The Garfield Movie விமர்சனம்
திங்கட்கிழமையை வெறுக்கும், உணவை மிக மிக விரும்பும், எவரையும் மதிக்காத புசுபுசு புஷ்டி பூனையாகிய கார்ஃபீல்ட், 15 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையைக் காண்கிறது. ஜிம் டேவிஸ் என்பவரால் 1976 இல், காமிக் துண்டாக அறிமுகமான ஆரஞ்சு நிற கார்ஃபீல்ட் பூனை, உலகளவில் பல செய்தித்தாள்களில் பரவலாக இடம்பெற்று, கின்னஸ் சாதனை பெற்றுள்ளது.
கார்ஃபீல்ட் உமிழும் புத்திசாலித்தனமான பகடிகள் தான் அதன் சிறப்பே! இப்படத்தில் அதை அழகாகக் கொண்டு வந்துள்ளனர். சாலையில் தனித்து விடப்பட்டு பரிதாபமாக இருக்கும் பூனையை ஜான் தத்தெடுக்கிறார். ‘ஜான் என்னைத் தத்தெடுக்கலை. நான் தான் ஜானைத் தத்தெடுத்தேன்’ என ஆரம்பிக்கும் கார்ஃபீல்டின் அட்டகாசம் முதற்பாதி முழுவதும் அற்புதமாக விரவியுள்ளது.
விலையுயர்ந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து, எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு, CatFlix பார்க்கும் பரம சுகவாசியாக ராஜவாழ்க்கை வாழ்கிறது கார்ஃ...