Shadow

ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )

வணக்கம் தோழிகளே,

IMG_20181014_232152

அசைவப் பிரியர்களுக்கு, மிகப் பிடிச்ச ஒரு உணவுகளில் ஆட்டுத்தலை வறுவலும் இடம்பெறும். இது சாப்பாட்டுக்கும் அருமையா இருக்கும், சப்பாத்தி, தோசைக்கும் அருமையா இருக்கும். கொலஸ்ட்ரால் இருக்கறவங்க சாப்பிட்டராதீங்க. சுவையான ஆட்டுத்தலை வறுவல் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். வாங்க. 🙂

தேவையான பொருட்கள்:

  1. ஆட்டுத்தலை – 1
  2. வெங்காயம் – 1 கப்
  3. மிளகு – 1 ஸ்பூன்
  4. கரிவேப்பிலை – கைப்பிடி
  5. பச்சை மிளகாய் – 2
  6. விளக்கெண்ணெய் – 4 ஸ்பூன்
  7. கடுகு – ½ ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
  9. உப்பு – தேவைக்கு
  10. பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்)
  11. கொத்துமல்லி தூள் (கறி மசாலா தூள்)-  2 கரண்டி

Step 1:

IMG_20181014_082659

பாத்திரத்தில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊத்தி  வெங்காயம், மிளகைப் போட்டு வதக்கவும்.

Step 2:

                                IMG_20181014_084133  IMG_20181014_084421

வதங்கியதும் மிக்சியில், தேவையான அளவு தன்ணீர் விட்டு வெங்காயத்தையும், கறி மசாலா தூளையும் போட்டு அரைக்கவும்.

Step 3:

IMG_20181014_090357 IMG_20181014_090544

குக்கரில், எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், தட்டி வைத்த பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

Step 4:

        IMG_20181014_090654 IMG_20181014_090719

பிறகு, அதற்குள், சுத்தம் செய்த ஆட்டு தலைக்கறியைப் (ஆட்டு மூளையைத் தனியாய் எடுத்து வைக்கவும்) போட்டு, 1 ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

Step 5:

IMG_20181014_090841  IMG_20181014_091016

அரைத்து வைத்துள்ள, மசாலா கலவையைக் குக்கரில் கொட்டவும். 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு குக்கரில் மூடி போட்டு, 4-5 விசில் வரை வேக விடவும்.

Step 6:

IMG_20181014_091111  IMG_20181014_093121

குக்கர் ஆறியதும், மூளையைக் கரைத்து விட்டுக் கொதிக்க விடவும். நல்லா கிரேவி பதம் வரும்வரை கொதிக்கவிட்டு பிறகு இறக்கிப் பரிமாறவும்.

IMG_20181014_092932

சுவையான ஆட்டுத்தலை வறுவல் தயார்.

– வசந்தி ராஜசேகரன்