Shadow

Tag: Z5

காக்கி சர்கஸ் – மனித மங்களின் விசித்திரமான உணர்வுகள்

காக்கி சர்கஸ் – மனித மங்களின் விசித்திரமான உணர்வுகள்

OTT, Web Series
தமிழ் மற்றும் மலையாள ZEE5, தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’-ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு அத்தியாயங்கள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் (Once Upon a Time in Kayamkulam)’ என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களைச் சந்திக்க வருகிறது. இந்தத் தொடரின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்தத் தலைப்பு அழகாகப் பிரதிபலிக்கிறது. இத்தொடரை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நா...
பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5

பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5

OTT, சினிமா, திரைத் துளி
ஜீ 5 இல், பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளன. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ திரைப்படம், காதலர்கள் பிரிந்த பின்பும் ஒருவரை ஒருவர் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தைச் சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரசியமாக வெளிப்படுத்துகிறது. படத்தின் தயாரிப்பாளரும் இசை...
காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5

காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5

OTT, சினிமா, திரைத் துளி
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் Z5 இல் வெளியாகின்றன.Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது. இப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்துச் சொல்க...
தடயம் விமர்சனம் | Zee 5

தடயம் விமர்சனம் | Zee 5

OTT, Web Series, திரை விமர்சனம்
சமுத்திரக்கனி நடித்திருக்கும் முதல் இணையதொடராகும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஈச்சம்பள்ளம் எனும் தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிதான் தொடரின் களம். அதிகாரம் எளியவனை எப்படிக் காயப்படுத்துகிறது, காயப்பட்டவன் சமூகத்தில் என்னவாகிறான் என்பதைத் தொடர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. விருப்ப ஓய்வு பெறத் துடிக்கும் திறமையான காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியை, மரியாதையுடன் நடத்தி, தொடர் கொலைகளை விசாரிக்கும் வழக்கில் குழுவில் சேர்க்கிறார் ஷிவதா. கொலைகாரர்கள் இருவர் எனத் தடயத்தைக் கொண்டு கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. மேலும், தமிழக - ஆந்திர எல்லையோர ஊர் என்பதால், கொலைகாரர்கள் எல்லை தாண்டி வந்திருக்கக்கூடும் என ஆந்திராவிற்குச் சென்று விசாரிக்கின்றனர். அதே பேட்டர்னில் நடந்த 70 கொலைகளைப் பற்றித் தெரிய வருகிறது. கொலைகாரர்கள் யார், ஏன் அத்தனை கொலை செய்கிறார்கள் என்பதை விற...
Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம்

Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம்

OTT, அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது ஜீ5. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று Zee5-இல் இந்தியப் பார்வையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, noir பாணியில் உருவான ஒரு அதிரடியான த்ரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காகக் கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முட...
Heartiley Battery – சாதாரண காதல் கதை அல்ல | Zee5

Heartiley Battery – சாதாரண காதல் கதை அல்ல | Zee5

OTT, Web Series
தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி (Heartiley Battery’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலைப் புதிய கோணத்தில் ஆராய்கிறது. தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்தத் தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அள...
Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5

Janaki v/s State of Karala – மெளனமாக்கும் முயற்சிக்கு எதிராக | Zee 5

OTT, சினிமா, திரைத் துளி
வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது ஜீ5. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்க, J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாகச் செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ர...
சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

சட்டமும் நீதியும் விமர்சனம் | Sattamum Neethiyum review

OTT, Web Series, திரை விமர்சனம்
தனது மகள் வெண்ணிலாவைக் கடத்தி விட்டார்கள் என்று காவல்நிலையத்தில் புகாரளிக்கச் செல்கிறார் குப்புசாமி. காவல்துறை அவரது புகாரைப் பதியாமல் துரத்தி விட, இயலாமையின் உச்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனக்குத் தீயிட்டு மாய்த்துக் கொள்கிறார் குப்புசாமி. நீதிமன்றத்துக்குள் சென்று வாதிடாத, வீட்டினரால் மதிக்கப்படாத வக்கீலான சுந்தரமூர்த்தி, பொதுநலவழக்காகக் குப்புசாமியின் வழக்கைப் போடுகிறார். குப்புசாமி யார், வெண்ணிலாக்கு என்னானது என்ற கேள்விகளுக்குப் பதில் தேடியவண்ணம் பயணிக்கிறது சட்டமும் நீதியும் தொடர். சுந்தரமூர்த்தியின் உதவியாளர் அருணாவாக நடித்துள்ளார் நம்ரிதா. சுந்தரமூர்த்தியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்ற ஒரே காரணத்திற்காக, அருணாவை யாரும் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர். வெடுக்கென்ற நேர்கொண்ட பேச்சும், எதற்கும் அஞ்சாமல் விசாரணையை மேற்கொள்ள நினைக்கும் ஆர்வமும் கொண்டவராக உள்ளார் அருணா. வழக்க...