
நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்
நைட் க்ராலர் என்பது பிரபலமான மார்வல் காமிக்ஸ் பாத்திரம். ஆனால் இப்படத்தின் தலைப்போ, இரவு வேளையில் வேலை செய்யும் சுவாரசியமான மனிதன் ஒருவனைச் சுட்டிக் காட்ட வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பிரபலமாகி வரும் 'சூது கவ்வும்' பாணி திரைப்படமிது!
லூ என்கிற லூயிஸ், தொழில்முறை திருடன் அல்லன். அவனுக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. சாலையில் நடக்கும் ஒரு விபத்தில், எதேச்சையாகப் பார்க்கும் ஒன்றைத் தனக்கான தொழிலாக வரித்துக் கொள்கிறான். அதற்கு மூலதனமாக ஒரு சைக்கிளைத் திருடுகிறான். எதையும் விரைந்து கற்றுக் கொள்ளும் லூ, நினைத்ததை சாதிக்க எதையும் செய்யத் தயாராக உள்ளவன். பெரிதும் திருப்பங்கள் அற்ற கதை எனினும், விறுவிறுப்பான திரைக்கதையாக அதை மாற்றியுள்ளார் அறிமுக இயக்குநர் டேன் கில்ராய்.
ஜேக் க்லைன்ஹால் தனியொருவராக படத்தைச் சுமக்கிறார். அவரது முக பாவனைகளும், வசனம் உச்சரிக்கும் த்வனியும்தான் படத்தின் மீது ஈர்ப்பு உண்டாக...
















