Shadow

Tag: Oh My Dog movie

‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்

‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்

சினிமா, திரைத் துளி
ஏப்ரல் 21 வியாழனன்று, தென்னாஃப்ரிக்கக் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்தார். அதில் "ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார். அதில், “மிக்க நன்றி! நான் ஜான்டி ரோட்ஸ் உடைய பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். https://twitter.com/JontyRhodes8/status/1516742916894445568?t=2sC22H8g5w9YF28haWpTsQ&s=19 மகேந்திரன், "#OhMyDog இந்த திரைப்படத்தில் #அர்னவ்விஜய் நடிப்பைப் பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை ஒன்றாகப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ...
ஓ மை டாக் விமர்சனம்

ஓ மை டாக் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அருண் விஜயின் மகன், மாஸ்டர் அர்னவ் விஜய் நாயகனாக அறிமுகமாகும் குழந்தைகளுக்கான படம். கண் தெரியா நாய்க்கும், சிறுவன் ஒருவனுக்குமான பந்தத்தை மையமாகக் கொண்டது படத்தின் கதைக்களம். சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை படம் உணர்த்தினாலும், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளினை அழுத்தம் திருத்தமாகப் படத்தின் இறுதியில் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடித்துள்ளனர். வீட்டிலுள்ள சுட்டீஸ் குட்டீஸோடு பார்க்க வேண்டிய 'டிஸ்னி' பாணி கதை. வினயை டெம்ப்ளேட் வில்லனாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. ஒரு நாயின் வரவு, எமோஷ்னலாக ஒரு குடும்பத்தை எப்படிப் பிணைக்கிறது என்றில்லாமல், சிறுவனுக்கும் நாயுக்குமான பந்தத்திலேயே நிலைகொண்டுள்ளது படம். அந்த பந்தம், ஹார்ஸ் ட்ரெயினரான அருண் விஜயின் சாமர்த்தியங்களையும் விஞ்சுவதாக உள்ளது. இயல்பு வாழ்க்கையில் சாத்தியமே இல்லாத பல விஷயங்கள்...
ஓ மை டாக் | 100 நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த ட்ரெய்னர் ராஜா

ஓ மை டாக் | 100 நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த ட்ரெய்னர் ராஜா

சினிமா, திரைத் துளி
‘ஓ மை டாக்’ படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியாற்றியுள்ளனர் படக்குழு.அவ்வனுபவம் பற்றிப் பேசிய அருண் விஜய், “இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெய்னர் ராஜாவிற்கு ஒரு பெரிய நன்றி. மேலும் இயக்குநர் சரோவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார்” என்றார்.இயக்குநர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.இந்தக் கணிப்புகளையும், ...
ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

ஓ மை டாக் – மூன்று தலைமுறை நடிகர்களின் நடிப்பில்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிமுக குழந்தை நட்சத்திரம் அர்னவ் விஜய் பேசுகையில்,'' இந்தப் படத்தில் நடிப்பத...
ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

ஓ மை டாக் – டிஸ்னியின் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், ''ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் க...
“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘ஓ மை டாக்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த்து. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசுகையில், ''வால்ட் டிஸ்னி நி...
ஓ மை டாக் | ‘அப்பா, நான், மகன்’ – அருண் விஜய்

ஓ மை டாக் | ‘அப்பா, நான், மகன்’ – அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
திரைப்படத்துறையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது ‘ஓ மை டாக்’ திரைப்படம். மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திரையிலும் சித்தரித்திருக்கிறார்கள். அருண் விஜய், ''இது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. நான் கடந்த காலத்தில் என் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமானது. தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் அறிமுகமாவது, அர்னவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். இது எங்களால் மறக்க இயலாத ஒன்று'' என்றார். மேலும், படப்பிடிப்பு அனுபவம் குறித்து அவர் பேசுகையில், ''மிகவும் அரு...
ஓ மை டாக் – கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாவின் கதை

ஓ மை டாக் – கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாவின் கதை

சினிமா, திரைத் துளி
"ஓ மை டாக் (Oh My Dog)” படம், ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படம் "2டி என்டர்டெய்ன்மென்ட்" பேனரில் தயாரிக்கப்பட்டு, சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த (தாத்தா, அப்பா, மகன் மூவரின்) கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும். அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை விரும்புபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று. "ஓ மை டாக்" அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தைத் தொடும் கதையாகும். ஒவ்வொரு குழந்தையும் குடும்பமும் பார்த்து மகிழவேண்டிய படம். எல்லாக் குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாப...