Shadow

Tag: இமான் அண்ணாச்சி

உயிர் தமிழுக்கு விமர்சனம்

உயிர் தமிழுக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பில் வரும் தமிழ் என்பது நம் தாய் மொழி தமிழ் அல்ல. படத்தில் வரும் நாயகியின் பெயர் தமிழ். இப்பொழுது உயிர் தமிழுக்கு என்ன மாதிரியான படம் என்பது புரிந்திருக்கும். இது ஒரு காதல் படம். காதல் படத்தில் அமீருக்கு என்ன வேலை என்ற கேள்வி வந்துவிடும் என்று எண்ணி, காதல் கதை நடக்கும் பின்புலத்தை அரசியல் ஆடுகளமாக மாற்றி இருக்கிறார்கள். எதிர் எதிர் கட்சிகளில் பயணிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல். கட்சி பகைமை, நாயகன் மீது விழும் கொலைபழி இவற்றைக் காரணம் காட்டி காதலைக் கழுவேற்றப் பார்க்க, காதல் கரை சேர்ந்ததா இல்லையா என்பதே இந்த உயிர் தமிழுக்குப் படத்தின் கதை. எதிர்கட்சியின் மாவட்ட செயலாளரான ஆனந்த்ராஜ் தன் மகள் தமிழை வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடச் செய்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது காதல்வயப்படும் நாயகன் அமீர், தானும் அரசியலில் குதித்தால் தான் நாயகியோடு நெருக்கமாகப்...
அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாப்பட்டி என்கின்ற கிராமத்தில் இன்றளவும் இருந்து வரும் சாதியக் கொடுமைகளைப் பற்றி ஆவணப்படுத்தும் திரைப்படம் தான் அரிமாப்பட்டி சக்திவேல். கதை என்று பார்த்தால் பழகி சலித்தக் கதை தான். கீழ் சாதி என்று சொல்லப்படுப்படும் வகுப்பை சேர்ந்த நாயகன், மேல் சாதி என்று சொல்லப்படும் வகுப்பை சேர்ந்த நாயகி. இருவருக்குமான காதல், சாதிய பாகுபாட்டால் அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பு, தனிப்பட்ட முறையில் நாயகனுக்கு முதலில் இயக்குநராக வேண்டும், பின்பு தான் திருமணம் என்கின்ற லட்சியம், இந்தப் பிரச்சனைகளையெல்லாம் கடந்து காதல் கைகூடியதா..? இல்லையா..? என்பதே அரிமாப்பட்டி சக்திவேலின் மொத்தக் கதை. கதையாகவும் திரைக்கதையாகவும் பார்த்தால் எந்த வித புதுமையும் சுவாரஸ்யமும் இல்லை. குறைந்தபட்சம் காட்சி அமைப்புகளாவது ஈர்ப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறதா..? என்றால் அதுவும் இல்லை. சமூகத்தில் நில...
அஞ்சல விமர்சனம்

அஞ்சல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூற்றாண்டு விழா (1913 - 2013) காணும் 'அஞ்சல தேனீர் விடுதி'யைப் பற்றிய படமிது. ராமய்யா - முத்திருளாண்டி என தாத்தா - பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன். கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், 'கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள' பாடல் ஈர்க்கிறது. வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனிடம...