Shadow

கட்டுரை

நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

கட்டுரை, புத்தகம்
பா.வெங்கடேசனின் இரண்டாவது நாவலான ‘பாகீரதியின் மதியம்’ காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு நிவேதிதா, நாவலை உச்சி முகர்ந்துவிட்டார். “முதலில் காலச்சுவடைப் பாராட்டணும். பிழைகளே இல்லை. சமீபத்தில் நான் படித்த புத்தகங்கள் அனைத்திலும் நிறைய பிழைகள். என் புத்தகத்துக்கு நான் தான் ஃப்ரூஃப் ரீடிங் செய்வேன். ஆனாலும் பிரிண்ட்டிங் போயிட்டு வர்றப்ப பிழைகள் வந்துடும். அதை மீண்டும் சரி பார்க்கணும். என் புத்தகத்தில் 10 பிழைகள் வந்துடுச்சு. என்னிடம் 5 லட்சம் இருந்தா எல்லாப் புத்தகத்தை வாங்கி அழிச்சிடுவேன். 'பாகீரதியின் மதியம்' புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற காலச்சுவடு ஆட்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.   நான் நன்றாக எழுதியிருப்பவர்களைப் பார்த்து, இவர்கள் என் வாரிசு எனச் சொல்லி விடுவேன். அது ஓர் அன்பு. அன்பால் அப்படி நாலஞ்சு பேரைச் சொல்லியிருக்கேன். ஆனா பா.வ...
உணவுக்கு மரியாதை

உணவுக்கு மரியாதை

கட்டுரை, சமூகம்
பசங்க-2 படத்தில், தன்னை விருந்துக்கு அழைத்தவரை ஃபோனில் தொடர்பு கொண்டு, தன் மனைவிக்கு என்ன உணவுகள் பிடிக்குமெனப் பட்டியலிடுவார் சூர்யா. "விருந்துக்குப் போற இடத்தில் என்னென்ன வேணும்னு இப்படியா லிஸ்ட் போடுவாங்க?" எனக் கேட்பாங்க அமலா பால். "பின்ன நம்மள விருந்துக்குக் கூப்பிட்டு, அவங்களுக்குப் பிடிச்சதைலாம் சமைச்சு வச்சிருப்பாங்க. நம்மளுக்குப் பிடிச்சதுலாம் அப்றம் எப்ப சாப்பிடுறது?" எனப் பதிலளிப்பார் சூர்யா. இத்தகைய அற்புதமான காட்சி வைத்தமைக்கு இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டியே ஆகவேண்டும். அன்புடன் நமக்களிக்கப்படும் உணவு நம் விருப்பத் தேர்வாக இருந்தால் நல்லதுதானே.! துரதிர்ஷ்டவசமாக, நாம் உண்ணும் உணவுகள் இப்போ நம் விருப்பத்திற்கு இருப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் நூடுல்ஸைக் கண்டோமா, ஓட்ஸைக் கண்டோமா? விளம்பரங்கள் மூலம் யாரோ எவரோ நாம் சாப்பிட வேண்டியதைத் தீர்மானிக்கத் தொடங்கி இரண்டு தசாப்தங்களுக...
மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

கட்டுரை, சமூகம்
இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது மாமதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதி நிறைவுக்கு வந்திருக்கிறது. நேற்று திருக்கல்யாணம் கண்ட சொக்கநாதரும், மீனாட்சியும் இன்று காலை மதுரை வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி தேரோடியிருக்கிறார்கள். திருவிழாவின் இரண்டாம் பகுதியாக, நாளைக் காலையில் இந்த விழாவின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான கள்ளழகர் மதுரைக்குள் வருகிறார். அடுத்த நாலைந்து நாட்களுக்கு அவர் போகும் இடமெல்லாம் அமளிதுமளியாகும். திருவிழாக்கள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை, இயல்பைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு. அந்த வகையில் திருவிழாக்களின் நகரம் என்றால் அது எப்போதும் மதுரைதான். வருடம் முழுக்க ஏதாவது ஒரு திருவிழா அதற்கேயுரிய தன்னியல்போடு, கொண்டாட்டங்களோடு நடந்துகொண்டே இருக்கும். பங்குனி மாதமே இந்த மெகா திருவிழாவிற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும். மீனாட்சிஅம்மனு...
நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்

நம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்

புத்தகம்
அறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை 63 அத்தியாயங்களாகத் தொகுத்து, சிறுவர்களுக்கான "நம் நாயகம்" எனும் நூலை எழுதியுள்ளார் ஜெஸிலா பானு. தனது புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘இந்தப் புத்தகத்தைப் படிச்சா ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழணும்னு தெளிவு கிடைக்கும்’ என்கிறார். இப்படியொரு மதம் சார்ந்த நீதி போதனைப் புத்தகம் எப்படி முன்மாதிரி ஆகும்? பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், யுக்தியும், எளிமையான மொழி நடையுமே அதற்குக் காரணம். புத்தகத்தில் என்ன தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியுமெனப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டிராதவர்கள் நினைக்கக்கூடும். அதைப் பற்றி, இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் திரு. மாலன், “புத்தக வடிவமைப்பு என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். புத்தகத்தை டைப்செட் பண்ணி, பக்கம் பக்கமா அச்சடிச்சு...
ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

சமூகம்
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான். தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்? உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும். நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாமைக...
ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

கட்டுரை, சமூகம்
ஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான். அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு, வணக்கம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் 'தமிழ் இருக்கை' பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். முதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ' தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை?' என்பதுதான். எப்படியோ திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்க...
பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

கட்டுரை, சமூகம், சினிமா, திரைச் செய்தி
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார். “நான் விஜய் ஆண்டனியிடம்...
சந்திரஹாசம்  – ஓர் அலசல்

சந்திரஹாசம் – ஓர் அலசல்

கட்டுரை, புத்தகம்
அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது). புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. 'இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்' என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய எழுத்துரு. உதாரணத்திற்கு, குதிரையின் குளம்புகளை மறைத்து "சல்.. சல்.." எனப் பெரிய எழுத்துகளில் போடப்பட்டிருப்பதைக் காணுங்கள். க்ர்ர்.. இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்படியே காலம் நழுவி பால்யத்துக்குள் நம்மைத் தள்ளி வி...
பீப் பாடலும் டூப் சீற்றமும்

பீப் பாடலும் டூப் சீற்றமும்

கட்டுரை, சமூகம்
நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல.. கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல.. குட் பொம்பள எவளுமிங்கில்ல.. ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல.. ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா.. அவளோட ஆச தீர, உன்ன விலகி ஓடு வா இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் சரக்கு பாட்டும் ஒன்று. இதனைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் களஞ்சியம், யுகபாரதியின் பாடல் வரிகளை மிகவும் சிலாகித்தார். அவர் சிலாகித்தது எந்தப் பாடலை எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மேலே உள்ள பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதோடு நில்லாமல், சிலரால் தமிழ்த் திரையுலகமே தமிழ்ச் சமூகம் முன் தலை குனிந்துள்ளது என நரம்பு...
ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

சமூகம்
தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது. தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார். J.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை சம்பந்தமான பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிட்த்தக்கது. தமிழரின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் இந்தக் கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகக் காண வேண்டும்....
இனியொரு விதி செய்வோம்.!

இனியொரு விதி செய்வோம்.!

கட்டுரை, சமூகம்
அமெரிக்க அரசு அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை விழிப்புணர்வு (Domestic Violence Awareness) மாதமாக அனுசரிக்கிறது. இது தொடர்பில் நிறைய கருத்தரங்கங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. நான்கில் ஒரு பெண் உடல், உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்றும் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.தன்னுடைய துணையை அல்லது குடும்ப உறுப்பினர்களை அடிப்பது, அச்சுறுத்துவது, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வது, உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது, திருமணப் பந்தத்தை முறித்து விடுவதாக பயமுறுத்துவது, குடும்பத்தை நிர்கதியாய் விட்டுவிட்டு வெளியேறி விடுவேன் என்றோ, குடும்ப உறுப்பினர்களை வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என்றோ பயமுறுத்துவது என பல்வேறு முகங்களைக் கொண்டதுதான் குடும்ப வன்முறை. படித்தவர், பாமரர், ஆண், பெண், இனம், மொழி, மதம், நா...
அழகு, பெண்மை, பாரம்பரியம்

அழகு, பெண்மை, பாரம்பரியம்

சமூகம்
அழகிய தமிழ் மகள் எனும் மகுடத்தை வெல்லப் போவது யார்? அழகிய தமிழ் மகள் மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. 'வாவ் செலிப்ரேசன்' எனும் இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காக இயங்கும் ‘டேக் கேர் இந்தியா’ எனும் நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது. அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி. இந்தப் போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ்ப் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம். மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில், போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ்ப் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit எனும் வலைதளத...
திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில்

திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில்

கட்டுரை
நானும் என் மனைவியும் ஒரே அலுவலகத்தில், ஒரே டீமில் பணிபுரிவதால், மற்றவரின் பணி சுமையினை நன்கு அறிவோம். என்னை விட என் மனைவிக்கே அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி அதிக ஆணி. இந்தக் கவலைகளை மறக்க, இதுவரை நாங்கள் பார்த்திராத ஆனால் பார்க்க வேண்டிய ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து எனது தேடலைத் தொடங்கினேன். நாங்கள் ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கிருந்து செல்லக்கூடிய இடங்களை ஆராய்ந்தேன். மேலும் அது குளிர் காலம் என்பதால் ஹில் ஸ்டேஷனைத் தவிர்க்கவும் முடிவு செய்தேன். சில நாட்கள் இணையத்தில் மூழ்கி சில இடங்களைத் தேர்வு செய்தேன் 1. ஹம்பி, கர்நாடகா 2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா 3. கோவா 4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா 5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா 6. கோகர்ணா (Gokarna), கர்நாடகா இவை அனைத்தும் நாங்கள் ஓர் இரவு ரயில்/பேருந்து பயணத்தில் சென்றடையக் கூடிய இ...
வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

கட்டுரை, புத்தகம்
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால், ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராஃபிக்ஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பலாம். ‘காவல் கோட்டம்’ நாவலிற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியரான பாலசண்முகம்.காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன். அவனுக்கு இரண்டு மனைவிகள். முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர பாண்டியன் இருக்க, இளையவன் வீர பாண்டியனே சிறந்தவன் என்று தந்தை கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே நிலைகுலைய வைக்கிற அளவிற்குப் போகிறது. அந்த சதித் திட்டங்களை எல்...
மிதக்கும் சொர்க்கம்

மிதக்கும் சொர்க்கம்

கட்டுரை, புத்தகம்
ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்! புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது பயண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தமிழின் பயண நூல்களுக்கு அவரே முன்னாடியெனச் சொன்னார். எழுத்தாளர் சல்மாதான் கிருத்திகா எழுதுவதற்கே காரணமாக இருந்துள்ளார். அவர் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "பெண்களால் மட்டுமே சிலவற்றை எழுத முடியுமென்பதற்கு கிருத்திகாவின் இந்தப் புத்தகமும் சான்று...