Shadow

Tag: கமல்

இந்தியன் 2: கனவு நிஜமாகியுள்ளது | கமல்

இந்தியன் 2: கனவு நிஜமாகியுள்ளது | கமல்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” ஆகும். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.நடிகர் கமல்ஹாசன், "இந்த வயதில் இப்படம் செய்யும் ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லாக் கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் ப...
கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

இது புதிது, புத்தகம்
சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. மதன்ஸ்' பேண்ட்-டின் இசை கச்சேரியில், பெரும்பாலும் கமலின் படங்களில் இருந்து ஒரு கலவையான பாடல்களின் தொகுப்பாகவே பாடப்பட்டது, நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல...
“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

இது புதிது
T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்தப் பாடலின் ஹிந்திப் பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு திரு. நாகார்ஜூனாவால் வெளியாக இருக்கிறது. வெளியீட்டு விழாவினில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்கக் கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடலுக்கான ஐடியாவை முதன் முதலில் அவரிடம் ...
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

சினிமா, திரைத் துளி
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்தியேகமாக வெளியானது. வாரயிறுதியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையையும் விக்ரம் படம் படைத்துள்ளது. இந்த மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனத...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் ப...
பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

சினிமா, திரைத் துளி
உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப்-டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்த்துச் செய்தியில், ‘ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாகப்...
பிக் பாஸ் 3 – நாள் 22

பிக் பாஸ் 3 – நாள் 22

பிக் பாஸ்
'உரசாதே' பாடலுடன் தொடங்கியது நாள். கூடுதல் உற்சாகத்துடன் ஆடினார் லியா. வர வர இந்த சாண்டி டான்ஸ் ஆட வருவதே இல்லை. பாடல் முடியும் தருவாயில் ஷெரின் அருகில் நின்ற சாண்டி, தமிழ் சினிமாவில் வருவது போல் குடையால் அவர்களை மறைத்துக் கொண்டு குடையை மட்டும் ஆட்டிக் கண்பித்தார். அதை சரியாக கேட்ச் செய்த கேமரா, எடிட்டிங் டீமுக்கு வாழ்த்துகள். காபி போட லேட்டானதால், கிச்சன் ஏரியாவில் காபி, காபி என்று கெரொ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சரவணனும், மோகனும் சைகையில் பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த காட்சியில் மோகன் சரவணன் பற்றிப் புகார் சொல்ல ஆரம்பித்தார். சாக்‌ஷி, ரேஷ்மா அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். தன்னைத் தொடர்ந்து அவமதிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும் சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் மோகன். இல்ல தெரியாமல்தான் கேக்கறேன். இப்படி யாராவது நம்மளை அவமானபடுத்தினால் முதலில் நமக்குக் கோவம...
பிக் பாஸ் 3 – நாள் 21

பிக் பாஸ் 3 – நாள் 21

பிக் பாஸ்
அட்டகாசமான உடையில் கமல் என்ட்ரி கொடுத்தார். நேராகவே நிகழ்ச்சிக்குள் போய் விட்டார். தர்ஷன், மீரா இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிக் கேட்ட போது தான், பார்வையாளர்களுக்கே சில விஷயம் தெரிய வந்தது. அதாகப்பட்டது மீரா தர்ஷன் அழகுல மயங்கி, 'எங்க அம்மாட்ட வந்து பேசு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ' எனச் சொல்ல, 'இந்தாம்மா எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இத்தோட இந்தப் பேச்சை விட்டுடு' என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிருக்கார் தர்ஷன். மீரா அந்தப் பேச்சை விடவில்லை. 'வீட்டில இருப்பவரிடம் எல்லாம் வேற சொல்லிக் கொண்டிருக்கிறாங்க' என தர்ஷன் கம்ப்ளையிண்ட் பண்ணினார். 'அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும்' எனப் பேச ஆரம்பித்து, மீரா முடித்த போது, கமல் உட்பட பார்த்தவர் அனைவருமே ரவிமரியா நிலைமையில் தான் இருந்தனர். அப்படி ஒரு நான்-ஸ்டாப் பேச்சு. இந்த விஷயம் அரசல் புரசலா தான் நமக்குக் காட்டப்பட்டது. ஆனா மீரா பேசும் போது அதி...
பிக் பாஸ் 3 – நாள் 14

பிக் பாஸ் 3 – நாள் 14

பிக் பாஸ்
முதலில் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். அது கமலின் உற்சாகம். கலக்கலான ட்ரெஸ்ஸொட செம்ம எனர்ஜியோடு இருந்தார். நேரடியாக நேற்றைய நிகழ்வுகளோட தொடர்ச்சி நடந்தது. அபிராமி மாற்றி ஓட்டு போட்டது தான் ஹாட் டாபிக். வெளியே சாக்‌ஷியோட பேசிக் கொண்டிருந்த அபி, 'இது என்னோட சொந்த முடிவு, அந்த டைம்ல எனக்கு அந்த முடிவு சரியா இருந்தது. மீரா கூட தான் எனக்கு பிரச்சினை' எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வனிதா அங்கே வந்தார். அப்பொழுது ஆரம்பித்து அடுத்த 15 நிமிஷத்துக்கு அபிராமியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் எப்பவும் போல். 'நான் என்ன சொல்ல வர்றேன்' என அபி ஆரம்பித்தால், அடுத்த 5 நிமிஷத்துக்கு வனிதா தான் பேசுகிறார். அபியால் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியவில்லை. வெளியே பேசிக் கொண்டிருந்த போது, 'உன் உரிமைடா' எனப் பேசிக் கொண்டிருந்த சாக்‌ஷி, உள்ளே போனவுடனே வனிதாவுக்கு ஜால்ரா போடுகிறார். கூடவே ஷெரின் வேற. 'நீ...
பிக் பாஸ் 3 – நாள் 13

பிக் பாஸ் 3 – நாள் 13

பிக் பாஸ்
ஒரு புதிய நாள், சாண்டியோட பிறந்த நாள் வாழ்த்துக்களோட ஆரம்பித்தது. முதல் டாஸ்க் அபிராமி மத்த ஹவுஸ்மேட்ஸுக்கு நவரசங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அபிராமி என்ன சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியவில்லை. ஆனால், சாண்டி + பாத்திமா ஜோடி அப்ளாஸ் அள்ளிவிட்டது. கிச்சனில் வனிதா கிட்ட மதுவைப் பற்றி கம்ப்ளெயின்ட் பண்ணிக் கொண்டிருந்தார் மீரா. புடவை கட்டிவிட வந்ததாகவும், ஆனா கடைசி நேரத்தில் மாட்டேன் எனச் சொல்லி பாத்திமா தான் ஹெல்ப் பண்ண வந்ததாகவும் மீரா சொல்ல, வனிதா மண்டைக்குள்ள உடனே பல்பு எறிந்திருக்கும் போல. சினிமாவில் எதிரெதிராக இருக்கிற இரண்டு கேங்ஸ்டர்கள் ஒன்று சேரும் போது, எதிரி கூட்டத்தில் இருந்து தனக்கு உளவு பார்த்த அடியாள் ஒருத்தனைப் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரி, 'பாத்திமா உன்னைப் பார்த்து நேரோ மைண்டட்னு சொன்னா' என மீராவிடம் போட்டுக் கொடுத்தார் வனிதா. மீராவும் உடனடியாக தன் ம...
“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். "ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டே தொடங்கினோம். இந்தக் கம்பெனிக்கு ராஜ்கமல் என்று தான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்து தான் அதில் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவைக் கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளாம். இந்தப் படத்தை விக்ரமிற்காகக் கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும். ‘யாருய்யா இந்த ஆளு? கண்டிப்பா நல்லா வருவான்’ என மீரா படம் பார்த்துச் சொன்னேன். அப்பொழுது விக்ரம் யாரென எனக்குத் தெர...
“கமல் இப்படிச் செய்யலாமா?” – சுரேஷ் காமாட்சி

“கமல் இப்படிச் செய்யலாமா?” – சுரேஷ் காமாட்சி

சினிமா, திரைச் செய்தி
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, "ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமர்ஷியலாகப் படமெடுத்துச் சம்பாதித்து விட்டுப் போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனைப் பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலைத் தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ்த் ...
மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

சினிமா, திரைச் செய்தி
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. கவிஞர் வெண்ணிலா பேசும்போது, "எனது நண்பன் இயக்குநர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குநர் பாரதிராஜாவைச் சந்திப்பதற...
விஸ்வரூபம்.. II விமர்சனம்

விஸ்வரூபம்.. II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன? ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர். அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. 'சீசியம் பாம்'-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில...