Shadow

காணொளிகள்

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, 'காட்டி' எனும் அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில், காட்டி ட்ரைலர் குறித்துப் பட வெளியீட்டிற்கு முன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரமும் நண்பருமான அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார். அவர், “காட்டி ரிலீஸ் ட்ரைலர் ரொம்பத் தீவிரமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. முழுக் குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!” என்று கூறியுள்ளார். கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கியுள்ள காட்டி, நிஜத்தன்மை நிறைந்த பின்னணியில் நடைபெறும் சுவாரசியமான சினிமா அனுபவமாக அமைந்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியுடன், விக்ரம் பிரபு, சைதன்ய ராவ் மடாடி, ஜகபதி பாபு ஆகியோர...
நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான 'நிஷாஞ்சி' படத்தின் அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதைச் சித்தரிக்கிறது. ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா, ரஞ்சன் சந்தேல் மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்...
Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமனேனி, டி. ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய்' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா, 'சூப்பர் யோதா'வாக நடிக்கும் இந்தப் படத்தைக் கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடலுக்கான ப்...
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 – இசையுத்தம்

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 – இசையுத்தம்

Teaser, காணொளிகள்
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர ட்விஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாகத் திரைத்துறையில் கோலோச்சி வருகின்றனர். சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சியில், இந்த சீசனில் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது. முதன்முறையாக யாருமே எதிர்பாராத ஒரு புதிய செலிபிரிட்டி நடுவர், இந்த பிரபலமான சூப்பர் சிங்கர் நடுவர்கள் குழுவில் இணைகிறார். மேலும் இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமைய இருக்கிறது. ட...
காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara

காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara

Teaser, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
'ராஜ குமாரா' , 'கே.ஜி.எஃப்.', 'சலார்', 'காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்குப் பின்னால் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா: சேப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌ இது மூன்று வருட படக்குழுவின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. படத்தின் பின்னணியில் உள்ள காவியத்தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை இந்த வீடியோ வழங்குகிறது.படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால், இ...
Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல்

Chi Pae Thu – சுயாதீன இசைப்பாடல்

Songs, காணொளிகள்
சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசைக்கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரையிசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டண்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டண்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டண்ட் இசைக் கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்தப் புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடல...
காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

காளிதாஸ் 2 – டீசர் | பரத் | அஜய் கார்த்திக்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எ.ம் கார்த்திக், 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமா...
மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

Trailer, காணொளிகள், சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள 'மாரீசன்' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, 'ஃபைவ் ஸ்டார்' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். கிராமியப் பின்னணிய...
தீபிகா படுகோன் இன் #AA22xA6

தீபிகா படுகோன் இன் #AA22xA6

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சன் பிக்சர்ஸ், ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலைப் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி, இருநூறு கோடி, ஐநூறு கோடி ரூபாய் எனத் தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களைத் தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான்-வேர்ல்ட் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராகப் பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்தியேக முத்திரையைப் பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையைப் படைத்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். ...
ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

ஏஸ் | ACE Trailer | Vijay Sethupathi

Trailer, காணொளிகள், சினிமா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தைத் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி.ஆர்., சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ் (ACE)’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன், ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் ...
Sotta Sotta Nanaiyuthu – சொட்டைத் தலையும், திருமணமும்

Sotta Sotta Nanaiyuthu – சொட்டைத் தலையும், திருமணமும்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
அட்லெர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S. ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையைக் கலக்கலான பொழுதுபோக்கு நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது" ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்‌ஷன், நிதின் சத்யா, மா.கா.பா ஆனந்த், KPY புகழ், KPY தீனா, KPY பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் C.V.குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான க...
தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

Teaser, அயல் சினிமா, காணொளிகள்
'நேச்சுரல் ஸ்டார்' நானி, ஸ்ரீகாந்த் ஒடெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்திலிருந்து ரா (Raw) ஸ்டேட்மென்ட் எனும் பெயரில் பிரத்தியேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.அசைவொளியில் வரும் பின்னணி குரல், ''வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள், தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல, ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழுச் சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்தக் காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கத...
தனம் | 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து

தனம் | 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து

Others, OTT, காணொளிகள்
விஜய் டிவியில், வெளிவரவுள்ள நெடுந்தொடர் “தனம்” ஆகும். ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களைப் பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர். ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாராவிதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள். மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது. தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல், சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். பிப்ரவரி 17 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்தப் புதிய சீரியல், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆட...
“இக்கடா ரா” – ஆண்ட்ரியா ஜெரெமியா | ELEVEN | லெவன் திரைப்படம்

“இக்கடா ரா” – ஆண்ட்ரியா ஜெரெமியா | ELEVEN | லெவன் திரைப்படம்

Songs, காணொளிகள், சினிமா
ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் திரைப்படம் 'லெவன்' ஆகும். இப்படத்திற்காக 'தமுகு (TAMUGU - TAMil telUGU)' எனும் சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்தியேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  பாடலைப் பற்றிப் பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "பரபரப்பான க்ரைம் த்ரில்லரான 'லெவன்' படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் தெலு...