Shadow

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

வணக்கம் நண்பர்களே,

IMG_20181013_231817 - Copy

சேனைகிழங்கு பார்க்க கரடுமுரடா இருந்தாலும் நிறைய சத்து இருக்குதுங்க. இந்த பைல்ஸ், உடம்புசூடு இருக்கறவங்களுக்கு, இது கண்டிப்பா சாப்பிட வேண்டிய உணவு. இதில், விட்டமின் பி இருக்கறதால, லிவர்க்கும் நல்லது. சரி சாப்பிட நல்லாருக்காதோ அப்படின்னு டவுட் வருதா???? சாப்பிட செம்மயா இருக்கும். இப்படி செஞ்சு பாருங்க…

தேவையான பொருட்கள்:

சேனை கிழங்கு- ½

பெரிய வெங்காயம் – 1

வரமிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – கைப்பிடி

தேங்காய்- ½ மூடி

செய்முறை:

Step:1

IMG_20181013_084049 IMG_20181013_084724

சேனைகிழங்கை மேல் தோல் சீவி விட்டு, சின்னச் சின்னதா நறுக்கி, குக்கர்ல போட்டு, 2 கப் தண்ணீர், விட்டு 3 விசில் வரை வேக விடவும். ஆறியதும், தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும்.

Step 2:

IMG_20181013_084837

பாத்திரத்தில் எண்ணெ ஊற்றி, கடுகு போட்டு, பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

Step: 3                                    IMG_20181013_084951

வேகவைத்த, சேனைகிழங்கைக் கொட்டி, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசிக்கவும். ஏற்கனவே குக்கரில் வெந்ததால் நன்றாகக் குழைய மசியும்.

Step: 4
IMG_20181013_085207

நன்கு மசித்ததும், தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளறவும். சுவையான சேனைகிழங்கு பொடிமாஸ் ரெடி.

IMG_20181013_231817

சாப்பாடு கூடவும் சாப்பிடலாம். சப்பாத்திக்கும் சூப்பரா இருக்கும். செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்க.

– வசந்தி ராஜசேகரன்