Shadow

மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

ஓல குடிசையில கனவு கண்டாளே!
கனவு அது பலிக்கும் முன்னே – கலைஞ்சு போனாளே!
அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா
பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா!

அழுத ஈரம் காயலையே!
அழுத ஈரம் கண்ணில் காயலையே!
நியாயம் தேடிப் பார்த்தும் கிடைக்கலையே!
வேதம் நூறு இருந்தும்
ஒரு தெய்வம் காக்கலையே!!
பாவி சனம் நாங்க
உன் சேவை பெற
அது வாய்க்கலையே!

பாவி மக எங்க போவா?
பாவம் அவ என்ன செய்வா
நீட்ட கரம் கொண்டு
சேவை குணம் கொண்டு
பல நாள் கனவா – நீ உழைச்ச
நீட்ட கரமின்றி
ஏத்த ஆளின்றி
தனியா போராடி வளர்ந்த
உன் கனவெல்லாம் வெறும் கல்வி தானே
முடிந்தவரை நீ நீதி கேட்டாயே!

ஏழையாய்ப் பிறந்தது அவள் தவறா?
உயர் கல்விக்கு ஆசைகள் அது தவறா?
பிஞ்சுயிர் போகுமுன் யார் தடுத்தா?

மகராசிஈஈ..
உயிர் போகுமுன் யார் தடுத்தா?
ஒருநாள் பொழுதில்
எல்லாம் மாறிப் போச்சு
மாரி பொழிஞ்சு
ஏறி உடைஞ்சு போச்சு.

ஓல குடிசையில கனவு கண்டாளே!
கனவு அது பலிக்கும் முன்னே – கலைஞ்சு போனாளே!
அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா
பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா!