
அலோபதியின் லிமிடேஷனை, பாரம்பரிய மருத்துவத்தோடு இணைத்து ஈடு செய்வதுதான் ட்ரைமெட் தொடங்ககப்பட்டதன் நோக்கம். தனது லட்சியப் பயணத்தில், மேலுமொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது ட்ரைமெட்.
கீழ்ப்பக்காத்திலுள்ள பி வெல் மருத்துவமனையில், மருந்துகளுக்கு அப்பால் உள்ள நிவாரணம் பற்றி யோசிக்கக் கூடிய ட்ரைமெடின் மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில்பேசிய பி வெல் மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் சி.ஜெ.வெற்றிவேல், “நவீன மருத்துவமும் பாரம்பரிய மருத்துவத்துடன் கை கோர்த்து மக்களின் நலனில் அக்கறை காட்டுவது மிக ஆரோக்கியமான விஷயம். தற்போதைய தேவை இத்தகைய ஒருங்கிணைப்புதான். நோய் இல்லாமல் இருப்பதோடு, நோயாளிகளின் உடலும் மனமும் நலமாக இருக்க வேண்டியது மிக அவசியம். தமிழ்நாடெங்கும் உள்ள எங்களது பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் அனைத்துக் கிளைகளிலும் இதே போன்று ட்ரைமெட் மையத்தை நிறுவ ஆர்வமாக உள்ளோம்” என்றார்.