Shadow

கதை

புன்னகையின் பின்னால்

புன்னகையின் பின்னால்

கதை, படைப்புகள்
“எப்படியோ கஷ்டப்பட்டு கம்பெனியோட நொய்டா ஆஃபீசுல இருந்து சென்னை ஆஃபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டீங்க..இப்போ சந்தோஷம் தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள் ரோகினி."ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன?? நானும் அங்க 4 வருஷமா இருந்துட்டேன். இப்போ உன்ன என் தலையில கட்டிட்டாங்க, எனக்கும் அத ஒரு காரணமா காட்டி சென்னைக்கு வர வசதியா போச்சி" என்றான் விஜய்."எப்படியோ நான் வந்த நேரம்,நீங்க ஆசை பட்டமாதிரி நடந்திருக்கு பாருங்க.""சரி சரி. இப்படி செண்டிமெண்டா பேசியே அனுப்பிடலாம்னு பாக்காத. இட்லிய கொண்டா சாப்ட. ஆஃபீசுக்கு ஓடுறேன்."சென்னைக்கு மாற்றமாகி முதல் நாள் அலுவலகம் சென்றான் விஜய். எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அதிகமின்றி காணப்பட்டான்.நான்கு வருட அனுபவங்கள் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது.அவனது புது அலுவலகத்தில் சுதர்ஷன் என்பவரை சந்தித்த விஜய் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் ...
பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு

கதை, படைப்புகள்
"என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?""திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?""இல்ல.. நாளைக்கு உன் பிறந்த நாள் வேற, எதாவது பிளான் இருக்குமே!! அதான் கேட்டேன்.""அப்படி பிளான் இருந்திருந்தா லீவ் கேட்டு நானே உங்ககிட்ட வந்திருப்பேனே சார். எங்கயும் போகல நாளைக்கும் ஆபீஸ் வருவேன்.""வேணும்னா நாளைக்கு லீவ் எடுத்துக்கோ. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சனிக்கிழமை வொர்க் பண்ணி காம்பென்செட் பண்ணிடு.""எனக்கு அப்படி ஒரு லீவ் தேவையே இல்ல சார், நான் வரேன்.""டேய் பாஸ்கர், நான் அருண் பேசுறேன்டா. நீ எங்க  இருக்க??""இப்போ  தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். ஏன்டா?""உனக்காக நாங்க விக்னேஷ் வீட்டு மொட்ட மாடியில வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமா வந்து சேர்." "10 நிமிஷத்துல இருப்பேன்.""டேய் அருண். போன்ல அவன் என்னடா சொன்னான்?""இப்போ தான் ஆபீசுல இருந்து வீ...
அழுமூஞ்சி விளையாட்டு

அழுமூஞ்சி விளையாட்டு

கதை, படைப்புகள்
சீதாவிற்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, அவங்க ஊரை பற்றியே யோசனையாக இருந்தது. ஏன் அவங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை என்றும், தான் ஏன் அத்தை வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்றும் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு இது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.பெற்றோர்களை பிரிந்து இருந்த  ஏக்கம் தானோ என்னவோ ,சராசரி குழந்தையை போல் அல்லாமல் ஏதோ ஒரு வேற்று உலகில் வாழ்வது போல் இருப்பாள். படிப்பிலும் கொஞ்சம் மந்தம் தான்.அவளது ரேங்க் கார்டில் சிகப்பு மை பேனாவினால் எழுதபட்டிருந்த "NIL"  என்பது என்ன என்று கூட புரியாது இருந்தாள்.அவள் அத்தை மகன் குமார் எப்பொழுதும் துறு துறு என்று சுற்றிக்கொண்டிருப்பான். இருவரும் ஒரே பள்ளியில் தான் மூன்றாவது படித்து வந்தனர். சிறு வயதில் குழந்தைகளுக்கு சொந்தமான துடிப்பும் சுட்டி தனமும் அவனிடத்தில் நிறைந...
மொழியும் பழியும்

மொழியும் பழியும்

கதை, படைப்புகள்
மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்லஎன் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டேபோகும் மாயம் நிகழத்தொடங்கியது.அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர.ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!. உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,"சொல்லு டா" என்றேன். "டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming)டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன்பண்ணுவான் பேசிக்கோ சரியா??"   "ஹ்ம்ம் சரி பேசுறேன்".அழைப்பை துண்டித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை,வேறொரு க்ரஹதிர்க்கு பயணிக்க தயாரானேன்.மீண்டும் அதே அதிர்வு,வேறு வழியில்லை தற்காலிகமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அழைப்புக்கு செவி சாய்த்தேன்.தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படிதிக்கொண்டவன், மேலும் ஆங்கி...
இன்னுமா இப்படி மனிதர்கள்

இன்னுமா இப்படி மனிதர்கள்

கதை, படைப்புகள்
   சென்னையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு நுழைந்த பிறகு தான் திருக்கோவிலுருக்கு எந்த ரோட்டில் போக வேண்டுமென்ற குழப்பம் ஏற்பட்டது அரசு மருத்துவமனை அருகில் திரும்ப வேண்டும் என்று சொன்னார்கள், அங்கு வந்து பார்த்தால் நான்கு ரோடு பிரிகிறது, எந்த ரோடு எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது தான், ஆனால் அதை படிப்பதற்கு எங்கே முடிகிறது. நீத்தார் அறிவிப்பு, பிறந்த நாள் வாழ்த்து என்று ஏகப்பட்ட நோட்டிஸ் ஒட்டும் பலகையாக தான் வழிகாட்டும் பலகை பயன்படுகிறது.    மருத்துவமனை மூலையில் காரின் வேகத்தை குறைத்து கையில் துணிப்பையுடன் நின்ற ஒருவனிடம் அரகண்டநல்லுருக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்டேன். இதோ இப்படி மேற்கு பக்கமா போற ரோடுதான் சார். இங்கிருந்து சரியா பதினாறு மைல்தான் சார், என்றார் சரி ரொம்ப நன்றி என்று வண்ட...
ஒரு காதல் பிரயாணம்

ஒரு காதல் பிரயாணம்

கதை, படைப்புகள்
வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை  உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த  பின்னர் மீண்டும் திங்களன்று  காலை  சென்னைக்கு பிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில்  வரும்  நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில்  வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.சென்னையிலிருந்து  புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 - 3.45 மணி நேரத்தில்  விழுப்புரம்   சென்றடையலாம்.(விழுப்புரத்தில் புறப்படும் பேருந்திற்கும் சென்னையை அடைய இதே நேரம் தான்  தேவை படும் என நான் நம்புகிறேன்).  வழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று ...
சுயம்வரம் – 5

சுயம்வரம் – 5

கதை, தொடர், படைப்புகள்
உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர்.திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான்.வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன்,"மச்சி.. நீ  செலக்ட் ஆயிட்ட." என்றான்"நீ?""என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு.""எப்படி சொல்ற?""ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்காங்க.""நீ சீரியசாவே பேச மாட்டியா?" என்று அவனே தகவல் பலகையை காண சென்றான். அருண் சொன்னது உண்மை என்று அறிந்ததும் அவனால் ஆச்சரியத்தில் இருந்து மீளவே முடியவில்லை."டாய்.. ஃபர்ஸ்ட் ரவுன்டுக்கு ட்ரீட் தந்துட்டு செகன்ட் ரவுன்டுக்கு போறியா அல்லது ரெண்டுக்கும் சேர்த்து அப்புறமா தர்றியா?""டேய்.. நானே டென்ஷன்ல இருக்கேன். இருபது பேர்ல...
சுயம்வரம் – 4

சுயம்வரம் – 4

கதை, படைப்புகள்
வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், 'அப்படி என்ன இருக்கு?' என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான்.1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?'அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா மொக்கையா இருக்கே!!' என ராஜேஷும் சிரித்தான். அப்பொழுது அந்த அறையே அதிருவது போல ஒருவன் வினாத் தாளை வீசி எறிந்து,"வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ  ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ். ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்" என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்...
சுயம்வரம் – 3

சுயம்வரம் – 3

கதை, தொடர், படைப்புகள்
முதல் பகுதி.. இரண்டாம் பகுதி.. ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு. பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த 'கஃபே டே(cafe day)' போனான் ராஜேஷ். அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனது நண்பன் அருண், "உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?" என்றான் ராஜேஷிடம். "ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே 'ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்' அப்படின்னு சொல்ல தோனனும், 'ஷீ இஸ் சோ ஹாட்' ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது" என்றான் ராஜேஷ்."அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?" என்று அருண் கேட்க, "வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கி...
காதல் தூதன்

காதல் தூதன்

கதை, தொடர், படைப்புகள்
மாலை நேரம், சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன். வாயிலில் படர்ந்திருந்த  கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன. மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை.கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது ,அருகே &nb...
சுயம்வரம் – 2

சுயம்வரம் – 2

கதை, தொடர், படைப்புகள்
"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்."வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??"  என்று கேட்டார்.அசடு வழிந்துகொண்டே, "அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான். "அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,"டேய்.. ராஜேஷ்  என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக."அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்... "அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதி...
சுயம்வரம் – 1

சுயம்வரம் – 1

கதை, தொடர், படைப்புகள்
வழக்கம் போல் அன்று காலை "The Hindu" நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன்.திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,"டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி  டா " என்றார்."இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க??  இப்போ நான் இருக்கும் கம்பெனிநல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்" என்றான் குழப்பத்துடன்.ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroomInterested candidates can forward their details to crazy....gal@gmail.com   Shortlisted profiles will be called up for selection procedure which comprises of following rounds 1. Written test 2. Group Discussion   Can...
பூக்காரி

பூக்காரி

கதை, படைப்புகள்
"பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்..""ஆமாங்க""தர்ம சம்ஸ்தா பனார்த்தாய சம்பவாமி யுகே!! யுகே!!""சரி தானுங்க.""என்ன சரி?""நீங்க சொல்றதுங்க.""நான் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா?""தெரியாதுங்க.""அப்புறம் ஏன் சரின்னு சொன்னே!!""நீங்க எது சொன்னாலும் சரியா தான் இருக்குமுங்க.""இது தான் நம்மகிட்ட இருக்கிற தவறான போக்கு. எதையும் கேள்வி கேட்கனும். எதுவா இருந்தாலும் தீர விசாரிக்கனும். அப்ப தான் நமக்கு நிறைய தெரிய வரும். இனிமே நீ கேள்வி நிறைய கேட்கனும் புரியுதா?""கேட்கிறேனுங்க. நீங்க சொன்னதுக்கு என்னங்க அர்த்தம்?""அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு கேள்வி.. தவறுகள் எங்க ஆரம்பிக்குது?""வயித்துல தான் சாமி. பசியில தான் எல்லாம் ஆரம்பிக்குதுங்க.""உன்னால அப்படி தான் யோசிக்க முடியும். ஆனா உண்ம அது இல்ல. சொத்து இருக்கிறவன் சொத்து இல்லாதவன் மேல் பண்ற வன்முற...
அறிவாளிகள்

அறிவாளிகள்

கதை, படைப்புகள்
எவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன புண்ணியம் என்று சொன்னவாரு கூட்டத்திற்குள் நுழைந்தாள் எட்யாங். ஆம் அனுபவமும் அறிவும் ஒருங்கே பெற்றவள் அவள். அதனால் தான் கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தாள். அனைவரும் வானத்தை நோக்கி ஊளையிட்டு,  தலைவிக்கு மரியாதை செலுத்தினார்கள்.   கூட்டத்தின் செல்ல பிள்ளையான ரூஸ்  மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில், மாயா காயத்துடன் திரும்பி உள்ளான். " நாம்ப எல்லாம் சபிக்க பட்டவங்க எப்பவும் நம் இனம் மனிதர்களுக்கு அடிமைகள் தான் இவங்கள கட்டுபடுத்த யாருமே இல்லையா?" என்று ஒரு குரல் கூட்டத்தின் மத்தியில் ஒலித்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். "ஏன் இல்லை கடவுள் இருக்கிறார்".. என்று பேசத்தொடங்கினாள் எட்யாங். "கடவுளா ?? என்ன பெரிய கடவுள் மனிசங்களுக்கு மட்டும் எல்லாம் கொடுத்துட்...
ஒரே கூத்து தான் போங்க

ஒரே கூத்து தான் போங்க

கதை, படைப்புகள்
மார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி .அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம்.ஏனுங்க இந்தாங்க என்று  3000 ரூபாய் எடுத்து நீட்டினாள். யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம்,"ம.மு.க  கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல  அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க" என்றால்.பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி, "எப்போ வந்தாங்க வீட்டுக்கு" என்று கேட்டான் கோவமாக.கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி.தட்டில் இருக்கும் உணவை கூட கண்டுகொள்ளாமல், பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியில் வெளியே புறபட்டான் நல்லதம்பி.நாலு தெரு தாண்டி ஒருவரிடம், "ம.மு.க  கட்சி ஆளுங்க இந்த பக்கம் வந்தாங்களா" என்று கேட்டான்.அவரும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.சிறுது நேரத்தில் அவர்களை கண்டுபிடித்த நல்லதம்பி,...