[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube]
எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம்" பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர். இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே இன்றும் சபரிமலையில் நடைசாத்தும் பொழுது தாலாட்டுப் பாட்டாக ஒலிபரப்பப்படுகிறது. கே. ஜே. யேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குரலும் அளவான இசையும் நம்மை மயங்கவைக்கிறது என்பது நிச்சயம். நான் ரசித்த இந்தப் பாட்டுக்...