32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 34
செய்திகள் வரிசை (பக்கம் 2)
இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review இது புதிது

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். 90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் […]

13/07/2026 Dinesh R
The India Story: பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் பேராபத்து அயல் சினிமா

The India Story: பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் பேராபத்து

ஒரு தீவிரமான சமூக, தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B. ஷிண்டே எழுதித் தயாரித்துள்ளார். இந்தப் படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) அல்லது The […]

07/06/2026 Dinesh R
பெத்தி விமர்சனம் | PEDDI review அயல் சினிமா

பெத்தி விமர்சனம் | PEDDI review

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பெத்தி, கமர்ஷியல் ரூட்டில் ஒரு அரசியலைப் பேசியுள்ளது. ஒரு பெரும் முதலாளிக்கு ராம்சரணும் அவரது மலையடிவாரத்தைச் சேர்ந்த மக்களும் நியாயமற்றக் கூலிக்கு வேலை செய்கின்றனர். ராம்சரணுக்கு எக்ஸ்ட்ரா திறமைகள் நிறைய உண்டு. அதிலொன்று கிரிக்கெட் ஆட்டம்! “ஆட்டக்கூலி” என அழைக்கப்படும் அவர் யார் தன்னை ஏலத்திற்கு எடுக்கிறார்களோ அவர்களுக்காகப் போய் விளையாடுவார். அது 1990 காலகட்டம். ராம்சரணின் மலையடிவாரம் அருகே ரயில் சேவை வேண்டும், அங்கு ரெயில் நின்று செல்லவேண்டும் என ஜெகபதிபாபு […]

05/06/2026 Dinesh R
THE END OF OAK STREET – மர்மமான நிகழ்வுகளும், எதிர்பாராச் சூழல்களும் அயல் சினிமா

THE END OF OAK STREET – மர்மமான நிகழ்வுகளும், எதிர்பாராச் சூழல்களும்

ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப்பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு, அதன் அக்கம்பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடிச் சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் ஒன்றாக இணைந்திருந்தால் தான் உயிர் பிழைக்க முடியுமென்பதைப் புரிந்து கொள்கிறது. ஆன் ஹாத்தவே மற்றும் ஈவன் மெக்ரெகர் ஆகியோர் நடிக்கும் ‘தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்’ திரைப்படத்தில் மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் க்றிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் […]

05/06/2026 Dinesh R
He-Man and the Masters of the Universe விமர்சனம் அயல் சினிமா

He-Man and the Masters of the Universe விமர்சனம்

ஸ்வீடன் நடிகரான டால்ஃப் லண்ட்க்ரென் நடிப்பில் ஹீ-மேன் திரைப்படம் 1987 இல் வெளிவந்ததற்குப் பின், மீண்டும் லைவ்- ஆக்‌ஷன் திரைப்படமாக ஹீ-மேன் வர நாப்பது வருடங்களாகியுள்ளது. ரேண்டோர் ஆளுகின்ற எட்டர்னியாவைத் தாக்கி அழிக்கிறான் ஸ்கெலெட்டர். தன் மகன் ஆடன் க்ளெனைக் காப்பாற்ற, அவனை எட்டர்னியா கிரகத்தில் இருந்து வாளுடன் பூமிக்கு அனுப்பி வைக்கிறார் மகாராணி மர்லெனா. அவ்வாளை நீட்டி மந்திர வார்த்தைகளை உச்சரித்தால், சக்தியை அளிக்கவல்ல அற்புதமான அந்த வாளைத் தொலைத்து விடுகிறான் ஆடம். பதினைந்து வருடங்களாகப் […]

05/06/2026 Dinesh R
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review அயல் சினிமா

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், ‘தி ஹன்டர்’ என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் […]

29/05/2026 Dinesh R
Blast விமர்சனம் | பிளாஸ்ட் review இது புதிது

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் […]

28/05/2026 Dinesh R
BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இது புதிது

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ”இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை […]

19/05/2026 Dinesh R
“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன் இது புதிது

“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் […]

16/05/2026 Dinesh R
கருப்பு விமர்சனம் | Karuppu review இது புதிது

கருப்பு விமர்சனம் | Karuppu review

நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும். பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து […]

15/05/2026 Dinesh R
EXAM விமர்சனம் | Amazon Prime Video OTT

EXAM விமர்சனம் | Amazon Prime Video

அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் – காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் […]

14/05/2026 Dinesh R
REMINA | மறதியில் இருந்து கண்ணியமான வாழ்விற்கு இது புதிது

REMINA | மறதியில் இருந்து கண்ணியமான வாழ்விற்கு

டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடு பராமரிப்பில் கண்ணியம், தனிப்பயனாக்கம் மற்றும் மனிதத் தொடர்பை மீண்டும் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ரெமினா என்ற செயற்கை நுண்ணறிவுத் துணை இயங்குதளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. “அன்பு. அக்கறை. நினைவாற்றல்” என்ற உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரெமினா, டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களின் கதைகள், நினைவுகள், அன்றாடப் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் தனித்துவத்தைக் கதைப்புத்தகமாகச் சேமிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு பராமரிப்புத் திட்டத் […]

10/05/2026 Dinesh R
29* விமர்சனம் | 29 Tamil movie review இது புதிது

29* விமர்சனம் | 29 Tamil movie review

மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை. இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் […]

08/05/2026 Dinesh R
The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல் அயல் சினிமா

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் […]

01/05/2026 Dinesh R
TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review இது புதிது

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும். அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, […]

11/04/2026 Dinesh R