32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்

Dinesh R சேலம் Published: 23/08/2019 2 நிமிட வாசிப்பு Updated: 30/09/2019 சினிமா
எழுத்து அளவு:

Actor-Arjman

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் ‘பீட்ரூ’ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, “எனக்கு பி.ஆர்.ஓ. நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார்.

சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஓர் ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தைக் குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியதால் அவரைக் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்” என்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்க உள்ளது. அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.

படத்தை GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பு வேலைகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.