Shadow

Tag: இயக்குநர் சுராஜ்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வடிவேலின் கம்-பேக் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என கதை சொல்லி பில்டப்பை ஏத்தும், தலைநகரம் படத்து நாய்சேகருக்கும், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் மாறுபட்ட கதையிலும் வேடத்திலும் வடிவேலு தோன்றியூள்ளார். பணக்காரர்களின் நாய்களைத் திருடி, அவர்களிடம் பணம் பெற்றுக் கோண்டு நாயை ஒப்படைக்கும் திருடன் சேகர். தாஸ் எனும் தாதாவின் நாயைத் தெரியாமல் திருடி விட, சேகர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அதே சமயம், சேகரின் குடும்பத்திலிருந்து திருடப்பட்ட நாய் பற்றித் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் சேகர். நாயை மீட்டானா, தாஸிடமிருந்து தப்பினானா என்பதே படத்தின்கதை. ஆன்ந்த்ராஜ், முனீஷ்காந்த், ராவ் ரமேஷ், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, மனோபாலா, சஞ்சனா சிங், லொள்ளு சபா சேஷு,...
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொஞ்சமே கொஞ்சம் கூட யதார்த்தம் வந்து விடக் கூடாதென மிகவும் கவனமுடன் படத்தை எடுத்துள்ளனர். நாயகன் யாரென்பது சஸ்பென்ஸ். முக்கால் வாசி படத்திற்குப் பின் தான் ஓப்பன் செய்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும்தான். நாயகன் யாரென விசாரிக்காமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு உதவி செய்கிறார் சூரி; தமன்னாவோ காதலிக்கவே செய்கிறார். 'எல்லா லவ்விலும் ஒரு பொய் இருக்கும்; உன் பொய்ல லவ்விருக்கு' என காரணமும் கண்டுபிடிக்கிறார். டெபுடி கமிஷ்னராக வருகிறார் ஜெகபதி பாபு. மிக சீரியசான முகத்தோடு படத்தில் காமெடி செய்கிறார். நாயகன் யார், என்ன செய்கிறான் என விசாரிக்கிறேன் என்று சொல்லி பெரிய ரவுடிகளை வைத்துக் கடத்தி அடிக்கிறார். 'பணம் தருகிறோம். ஓடிடு' என போலீஸ் மிரட்டுகிறது. அதற்கு மசியாத நாயகனை நல்லவனென அங்கீகரித்து, மாப்பிள்ளையாக ஏற்கிறார் ஜெகபதி பாபு. விஷால் யார்...