Shadow

Tag: ஆடுகளம் முருகதாஸ்

நந்திவர்மன் விமர்சனம்

நந்திவர்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பல்லவர் காலத்தில் செஞ்சி நகரை ஆண்டு வந்த நந்திவர்மன் என்கின்ற அரசன், தன் ஊரை கொள்ளையிட வந்த கொள்ளையர் கூட்டத்தினை விரட்டியடிக்கும் முயற்சியில் மாண்டு போகிறான். அதனைத் தொடந்து அந்த ஊரும், நந்திவர்மன் பூஜித்து வந்த சிவபெருமான் கோவிலும் பூமிக்குள் புதையுண்டு போனதாக நம்பப்படுகிறது.  இதை அறிந்து கொள்ளும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர், செஞ்சி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தி புதையுண்ட கோவிலையும், நந்திவர்மனின் வரலாற்றை மீட்டு உலகிற்கு உரைக்க முடிவு செய்து, ஒரு குழுவாக செஞ்சி பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அந்த ஊரில் சிலர் இரவு நேரத்தில் அந்த கோவில் புதையுண்ட பகுதிக்கு சென்று மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அந்த ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் ஊர் மக்கள் அந்தக் கோவில் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய...
ரங்கோலி – விமர்சனம்

ரங்கோலி – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புள்ளி வைத்து கோலம் போடுவது ஒரு அழகான கலை. கோலத்தின் முதல் புள்ளி எது..? முற்றுப்புள்ளி எது என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏனென்றால் கோலத்தினை நீங்கள் எங்கும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.  அதன் அழகியலே ஒரு புள்ளியில் தொடங்கி ஒவ்வொரு பக்கமும் அழகாய் விரிவது தான்.  ஆனால் இந்த வரையறை பெரும்பாலும் சினிமாவிற்கு ஒத்துவராது.  ஒரு புள்ளியில் தொடங்கி பல்வேறு பக்கங்களில் விரிவதற்கான அழகியல் அல்ல சினிமா.  அது பல்வேறு கதைகளாகத் துவங்கி ஒரு புள்ளியை நோக்கி குவிதற்கான அழகியல்.  ரங்கோலி திரைப்படம் தவறவிடுவது அதைத்தான். படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்ததும், “DON’T JUDGE THE BOOK BY ITS COVER” என்ற சொல்லாடல் நினைவிற்கு வந்தது.  அடுத்து இன்னும் சில காட்சிகள் கடந்ததும், “SOMETIMES WE HAVE TO JUDGE THE BOOK BY IT’S COVER ITSELF” என்று எண்ண வைத்தது.  ஏனென்றால்  படம் துவங்கிய சில நிமிடங்கள...
ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம்

ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம்

சினிமா, திரைத் துளி
க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள். நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. “பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையைக் காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாகியிருக்கோம்” என்றார் இயக்குநர் ஹென்...
’96 விமர்சனம்

’96 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், அப்படி க்யூட்டான பால்யம் வாய்க்கப் பெறாதவர்களுக்குக் கூட, அந்தக் குறுகுறுப்பான ஓர் இனிய அவஸ்தையை உண்டாக்கிவிடுவது தான் 96 படத்தின் சாதனை. பள்ளிப்பருவத்தில், ஜானகி பாடும் பாடல்கள் அனைத்தும் மிக அட்டகாசம். இளையராஜாவை ஏன் போன மில்லியனத...
அஞ்சல விமர்சனம்

அஞ்சல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூற்றாண்டு விழா (1913 - 2013) காணும் 'அஞ்சல தேனீர் விடுதி'யைப் பற்றிய படமிது. ராமய்யா - முத்திருளாண்டி என தாத்தா - பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன். கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், 'கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள' பாடல் ஈர்க்கிறது. வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனிடம...
ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார். பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யு...