண்டு நாயகன்கள். ஒன்று இர்ஃபான். இன்னொன்று மது’ என சொல்லியுள்ளார் இயக்குநர் பிரம்மா G. தேவ். காசி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ள மதுவைநாயகன் என சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முதுகெலும்பு அல்லது மிக முக்கியமான கதாபாத்திரம் இவர் தான். அவரது போதையில் சொருகிய கண்கள், வசனம்உச்சரிக்கும் தொனி, தோல்வியை […]

12/03/2013 admin
ஒன்பதுல குரு விமர்சனம் சினிமா

ஒன்பதுல குரு விமர்சனம்

ஒருவருக்கு ஒன்பதுல குரு இருந்தால் அவர் மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் வெற்றியடையும் என்கிறது ஜோதிடம். நண்பர்கள் நால்வர் ‘பேச்சுலர் பார்ட்டி’க் கொண்டாட பெங்களூரு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டனர் என்பது தான் படத்தின் கதை(). தமிழ்ப்படம் போல முயன்றுள்ளனர். நாயகன் பில்லா டேவிட்டாக வினய். படத்தில் வரும் அவரது நண்பர்களின் பெயரும் அப்படியே. ரங்காவாக சத்யன், கோச்டையானாக அரவிந்த் ஆகாஷ், குருவாக சாம்ஸ்.இவர்கள் நால்வரும் தான் டைட்டில் கேப்ஷனில் வரும் 4 […]

09/03/2013 admin