32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 40 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 40)
யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் சினிமா

யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

பாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டியுள்ளார். யூஎஸ்ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் ட்ரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன ட்ரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ட்ரெட்ஸ்டோனில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான […]

20/06/2019 Dinesh R
ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர் சினிமா

ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்

இயக்குநர் சுசீந்திரனின் அடுத்து வரவிருக்கும் “ஏஞ்சலினா” திரைப்படம் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான “ஆதலால் காதல் செய்வீர்” இதே மாதிரி வண்ணமயமான, இளமைத்தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது. சமீபத்தில் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் சுசீந்திரன், இந்தப் படத்தை பற்றி கூறும்போது, “ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில் தான் […]

19/06/2019 Dinesh R
சிபிராஜ் வசமானது ‘வால்டர்’ சினிமா

சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படமான ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிபிராஜின் படத்துக்கு, வால்டர் என்ற தலைப்பு கிடைக்க பிரச்சனை நிலவி வந்தது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, சிபிராஜின் படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. தலைப்பின் உரிமையை மாற்றிக் கொடுக்க முழு மனதுடன் சம்மதித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் அளித்துள்ளார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் […]

19/06/2019 Dinesh R
ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும் சினிமா

ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

பார்த்தாலே பரவசம் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் மாதவனும், சிம்ரனும். இந்தப் படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாக மட்டும் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். காதலை பலப்படுத்துவதே இத்தகைய சோதனைகள்தானே! சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவு, அழகாகவும் வலுவானதாகவும் இருக்கும். மீண்டும் அத்தகைய சோதனையான, அழகான, வலுவான ஜோடிகளாக, 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு […]

19/06/2019 Dinesh R
பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய் சினிமா

பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு வேகமாய் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹை-லைட், ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதைப் படக்குழு உறுதிப்படுத்திகின்றனர். படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்தப் படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட […]

19/06/2019 Dinesh R
‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன் சினிமா

‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவ்வனுபவத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன், ” ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் […]

19/06/2019 Dinesh R
ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

பிக் பாஸ் சீசன் – 1 புகழ் ஆரவ் நடிக்க, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ எனும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் சரண். இப்படத்தில், டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார், பட்டாளம் சுந்தரிபாய் எனும் மிரட்டலான பாத்திரத்தில் நடிக்க, ரோகிணியோ காது கேட்காத வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோகிணி ஏற்று நடித்திருக்கும் லதாம்மா பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சரண் குறிப்பிடுகையில், “ரோகிணி, ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! […]

18/06/2019 Dinesh R
கதிர், சூரி கலந்த சர்பத் சினிமா

கதிர், சூரி கலந்த சர்பத்

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், ‘சர்பத்’ படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் […]

17/06/2019 Dinesh R
சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை சினிமா

சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நிவாஸ் ஆதித்தன், “என்னுடைய ஃபிலிம் கேரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப் படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது” என்றார். […]

15/06/2019 Dinesh R
சிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது சினிமா

சிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது

ஒரு வரியிலே பெரு வலியைப் பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி […]

14/06/2019 Dinesh R
சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி சினிமா

சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து இயக்குநர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, “சசிகுமார் மும்பையின் […]

10/06/2019 Dinesh R
ஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே! சினிமா

ஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே!

பார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்களுக்கு எப்போழுதுமே ஒரு விசேஷ எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. ஜீவி, அத்தகையதொரு படமாக இருக்குமென அப்படத்தின் ட்ரெய்லர் கட்டியம் கூறுகிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இயக்குநர் வி.ஜே.கோபிநாத், “ஒரு அறிமுக இயக்குநரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். […]

08/06/2019 Dinesh R
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் சினிமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்

பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘பக்கத்து வீட்டுப் பையன் (Boy Next Door)’. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படுவர். ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே ‘நம்ம வீட்டு பசங்க’ என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் […]

08/06/2019 Dinesh R
சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும் சினிமா

சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

“ஜூன் 14ஆம் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகும் ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்தப் படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்று விளக்கினார். “அவர்கள் வெறும் இயக்குநர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். […]

08/06/2019 Dinesh R
மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’ சினிமா

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இதையெடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.ஜா கதாநாயகியாக பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் […]

08/06/2019 Dinesh R