Shadow

Tag: ஆனந்தராஜ்

வாஸ்கோடகாமா விமர்சனம்

வாஸ்கோடகாமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
  வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள். அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கைதாகும்போது, அவரது அண்ணன் மகாதேவன் பணம் கொடுத்து மீட்கிறார். அந்த அண்ணனின் சுண்டு விரலில் காயம் ஏற்பட, நரக (Naraka Multispeciality Hospital) மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சனை என ஐ.சி.யூ.வில் சேர்த்து அனுப்பி வைத்துவிடுகின்றனர். அறமற்ற மருத்துவமனைக...
உயிர் தமிழுக்கு விமர்சனம்

உயிர் தமிழுக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பில் வரும் தமிழ் என்பது நம் தாய் மொழி தமிழ் அல்ல. படத்தில் வரும் நாயகியின் பெயர் தமிழ். இப்பொழுது உயிர் தமிழுக்கு என்ன மாதிரியான படம் என்பது புரிந்திருக்கும். இது ஒரு காதல் படம். காதல் படத்தில் அமீருக்கு என்ன வேலை என்ற கேள்வி வந்துவிடும் என்று எண்ணி, காதல் கதை நடக்கும் பின்புலத்தை அரசியல் ஆடுகளமாக மாற்றி இருக்கிறார்கள். எதிர் எதிர் கட்சிகளில் பயணிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல். கட்சி பகைமை, நாயகன் மீது விழும் கொலைபழி இவற்றைக் காரணம் காட்டி காதலைக் கழுவேற்றப் பார்க்க, காதல் கரை சேர்ந்ததா இல்லையா என்பதே இந்த உயிர் தமிழுக்குப் படத்தின் கதை. எதிர்கட்சியின் மாவட்ட செயலாளரான ஆனந்த்ராஜ் தன் மகள் தமிழை வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடச் செய்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது காதல்வயப்படும் நாயகன் அமீர், தானும் அரசியலில் குதித்தால் தான் நாயகியோடு நெருக்கமாக...
”சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்” – ஞானவேல்ராஜா

”சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்” – ஞானவேல்ராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை  2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்...