Shadow

Tag: அவள் movie

அவள் விமர்சனம்

அவள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, 'அவள்' என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு. ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் என்றால் காமெடிப் படமென அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில். அதிலிருந்து விலகி, சீரியசனாதொரு படமாக இது உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தார்த்தாலும், இயக்குநர் மிலிந் ராவாலும் எழுதப்பட்ட கதை இது. கதாசிரியர்களாக இருவரின் கூட்டணி அபார வெற்றி பெற்றி...
“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

சினிமா, திரைத் துளி
சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள "அவள்" திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். 'வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார். விக்ரம் வேதா போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கெனப் பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் 'அவள்' படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளார். 'அவள்' குறித்து சித்தார்த் பேசுகையில், ''திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உ...