Shadow

Tag: அருண்ராஜா காமராஜ்

சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ என...
நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

சினிமா, திரைச் செய்தி
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் & பேவியூ ப்ராஜெக்ட்ஸுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஓர் அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 ஆவது நாளைப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளி...
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். "காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய 'முகம்' இந்தப் படத்தைக் காப்பாற்றும்" என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். 'என் முகம் என...
தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

சினிமா, திரைச் செய்தி
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடும். "நாங்கள் வசனம் எழுதும்போது, எந்தக் கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புக...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது. "விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை. கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ...
கொடி இசை – ஒரு பார்வை

கொடி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர். 1. பாடல் - ஏய் சுழலி பாடியவர்கள்: விஜய்நரைன் ரங்கராஜன் விவேக் வரிகளில் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்டிக் நாட்டுப்பாடல் இது. ஒரு அழகான நாட்டுப்பாடலுடன் ஜாஸை கலந்து ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார் சந்தோஷ். விஜய் நரைன் குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 2. பாடல் - சிறுக்கி வாசம் பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் சந்தோஷ் நாராயணன் இசையில் இன...
ஆட்டைக்கு ரெடியா? – ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ பாடல்

ஆட்டைக்கு ரெடியா? – ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ பாடல்

Songs, காணொளிகள், சமூகம், வர்த்தகம்
"ஆட்டைக்கு ரெடியா? லந்தக்கூட்டு அலும்ப ஏத்து. அலப்பறையா ஆட்டம் போட்டுபந்த போட்டு பறக்க விட்டு ஓசி காஜி.. அடிச்சா மாத்து. என்னா பங்கு?ஆட்டைக்கு ரெடியா? ரெடியா? ரெடியா?செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா?மாமா.. செம்மிர்வோமா? செம்மிர்வோமா? ஹேய்.. செம்மிர்வோமா? செம்மிர்வோமா?மதுரை மண் வாசம் அவிங்க பாசம். புழுதி புயல் வீசும் இவிங்க ரோஷம். நட்ப உசுராக்கும் இதுக கொசுறாக்கும். ஒத்தைக்கு ஒத்தை மோத வேணா கொத்தா மோதலாமா?என்னா பங்கு!ஆட்டைக்கு ரெடியா? ஆட்டைக்கு ரெடியா?செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா? செம்மிர்வோமா?மதுரை.. சிறப்பு!...
‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு

சமூகம்
விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் ஒன்றான 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' நேற்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை க்ரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். "தமிழ்நாடு பிரிமீயர் லீக்' வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி, மாநில அளவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாகவும் விளங்குகின்றது. இந்த 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காண இருக்கிறது. இதன் அணியில் இருந்து பல வீரர்கள் ஏ-கிளாஸ் கிரிக்கெட்டிலும், சர்வதேப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள்" என்று 'மதுரை சூப்பர் ஜ...