Shadow

திரைத் துளி

தொடங்கியது “புறம்போக்கு”

தொடங்கியது “புறம்போக்கு”

சினிமா, திரைத் துளி
குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

சினிமா, திரைத் துளி
விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை.ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி?ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் எதற்கு? கதை அழகாக இருந்தது. அதில் எனது கேரக்டரும் வலுவாகப் பொருந்தும்படியாக இருந்தது.விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறீர்களே? ஹீரோ இமேஜ் பாதிக்காதா?படம் பார்க்கும் யாருக்கும் அப்படியொரு கேள்வி எழாது. மதுரை மண்ணுக்கே உரித்தான வீரமும் கெளரவமும் கலந்த பாத்திரத்தில் வந்திருக்கிறேன்.தமிழில் விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் உங்களுக்கும்...
புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

சினிமா, திரைத் துளி
இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார். தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை ஞாயிற்றுக்கிழமை (05.01.2014) அன்று, பிரசாத் தியேட்டரில் கம்போஸ் செய்துள்ளார். திங்கட்கிழமை (06.01.2014) அன்று, அந்தப் பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்கிறார். இசைஞானி உடல்நலம் பெற்று திரும்ப...
அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

சினிமா, திரைத் துளி
இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம்.எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் காசி. காசியுடன் வேலை பார்க்கும் செல்வியும் காசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். காசியாக விமல்; செல்வியாக அனன்யா. கார்த்திக்கின் பெற்றோரால் அவனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் பவித்ரா. பவித்ராவாக இனியா.நீரோடையாக சென்றுகொண்டிருந்த அவரவர் வாழ்க்கையில், பவித்ரா கார்த்திக்குக்காக...
கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

சினிமா, திரைத் துளி
குறிப்பிட்ட அளவு  திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும்  சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில்  வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான்.ஆனால் நிஜ வாழ்வில் அவன் ஒரு பயந்த  சுபாவம் கொண்டவன். சின்ன விஷயத்தைக்கூட சரியாக  அவனால் புரிந்துகொள்ள் முடியாது! அப்படிப்பட்டவன் தன் வேலை சம்பந்தமாக உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்கிறான். அப்போது  நடக்கும் சுவாரசியமான தடாலடிச் சம்பவங்கள்தான் படத்தில் வரும் மீதி கதை.1939இல் ...
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

சினிமா, திரைத் துளி
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர்.“என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் ட்ரெண்ட்டையும் தொடங்கி வைக்கிறோம். தலைப்பைப் போலவே படத்தின் கதையும் வித்தியாசமானது” என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். “புறம்போக்கு பவர்ஃபுல்லான கரு கொண்ட கதை. மூன்று ஹீரோக்களுக்குமே முக்கியத்துவம் உள்ளது. ஷூட்டிங்கிற்காக ஆர்வமாகக் காத்திருக்கேன்” என்றார் ஷ...
ஆர்வக்கோளாறில் அனிருத்

ஆர்வக்கோளாறில் அனிருத்

சினிமா, திரைத் துளி
இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி  என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.'ஆக்கோ' - சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே  என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து  இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும்,  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ...
நஸ்ரியாவின் நிக்காஹ்!

நஸ்ரியாவின் நிக்காஹ்!

சினிமா, திரைத் துளி
2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தமிழ்த்திரையுலக கண்டுபிடிப்பு நஸ்ரியாதான். இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என ப் பாராட்டப்படும் நஸ்ரியாவுக்கு  நேற்று பிறந்த நாள். “நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள். இத்துடன் என்னுடைய முதற்படமும் என்னுடைய மிக முக்கியப் படமுமான 'திருமணம் எனும் நிக்காஹ்' திரையிடப்பட  தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா. என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது. படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன்.  இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு  ஊக்கமும், ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார். ...
நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

சினிமா, திரைத் துளி
யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இந்தியத்  திரையுலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்து கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'பேண்ட் பஜா பராத்' படத்தைத் தமிழில் தயாரித்து உள்ளனர். சடங்கு, சம்பிரதாயம் உள்ளிட்ட ஆடம்பரத் திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த  காதல் உணர்வோடு கலவையாகத்  தயாரிக்கப்படும் படம் தான் ' ஆஹா கல்யாணம்'.   நான் ஈ  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி, துடிப்புள்ள  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பையிலிருந்து  வரும் மற்றொரு இளம் நாயகி வாணி குப்தா  நாயகியாக நடிக்கிறார் . அழகுப்புயலாக வளம் வரும் வாணி, நானியுடன்  இனிப்பும் கா...
ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

சினிமா, திரைத் துளி
ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் , கவுண்டமணி நடிக்கும் 49-ஓ.சென்னையில் நேற்று துவங்கிய  மழைத்துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது. இது பெரு  மழை.. சிரிப்பு மழை. Zero rules entertainment என்ற புதிய பட  நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குநர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49-ஓ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது. கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு  பஞ்சமா என்ன!!! படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி, இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க படத்தின் தலைப்பான 49-ஓ என்ற பரபரப்பான தலைப்பு மட்டுமின்றி, வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் எனலாம்.தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுக்குவதா என்பதே பின்னணி. இந்தப் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவ...
தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

சினிமா, திரைத் துளி
'இங்க என்ன சொல்லுது' படத்தின் இசை  டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இதுவரை வெளிவராத கதை களத்தின்  பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு  இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.  எஸ்.டி.ஆர். (STR)  இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன், மயில் சாமி, இயக்குநர் கே. எஸ் .ரவி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத...
“கள்ளப்படம்” தொடங்கியது

“கள்ளப்படம்” தொடங்கியது

சினிமா, திரைத் துளி
இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில் உருவாகி வருகிறது "கள்ளப்படம்". பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜெ.வடிவேல் இப்படத்தின் இயக்குநராய் களம் இறங்குகிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராய் இருந்த ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, காகின் படத்தொகுப்பில், கே இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா கடந்த 21 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிப்வாளர் பி.சி.ஸ்ரீராமும் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தனர். தன்னுடைய இணை இயக்குநரை ஆசிர்வதிக்கும் விதமாக இயயக்குநர் மிஷ்கின் படத்தின் மூன்று காட்சிகளை இயக்கினார்....
நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

சினிமா, திரைத் துளி
மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்த மகிழ்ச்சியும், முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குநர் சிவாவையும், அவரது தொழில்நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள். "அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம்" என்று கூறி பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என பெருமையுடன் கூறினர் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி ஆகியோர். நடிகர்கள்:>> அஜீத் >> தமன்னா >> சந்தானம் >> பாலா >> விதார்த் >> முனிஷ...
ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

சினிமா, திரைத் துளி
சில கூட்டணிகள் அறிவிப்பின் போதே வெற்றி நிச்சயம் என்ற கட்டியத்துடன் அறிவிக்கப்படும் .அதைப் போல ஆர்யாவுடன்  இயக்குநர் ராஜேஷ் அமைத்த வெற்றிக் கூட்டணி  'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைத் தொடர்ந்து  இப்போது மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க விழைகிறது. தொடர் வெற்றிகளால் தற்போது உச்சத்தில் இருக்கும் ஆர்யா தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான 'The Show People' நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்தில் சந்தானமும் இணைவது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க உள்ளது. தங்களுடைய முந்தைய வெற்றி படங்களை விட இந்தப் படம்  எல்லா  மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என்று கூறுகின்றனர் ஆர்யா-ராஜேஷ் -சந்தானம்  ஆகியோர்.  ...
மனதில் மாயம் செய்தாய்

மனதில் மாயம் செய்தாய்

சினிமா, திரைத் துளி
தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ  அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் "மனதில் மாயம் செய்தாய் (M M S)".ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், ரிச்சா பானாய், திஷா பாண்டே, மனோபாலா மற்றும் பலர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிகப் பெரிய பலம் என்பது பார்த்தவர்களின் கணிப்பு. இந்தப் படத்தை பற்றிய தயாரிப்பாளர்களின் கருத்து, "இது எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. படத் தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு...