Shadow

Tag: ARR

மைதான் விமர்சனம்

மைதான் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா. யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில், அதை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்கிறார் S.A.ரஹீம். செகந்திராபாத்தின் குடிசைப் பகுதியில் இருந்து துளசிதாஸ் பலராமனையும், கல்கட்டாவிலிருந்து பிரதீப் குமார் பேனர்ஜியையும் தேர்ந்தெடுக்கிறார். பலமான இந்திய அணியை உருவாக்க...
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

சினிமா, திரைத் துளி
  ஒரு திரைப்படம் உருவாக மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வெகு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு விழாவிலும், சரியான அங்கீகாரமும் அடையாளமும் கிடைப்பதில்லை. இதனைக் கலையும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், FM சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்தவொரு பாடல் ஒலிபரப்புவதற்கு முன்பும், அந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லித்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. FM நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு கெளரவத்தினையும் மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது. இதே போல், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்குக்ம் விழாக்களில், விருது அறிவிக்கும் போது தயாரிப்பாளரின் பெயரையும், அந்த நிறு...