Search
ISACA-fi

சீர்குலைவில் இருந்து தொடக்கம்

ICASA

இசாகா (ISACA) – உலகளாவிய தொழில் வல்லுநர்களுக்கு, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற, உலக தர அறிவையும், நெட்வொர்க்கிங்கையும், தொழில் வளர்ச்சியையும் அறிமுகப்படுத்தி உதவுகிறது. 1969இல் நிறுவப்பட்ட இசாகா, 180 நாடுகளில் 1,40,000 தொழில் வல்லுநர்களைக் கொண்ட லாப நோக்கற்ற இயக்கம். இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சைபர் செக்யூரிட்டி நெக்சஸ் (CSX), நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில் வடிவமைப்பைக் கொண்ட கோபிட்டை (COBIT) முதலியவற்றையும் அளிக்கிறது இசாகா.

இந்தியாவிலேயே சென்னையில் தான் முதன் முதலில் இசாகா தொடங்கப்பட்டது. சிறந்த தொழிற்முறை லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது சென்னை இசாகா. சொந்தமாக வளாகமும், சுமார் 1000 நபர்களையும் கொண்ட இசாகா கிளைகளில், சென்னை முதன்மை இடம் வகிக்கிறது. பல்வேறு வகையான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் சென்னை இசாகா, அதன் தொழிற்முறை வளர்ச்சிக்கான செயல்திட்டங்களுக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறது. அவற்றில் சில – மாதாந்திர நிகழ்வுகளாக நடத்தப்படும் செமினார், வொர்க்- ஷாப்கள் மற்றும் லயோலோ இன்ஸ்டியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (LIBA), பாரதிதசன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (BIM), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து நடத்தப்படும் அறிவுசார் பகிர்தல்கள் ஆகியவை குறிப்பிட்டத்தக்கன.

ICC2017

பனிப்போரின் பொழுது, “பீஸ் மேக்கர் (Peace Maker)” என்ற முரண்நகையான பெயரை அதி நவீன அணு ஆயுத ஏவுகணைக்குச் சூட்டியது அமெரிக்கா. போரைப் பற்றிய கேள்வியைப் பலமாக எழுப்பிய ஹிரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டை விட 20 மடங்கு அழிக்கும் திறன் கொண்டது பீஸ் மேக்கர். மனித இனம் கண்ட மிகப் பெரும் படுகொலையான ஹிரோஷிமா சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து ஆயுதங்களும் மெல்ல வழக்கொழிந்து போயின. போர் பற்றிய அடிப்படை மனோபாவாங்கள் மாறி, மனிதநேயம் மேலெழுந்து இன்னொரு உலகப்போரைப் பற்றி நினைக்கவொட்டாமல் செய்தது. அன்று ரூஸ்வெல்ட்க்குப் பனிப்போர் காலத்தில் எழுந்த சவால் தான், இன்று பெரு நிறுவனங்களின் நிர்வாகமும் எதிர்கொள்கிறது.

உங்கள் நிறுவனங்கள் புது யோசனையை ஏற்றுக் கொள்ளுமா? அதற்காகப் பணம் ஒதுக்கி, முதல் ஆளாக மாற்றத்திற்கு உட்பட்டு நெருக்கடியைச் சமாளிக்குமா? சீர்குலைவு புதுமை தேற்றத்தை (Disruptive Innovation Theory) அறிமுகப்படுத்திய பேராசிரியர் க்ளேய்டன் எம். க்ரிஸ்டென்சன், “சீர்குலைத்தல் என்பது ஒரு தொடர் இயக்கம், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்ல, புதுமையான கண்டுபிடிப்புகள் என்பது வேறொன்றின் சீர்குலைவோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும்” எனக் கூறுகிறார். சென்னை இசாகா, ‘சீர்குலைவு தொழில்நுட்பம் (Disruptive Technology)’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தியது. நிறுவனங்கள் தற்போது எப்படித் தன்னைப் புதுப்பித்து, சீர்குலைத்து, தொழிலில் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றன என்பதே கருத்தரங்கின் பிரதான விவாதம்.

ICC 2017 (இசாகா சென்னை கான்ஃபெரன்ஸ்), ஹையாத் ரெஜென்சியில் செப்டம்பர் 7 முதல் 9 வரை நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக, ஹைதராபாத TCSஇல் இருந்து முனைவர் T.H.செளத்ரி பங்கேற்றார்.