32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 41 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 41)
500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி சினிமா

500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

2019இல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மைத் தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத […]

08/06/2019 Dinesh R
மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் அயல் சினிமா

மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

‘இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில், 2016 இல் வெளிவந்த, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் எனும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. செல்லப் பிராணிகள், தன்னை வளர்க்கும் குடும்பத்தினரோடு எப்படி உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்கின்றன என்பதுதான் இந்தப் பாகத்தின் பிரதான கரு. முதற்பாகத்தை இயக்கிய க்றிஸ் ரெனாட் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வளர்ப்பவருடன் புது பண்ணை வீட்டிற்குச் செல்லும் மேக்ஸும், அவன் நண்பர்களும், தங்கள் பயத்தைக் கடந்து எப்படி ஹீரோவாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. படத்திற்கு அலிக்சான்ட்ரூ […]

06/06/2019 Dinesh R
ஜீவன் நடிக்கும் அசரீரி சினிமா

ஜீவன் நடிக்கும் அசரீரி

அறிமுக இயக்குநர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் ‘அசரீரி’ எனும் அறிவியல் புனைவு படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராணக் குறிப்புகளைக் கூடத் தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன். இயக்குநர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் […]

04/06/2019 Dinesh R
எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019) அயல் சினிமா

எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

Men in Black (1997), Men in Black 2 (2002), Men in Black 3 (2012) ஆகிய மூன்றுமே வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் ஒருங்கே அமையப்பெற்ற வெற்றித் திரைப்படங்கள். அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகமான Men in Black: International, ஜூன் 14 ஆம் ட்ஹேதி அன்று வெளியாகிறது. வில் ஸ்மித்தும், டாமி லீ ஜோன்ஸும் முதல் மூன்று பாகங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில், அவெஞ்சர்ஸ் புகழ் மார்வெல் […]

03/06/2019 Dinesh R
‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு சினிமா

‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள “கடல போட ஒரு பொண்ணு வேணும்” எனும் படம். இப்படத்தை வேகமாக எடுத்து முடித்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, “யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டும். யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார். கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ […]

30/05/2019 Dinesh R
சிம்புதேவனின் ‘கசட தபற’ சினிமா

சிம்புதேவனின் ‘கசட தபற’

‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் பார்த்ததும் அது ஆன்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அதை மறுக்கும் இயக்குநர் சிம்புதேவன், “எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆன்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார். மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது, […]

27/05/2019 Dinesh R
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம் சினிமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்

கனா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவையையும், ரசிக்கக் கூடிய […]

25/05/2019 Dinesh R
மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம் சினிமா

மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்

“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமிக்கிறார் நடிகர் போஸ் வெங்கட். போஸ் வெங்கட், “பிப்ரவரி 18ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை […]

24/05/2019 Dinesh R
‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங் சினிமா

‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்

NGK படத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் அனுபவம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், “செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் […]

24/05/2019 Dinesh R
‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி சினிமா

‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

NGK படத்தில் செல்வராகவனின் பட்டறையில் நடிக்கும் பொழுது கிடைத்த அனுபவத்தைக் குறித்து நடிகை சாய் பல்லவி, “முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே, ‘இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும்’ என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிகக் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாகப் படப்பிடிப்புத் தளங்களில் செல்ஃபோன் […]

24/05/2019 Dinesh R
டெடி: ஆர்யா – சாயிஷா சினிமா

டெடி: ஆர்யா – சாயிஷா

ஆர்யா, சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ‘டெடி’. நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதிய வகை ஆக்ஷன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக […]

23/05/2019 Dinesh R
சிறகு – இசையோடு ஒரு பயணம் சினிமா

சிறகு – இசையோடு ஒரு பயணம்

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’. மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் மூலம் நன்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். […]

19/05/2019 Dinesh R
எமதர்மராஜா யோகி பாபு சினிமா

எமதர்மராஜா யோகி பாபு

தர்மபிரபு படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக ரேகாவும், அப்பாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரேகா, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர், ‘அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரைப் […]

09/05/2019 Dinesh R
நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும் சினிமா

நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்

பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படமான நீயா 2-வில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் உள்ளது. அந்தப் பாம்பைப் பற்றியும், கிராஃபிக்ஸ் பற்றியும் கிராபிஃக்ஸ் நிபுணரான வெங்கடேஷ், “தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்குச் சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரைச் சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் […]

09/05/2019 Dinesh R
ரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம் சினிமா

ரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம்

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணை தொடு’  ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தற்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். ‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் […]

08/05/2019 Dinesh R