32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 47 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 47)
‘வாயாடி பெத்த பிள்ளை’யை எழுதிய ஜி.கே.பி. சினிமா

‘வாயாடி பெத்த பிள்ளை’யை எழுதிய ஜி.கே.பி.

சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற “கம் னா கம்” பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய, “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் […]

29/08/2018 Dinesh R
தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்! சினிமா

தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்!

“தனி ஒருவன்” இன்று 3 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாகத் தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இயக்குநர் மோகன்ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும், ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். ‘தனி ஒருவன் 2’ படத்தை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த உற்சாகமான தருணத்தைப் பற்றி இயக்குநர் மோகன் ராஜா கூறும்போது, “தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், […]

28/08/2018 Dinesh R
செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2 சினிமா

செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பைக் கவனிக்கிறார். மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. செந்நாய் வேட்டை பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

16/08/2018 Dinesh R
டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது சினிமா

டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படத்தைத் தயாரிக்கிறது இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையைப் படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர். “டாக்டர் ஜெ.ஜெயலலிதா […]

16/08/2018 Dinesh R
ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு அயல் சினிமா

ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

ஐரோப்பாவில், 20000 ஆண்டுகளுக்கு முன், காட்டெருதை வேட்டையாட ஒரு குழு கிளம்புகிறது. அக்குழுவில் ஓர் இளைஞன் முதன்முறையாக இணைகிறான். வேட்டையின் பொழுது நிகழும் விபத்தொன்றில், அவ்விளைஞன் இறந்துவிட்டான் எனக் கருதி அவனை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது அவ்வேட்டைக்குழு. உடலாலும் மனதாலும் போராடிக் கொண்டிருக்கும் அவ்விளைஞனுக்கு வழித்துணையாக, தன் கூட்டத்தில் இருந்து வழி தவறிவிடும் ஓர் ஓநாய் சேருகிறது. அந்த விநோத நட்பு வழியில் ஏற்படும் எண்ணற்ற ஆபத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. இளைஞன் தன் குழுவுடனும், […]

14/08/2018 Dinesh R
எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை சினிமா

எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் – “சீமத்துரை”. கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாகவும் நடிக்க விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில் புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது […]

12/08/2018 Dinesh R
சூதாட்ட நகரில் காவியன் சினிமா

சூதாட்ட நகரில் காவியன்

2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம்‘காவியன்’ இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம்‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஓர் இடம். இரவு நேரங்கள் கூடப் பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் […]

12/08/2018 Dinesh R
திரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா சினிமா

திரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா

அறிமுக இயக்குநர் பிரபு என்பவர் இயக்கும் “திரு. குரல்” என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்புத் துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். >> கலை – தியாகராஜன் >> சண்டை – ஹரி >> நடனம் – ஸ்ரீ க்ரிஷ் […]

11/08/2018 Dinesh R
எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர் சினிமா

எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்

பணம் போட்டவர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. ட்ரெய்லர் மிக நன்றாக வந்துள்ளதாக ‘எம்பிரான்’ தயாரிப்பாளர்கள் பி.பஞ்சவர்ணமும் வி.சுமலதாவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர். தயாரிப்பாளர் வி.சுமலதா கூறும்போது, “ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ‘குருட்டுத்தனமான வாய்ப்பு’ முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரைக் காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானைப் பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன […]

10/08/2018 Dinesh R
கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை சினிமா

கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குநர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான “ஆண் தேவதை” படத்தின் இசை வெளியீடு 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழினத் தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாகக் கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து “ஆண் தேவதை” திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் […]

10/08/2018 Dinesh R
லேடி சூப்பர் ஸ்டார் 2019 சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் 2019

நாயகிகள் வெறுமனே மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். இளம் இயக்குநர் U.R.ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிட தக்கது. இந்தப் படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக […]

10/08/2018 Dinesh R
குணசித்திர நடிகர் லதா ராவ் சினிமா

குணசித்திர நடிகர் லதா ராவ்

கடிகார மனிதர்கள் படத்தில், கிஷோருக்கு ஜோடியாக மிக யதார்த்தமானதொரு பாத்திரத்தில் அசத்தியுள்ளார் லதா ராவ். சின்ன வீட்டில், வீட்டு உரிமையாளருக்குப் பயந்து, கணவனின் நிலை உணர்ந்து அனுசரணையாக இருக்கும் அன்பான மனைவி பாத்திரத்திக்குப் பாந்தமாகப் பொருந்தியிருந்தார். லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். தென்னிந்தியத் தொடர்களில் நான்கு மொழிகளிலிலுமே தஒன்றி, சின்னத்திரையில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கிப் திரைப்படங்களில் வாய்ப்பினைத் தேடி வந்தார். முதன்முதலில் […]

07/08/2018 Dinesh R
பாண்டிமுனி படப்பிடிப்பில ஆச்சரியப்படுத்திய குட்டஞ்சாமி கோயில் சினிமா

பாண்டிமுனி படப்பிடிப்பில ஆச்சரியப்படுத்திய குட்டஞ்சாமி கோயில்

கஸ்தூரி ராஜா எழுதி இயக்கும் புதிய படம் பாண்டிமுனி. இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். “பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது. […]

07/08/2018 Dinesh R
மகிழ் திருமேனியின் “தடம்” சினிமா

மகிழ் திருமேனியின் “தடம்”

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாகத் தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது தடம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தைப் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், […]

05/08/2018 Dinesh R
தி ஒரிஜினல் ரியாமிகா சினிமா

தி ஒரிஜினல் ரியாமிகா

ரியாமிகா என்ற பெயருக்கு ஒரிஜினல் எனப் பொருளாம். சமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே! அப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு வர ஒரு காரணம்.. படிக்கும்போதே சில விளம்பரப் படங்களிலும் […]

01/08/2018 Dinesh R