Shadow

பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

bigg-boss-day-46

‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி விட்டனர். உண்மையில் இது கஸ்தூரிக்கான இன்ட்ரோ பாடலாம். நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தர்ஷன் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். கவின் முட்டைகோஸ் நறுக்கிக் கொண்டிருந்தார். அது என்ன சைஸில் வேணும் என மதுமிதா சீன் போட்டுக் கொண்டிருந்தார். கவினும், சாண்டியும் சிம்புவின் குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சிம்பு படம் ட்ராப் ஆனது அதுக்குள் அங்கே தெரிந்திருக்கும் போல. படம் ட்ராப் ஆனாலும் ட்ரெண்டிங்கில் இருக்க சிம்புவால் தான் முடியும். சிம்பு வாய்ஸில், சாண்டியை விட கவின் தான் நல்லா பேசறார்.

இப்பொழுது விஷயம் என்னவெனில் மதுமிதாவைத் தவிர யாருக்குமே சமைக்கத் தெரியாது. வனிதா, சரவணன், ரேஷ்மா தான் இப்ப வரைக்கும் மெயின் குக்கிங். ரேஷ்மாவும் சரவணனும் ஒரே வாரத்தில் போனதால் இப்ப சாப்பாட்டுக்குத் தவிக்கின்றனர். மதுவுக்கும் ஓரளவுக்கு தான் சமைக்க வருகிறது. அடுத்த நாமினேஷன்ல மது பேர் சொல்வதற்கு முன்னாடி சோறு கண்ணு முன்னாடி வந்து போகும்.

கஸ்தூரி வரப்போறாங்க என ப்ரமோவில் தெரிந்துவிட்டது. ஆனால் ஹவுஸ்மேட்ஸை வெளியே அனுப்ப வைப்பதென ஒரு மொக்கை டாஸ்க். ப்ப்ப்பாஆஆ. இதற்கு எல்லோரையும் அழைத்துக் கொஞ்ச நேரம் வெளியே இருங்க எனச் சொல்லிருக்கலாம். டாஸ்க் முடித்தால் ஒரு பரிசு எனச் சொல்லிருந்த பிக் பாஸ், லிவிங் ஏரியாவில் ஒரு பெரிய பெட்டி வைத்துவிட்டுப் போய்விட்டார்.

டாஸ்க் முடிந்து யாருமே வீட்டுக்குள்ளேயே வரவில்லை. மது மட்டும் உள்ளே வந்தவர், ‘சித்தன் போக்கு, சிவன் போக்கு’ மாதிரி நேராகப் பெட்ரூம் போய் தண்ணியைக் குடித்து விட்டு மறுபடியும் நேராக வெளியே போய்விட்டார். அப்புறமும் யாருமே வீட்டுக்குள்ளேயே வரவில்லை. பொறுத்துப் பார்த்த பிக் பாஸ், ஸ்டோர் ரூமிற்கானமணியை ஒலித்தார். பரிசு வந்துவிட்டதென மது, சாண்டி எல்லாரும் உள்ளே ஓட, அப்பவும் நேராக ஸ்டோர் ரூமுக்கு முன்னாடி நின்று கதவைத் திறங்க எனத் தட்டிக் கொண்டடிருந்தனர். கடைசியாக லோஸ்லியா தான் அந்தப் பெட்டியைப் பார்த்தார்.

வெளியே வந்த கஸ்தூரியைப் பார்த்து, ‘நான் எதிர்பார்த்தேன்’ என சாண்டி சொன்னார். மற்ற எல்லோருமே ஏதேதோ ரியாக்ஷன் கொடுத்தனர். ஷாக் ஆகிட்டாங்களாமாம். முதல் கேள்வியாக, “உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?” என்று தான் கேட்டனர் ஹவுஸ்மேட்ஸ். சோறு முக்கியம்.

அறிமுகப்படலம் முடிந்து, வீட்டைச் சுற்றிப் பார்க்கப் போன கஸ்தூரி, ‘பிக் பாஸுக்கு எதுக்கு வந்தீங்க?’ என ஒவ்வொருவரிடமும் பேச ஆரம்பித்தார். வந்த உடனே இதை செய்யவேணுமா? தினம் இரண்டு பேர், மூன்று பேர் எனப் பேசியிருக்கலாம். கன்டென்டாவது கிடைத்திருக்கும். எல்லோரும் இவர்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கும் போதே, பேசுவதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது? ஆளாளுக்கு பேசிக் கொண்டே இருந்டனர். வகைதொகை இல்லாமல் எல்லோருக்கும் அட்வைஸாக அள்ளி தெளித்துக் கொண்டிருந்தார். இதில் என்ன பிரச்சினை என்றால், அங்கே தொடர்ந்து இருக்கும் போது அவர்களை அறியாமலே அவர்கள் வெளிப்பட்டுவிடுவார்கள். ‘வந்தன்னிக்கு நமக்கு அட்வைஸ் பண்ணினாங்க. இப்ப அவங்க என்ன பண்றாங்க பாரு?” என வந்து நிற்கும்.

இன்று முதல் கேம் மாறப் போகிறது என சேரன் சொல்ல, ‘அதெல்லாம் ஒன்னும் ஆகாது சார்’ என கவுன்ட்டர் கொடுத்தார் ஷெரின். ‘ஏதாவது இன்ட்ரெஸ்ட்டா நடக்கும்ன்னு சொன்னேன்’ என சேரன் சமாளித்தார்.

இந்த வார சிறந்த பெர்ஃபாமர்களைத் தேர்ந்தெடுக்கும் மீட்டிங் நடந்தது. 6 வாரமாகப் புலம்பி தள்ளினதால், இந்த வாரம் சேரன் பேரைச் சொல்லி விட்டனர். சாண்டி, சேரன் டாஸ்க் பெர்ஃபாமர்ஸ், லோஸ்லியா ஓவர் ஆல் பர்பாமர். மூன்று பேரும் தான் கேப்டன் பதவிக்குப் போட்டியிட வேண்டும். அதற்கு முன், ‘நான் ஏன் கேப்டனாகணும்?’ என கஸ்தூரியிடம் ப்ரன்டேஷன் கொடுக்கவேண்டுமாம்.

லோஸ்லியா கொஞ்சம் தெளிவாக, ஓப்பனாகப் பேசினார். இந்த வாரம் ஜெயில் கிடையாது எனச் சொன்ன கஸ்தூரி, அதற்குப் பதிலாகத் தனக்கு சில ஸ்பெஷல் பவர் கொடுத்திருப்பதாகவும், அதை தான் உபயோகப்படுத்த வேண்டுமெனவும் சொல்லி ஒவ்வொன்றாகச் சொன்னார்..

அதன்படி மது, தர்ஷனுக்கு குடை பிடிக்கவேண்டும்; யார் பாத்ரூம் போனாலும் அபி பாட்டு பாடவேண்டும்; சாக்ஷி தலைகீழாக நிற்கவேண்டும்; கவின், ‘மன்னித்து விடு’ என மூக்கால் எழுதவேண்டும். இதையெல்லாம் ஒவ்வொருவராக செய்து நேரத்தைக் கடத்தினர்.

டேய் கன்டென்ட் எங்கடா?

– மகாதேவன் CM

மக்கள் கிட்ட நல்ல அறிமுகம் இருக்கற ஒரு முகமா கஸ்தூரி உள்ள வந்துருக்காங்க. அவங்களே சொன்னா மாதிரி 45 நாள் இந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு வந்ததால எல்லாரையும் பத்தி ஒரு ஐடியா இருக்கும். அதே சமயம் ஹவுஸ்மேட்ஸும் கொஞ்சம் அலர்ட்டா தான் இருப்பாங்க. இப்போதைக்கு வீட்டுக்குள்ள பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்ல.

அதான் நான் வந்துட்டேன்ல்லனு கஸ்தூரியோட மைண்ட் வாய்ஸ் கேக்குது. பார்க்கலாம்.