Shadow

இது புதிது

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி. அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை. தன் மேலதிகாரியை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். அவர் நகைச்சுவை என்ற பெயரில் செய்யும் சேட்டையைப் பொறுத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. வையாபுரியும் அவர் பங்குக்கு நையப...
ஒரு தவறு செய்தால் விமர்சனம்

ஒரு தவறு செய்தால் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனும் படத்தில், 1965 இல் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் ஒரு வரியைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மணி தமோதரன். பாடலில் அடுத்த வரியான, ‘அதைத் தெரிந்து செய்தால்’ என்ற வரியையும் சேர்த்தே, கதையின் ஓட்டத்தை உருவாக்கியுள்ளார். திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும்பணம் பார்க்க நினைக்கிறார்கள். ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் காட்சியில், தன் பள்ளிக்காதலை நினைவுகூருகிறான் நாயகன். அந்த மான்டேஜஸ்க்கு, டி.ஆர். குரலில் ஒரு நெடுங்கவிதை ஒலிக்கப்படுகிறது. ப...
பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதியு...
Godzilla X King: The New Empire விமர்சனம்

Godzilla X King: The New Empire விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பூமியின் மேற்பரப்புக்குக் கீழுள்ள பூமியின் அடியாழத்திலிருந்து (Hollow Earth) புது அச்சுறுத்தல் முளைத்திட, கிங் காங்கும், காட்ஸில்லாவும் இணைந்து தடுக்கின்றனர். பூமிக்கு மேற்பரப்பில் இருக்கும் காட்ஸில்லா, டைட்டன்கள் எனும் இராட்சச ஐந்துகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றிக் கொண்டு ரோம் நகரத்து கொலசியத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. கிங் காங்கோ, பூமியின் அடியாழத்தில் வேட்டையாடிக் கொண்டு தன் காட்டு வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. இந்நிலையில், பூமியின் அடியாழத்தில் இருந்து வினோதமான சமிக்ஞைகள் வருகின்றன. அதே சமயம், வாய் பேசமுடியாத காது கேளாதவளும், ஐவி பழங்குடியின் கடைசி நபரும், ஐலீனின் தத்து மகளுமான ஜியாவிற்கும் அந்த சமிக்ஞைகளை உணருகிறாள். தன்னை யாரோ, பூமியின் அடியாழத்திலிருந்து உதவி கேட்பதாக உணருகிறாள். அந்த சமிக்ஞையை உணரும் காட்ஸில்லாவும் நகரத் தொடங்குகிறது.ஜியா, ஐலீன், பெர்னி ஹேயஸ், ட்ரேப...
நேற்று இந்த நேரம் விமர்சனம்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை. ‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான். ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்க,...
வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் நாயகன் ஆர்வம் நாயகன் காட்டாததால், நாயகி வேறொரு முடிவு எடுக்கிறாள். அம்முடிவு, அத்தம்பதியின் வாழ்வை எப்படிப் பாதித்தது என்பதே படத்தின் கதை. கிராமத்து வாழ்வியலை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. நாயக...
Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவனை...
இசையும் நடனமும் இணையும் #arrpd6

இசையும் நடனமும் இணையும் #arrpd6

இது புதிது, சினிமா, திரைத் துளி
பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தனது அடுத்த முயற்சியாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அவர்களது முதல் தயாரிப்பில், பிரபு தேவாவையும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானையும் இணைத்துள்ளனர். இந்தப் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தை, பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS தயாரித்து, இயக்குகிறார். இந்தியத் திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அசத்த உள்ளனர். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் இப்படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும் என பிஹைண்ட்வுட்ஸ் நம்புகிறது. இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது என்றும், இந்திய ச...
ரெபல் விமர்சனம்

ரெபல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூணாரின் நெற்றிக்குடி எஸ்டேட்டைச் சேர்ந்த கதிர் பாலக்காட்டுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார். கல்லூரியிலுள்ள மலையாளிகள் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். கதிர் கலக்கக்காரராக உருமாறி புரட்சி செய்கிறார். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, நாயகன் கதிர் புரட்சி தான் தீர்வு எனக் கலகம் செய்வது, செங்கொடி ஏந்திய LDP கட்சியின் SFY எனும் மாணவர் சங்கத்தை எதிர்த்தும் போராடுகிறார். வசனங்களில் கம்யூனிஸ்ட் என்றே விளிக்கிறார்கள். நாயகன் எதிர்க்கும் இன்னொரு கொடி, நீல வண்ணத்தில் இருக்கும் UDP கட்சியின் KSQ எனும் மாணவர் சங்கமாகும். காங்கிரஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர். கொடி இங்குப் பிரச்சனையில்லை, அதை யார் பிடித்துள்ளார் என்பதைப் பொறுத்தே சிக்கல் என்கிறார் கல்லூரி விரிவுரையாளர் உதயகுமாராக வரும் கருணாஸ். நாயகன் கதிர் உருவாக்கும் TSP (தமிழ் ஸ்டூடன்ட்ஸ் பார்ட்டி)-இன் கொடி, கருப்ப...
ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் #RC16

ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் #RC16

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் த்ரில்லர் திரைப்படமான 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் – இப்படத்தைத் தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் 'RC16' எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரி...
Once Upon A Time In Madras | இயக்குநர் பிரசாத் முருகன்

Once Upon A Time In Madras | இயக்குநர் பிரசாத் முருகன்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. இப்படம் ஹைப்பர் லூப் வகையைச் சார்ந்த த்ரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோருடன் திருநங்கை தீக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பிரசாத் முருகன், “மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் நாயகன், சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்ப...
S.S.ராஜமெளலியின் மகன் S.S.கார்த்திகேயா தயாரிக்கும் ஃபஹத் ஃபாஸிலின் 2 படங்கள்

S.S.ராஜமெளலியின் மகன் S.S.கார்த்திகேயா தயாரிக்கும் ஃபஹத் ஃபாஸிலின் 2 படங்கள்

இது புதிது
முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினைத் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்குப் பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார். மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறி...
மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

இது புதிது, கட்டுரை, புத்தகம்
அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள். நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. "இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது" என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் சார...
Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெரிய...
காடுவெட்டி விமர்சனம்

காடுவெட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காடுவெட்டி குருவைப் பற்றிய கதை இல்லை இப்படம். ஆனால், காடுவெட்டி என்கிற தலைப்பைப் பார்த்ததும், அதன் அரசியல் என்னவாக இருக்கும் என யூகிக்கிறார்களோ, அதை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் தந்துள்ளனர். ஆணவக் கொலைகளுக்குக் காரணம் ஆதிக்க சாதியினர் இல்லை என்றும், அதற்கு யார் உண்மையில் காரணம் என்றும், ஓர் அரிய கண்டுபிடிப்பையே நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் சோலை ஆறுமுகம். நகரத்தில் ஒரு காதல் ஜோடி. வெவ்வேறு சாதியைச் சார்ந்த அந்த ஜோடிக்குப் பெற்றோர்களே முன் நின்று கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். அடுத்து, அதே ஜோடி, அதே குடும்பம், அதே ஜோடி, அதே பெற்றோர்கள், அதே காதல் கிராமத்தில் நிகழ்ந்தால், அதற்குப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கும் என இரண்டு கதைகளை ஒப்பிடுகிறார். நகரத்துக் காதல் சுபமாகிறது, கிராமத்துக் காதல் ஏன் ஆணவக்கொலையில் முடிகிறது என கதை பயணிக்கிறது. படத்திற்குக் கதையும் தயார், அரசியலும் தயார், ஆனால் பாவம்...