ஏப்ரல் 21 வியாழனன்று, தென்னாஃப்ரிக்கக் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்தார். அதில் “ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார். அதில், “மிக்க நன்றி! நான் ஜான்டி ரோட்ஸ் உடைய பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
As a pet lover, am looking forward to watching this movie@Suriya_offl @2D_ENTPVTLTD#OhMyDogOnPrime pic.twitter.com/sAm2I1afY7
— Jonty Rhodes (@JontyRhodes8) April 20, 2022
மகேந்திரன், “#OhMyDog இந்த திரைப்படத்தில் #அர்னவ்விஜய் நடிப்பைப் பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை ஒன்றாகப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ அண்ணா. இந்த இதயபூர்வமான திரைப்படத்தை @PrimeVideoIN இல் பாருங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.
#OhMyDog this movie has my heart seeing #ArnavVijay doing his debut and was so lovely to see three generations of family in the movie . @arunvijayno1 na has always been the best father on both on and off screen . Love u na .Do watch this heartfelt movie on @PrimeVideoIN 🤩 pic.twitter.com/fQsgWO25we
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) April 21, 2022
தயாரிப்பாளர் S.R.பிரபுவும் இந்தக் கோடையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இணைத்து இப்படத்தைப் பார்த்து ரசிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தன் பக்கத்தில், “#OhMyDog குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதைத் தவற விடாதீர்கள்!!” என ட்வீட் செய்துள்ளார்.
#OhMyDog will be a perfect summer treat for kids and family!! Don’t Doss it!! 😍👌🏼 https://t.co/MBRjIPCDbC
— SR Prabu (@prabhu_sr) April 21, 2022