Shadow

Tag: இயக்குநர் சிவா

விஸ்வாசம் விமர்சனம்

விஸ்வாசம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எவருக்கு எவர் மீது விசுவாசம் எனத் தெரியவில்லை. நான்காவது முறையாகத் தொடர்ந்து இணைகின்றனர் இயக்குநர் சிவாவும், அஜித்குமாரும். தனது மனைவி நிரஞ்சனா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழ்கிறார் தூக்குதுரை. மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க களமிறங்குகிறார் தூக்குதுரை. ஸ்வேதாவிற்கு யாரால் ஏன் ஆபத்து என்பதும், அதிலிருந்து எப்படி தன் மகளை மீட்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. வீரம் படத்தின் 2.0 என்றே சொல்லவேண்டும். வேஷ்டி சட்டையும், வெண் தாடி முடியும், இரண்டு படத்தின் அஜித்தின் உருவ அமைப்பிற்குப் பொருந்துவது மட்டுமல்லாமல், சொந்த ஊரில் அலப்பறையைக் கூட்டும் முதல் பாதி, நாயகியின் ஊரில் வில்லனிடமிருந்து மகளைக் காப்பாற்றும் இரண்டாம் பாதி என கதையிலும் பெரிய மாற்றமில்லை. ஆனால், வீரம் படத்தில் சந்தானத்துட...
விவேகம் விமர்சனம்

விவேகம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக இணைகின்றனர். கிராமம், நகரம் என்று பயணித்தவர்கள், தேசிய எல்லைகளைக் கடந்து, Counter Terrorist Squad இல் பணிபுரியும் சர்வதேசக் காவலனாக அஜித்தை ப்ரோமோட் செய்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கிறார்கள் ஏஜென்ட் ஏ.கே.வின் நண்பர்கள். துரோகத்தில் இருந்து மீண்டு, நண்பர்களையும் பழி வாங்கி, உலகையும் எப்படிக் காக்கின்றார் என்பதுதான் படத்தின் ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை. அக்ஷரா ஹாசனின் அத்தியாயம் மிக அழகாய் வந்துள்ளது. நடாஷா என்ற பாத்திரத்தில் அவர் முகம் காட்டும் பதற்றம், அவரது ஹேர்ஸ்டைல், உடை என எல்லாமுமாகச் சேர்ந்து அற்புதமாய் உள்ளது. நடாஷா ஒரு ஹேக்கர் என்பதைக் கேள்விகளின்றி ஏற்க முடிகிறது. அவரைப் பிடிக்க, அஜித் செயல்படுத்தும் பிளான் 'பி (B)' ரசிக்க வைக்கிறது. குண்டு மழைக்கு நடுவில் அநாயாசமாய்ப...
வேதாளம் விமர்சனம்

வேதாளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு 'தல' தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை. வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், 'உனக்கு குழந்தைச் சிரிப்பு' என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார். ‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் ...
வீரம் விமர்சனம்

வீரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர். படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக...