Shadow

ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்

The-Girl-in-the-Spider's-Web-curtain-raiser

மில்லினியம் சீரிஸ் என்பது, ஸ்வீடன் எழுத்தாளர் ஸ்டீக் லார்ஸனால் தொடங்கப்பட்ட 10 பாகங்களுடைய க்ரைம் நாவல் தொடர். ஆனால், அவரது எதிர்பாராத மரணத்தால், இது மூன்று பாகங்களோடு நின்றது. அந்த மூன்று பாகங்களுமே கூட அவரது மரணத்திற்குப் பின்பே வெளியானது. மில்லினியம் என்பது ஒரு பத்திரிகையின் பெயர். அதன் புலனாய்வு பத்திரிகையாளர் மிகேல் பிளான்க்விஸ்ட், மற்றும் லிஸ்பெத் சலாண்டர் ஆகிய இருவரும் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். இந்த சீரிஸின், நான்காவது பாகத்தை டேவிட் லாகர்கிரான்ட்ஸ் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இந்த சீரிஸின் முதல் பாகமான, ‘தி கேர்ள் வித் தி ட்ராகன் டேட்டூ’ என்ற பெயரில் 2011 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் டேனியல் க்ரெய்க் தான் அப்படத்தின் நாயகன். தற்போது, மில்லினியம் சீரிஸின் நான்காவது நாவலான ‘தி கேர்ள் இன் தி ஸ்பைடர்’ஸ் வெப்’, திரைப்படமாக வெளிவரவுள்லது. டேனியல் க்ரெய்க்கிற்குப் பதில் ஸ்வெரிர் கட்னசனும், ரூனி மாராவிற்குப் பதில் க்ளெயர் ஃபோயும் நடிக்கின்றனர்.கணிப்பொறியைக் கையாளுவதில் நிபுணத்துவம் கொண்ட பெண் லிஸ்பெத் சலாண்டர். நுழைவதற்குக் கடுமையான கட்டுப்பாடு கொண்ட தளங்களிலும் கூட எளிதாக நுழையக் கூடியவர். இவரும் புலனாய்ப்ய் பத்திரிகையாளரான மிகேல் பிளான்க்விஸ்ட்டும், ஒரு கட்டத்தில் ஒற்றர்கள், ஊழல் மலிந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி, அக்கும்பலின் சதிச் செயல்களை எவ்வாறு தவிடுபொடி ஆக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

2016 இல் வெளிவந்த ‘டோன்ட் ப்ரீத் (Don’t Breathe)’ படத்தை இயக்கிய ஃபெடே ஆல்வரஸ் இயக்கியுள்ளார். 115 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.