Shadow

Tag: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இனிமேல் ஆல்பம் பாடல் – 10 மில்லியன் பார்வைகள்

இனிமேல் ஆல்பம் பாடல் – 10 மில்லியன் பார்வைகள்

சினிமா, திரைச் செய்தி
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான 'இனிமேல்' பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமானார். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று வெளியானது இந்தப் பாடல். ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையைப் படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது. இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தைக் கச்சிதமாகப...
‘இனிமேல்’ பாடல் | காதலின் மாயையிலிருந்து தீர்வை நோக்கி

‘இனிமேல்’ பாடல் | காதலின் மாயையிலிருந்து தீர்வை நோக்கி

சினிமா, திரைச் செய்தி
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளரும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், “முதலில் நான் ‘இனிமேல்’ என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆகச் செயல்படுகிறது, அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இ...
ஃபைட் க்ளப் விமர்சனம்

ஃபைட் க்ளப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உப்புக்காற்றும் உறை மணலும் உறவாடும்  வடசென்னைப் பகுதிகளை களமாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் மனநிலையிலும் வாழ்க்கையிலும் ஒளிந்திருக்கும் இருவேறுவிதமான முரண்பட்ட வாழ்க்கை முறையை  யதார்த்த அழகியலுடன் பேச முற்பட்டிருக்கிறது ஃபைட் கிளப். வடசென்னை என்றாலே கால்பந்தாட்டமும், கேரம் போர்டுகளும், ரெளடியிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் தானா? இதைத் தாண்டி அம்மக்களிடம் வாழ்க்கை மற்றும் வாழ்வியலுக்கான கூறுகள் ஏதுமே இல்லையா  என்கின்ற கேள்வி எவ்வளவு நியாயமானதோ,  அதே அளவிற்கு நியாயமானது, அங்கு ஏன் ரெளடிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகின்றது என்பதும்.  இவற்றை மாற்ற அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன  என்கின்ற கேள்விகளும் முக்கியமானவை. வடசென்னை என்பது புரசைவாக்கத்தின் பின்புறமுள்ள அயனாவரத்தில் துவங்கி பெர...
“விஜய் குமார் என்றால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

“விஜய் குமார் என்றால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்” திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாகத் தயாரிப்பாளர் ஆதித்யா, “ஃபைட் கிளப், மிகப் பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப் படம் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய் குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்தக் கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தப் படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய்குமார் லோகேஷ் பிரதருக்கு படம் காட்ட வேண்டும் என்றார். அப்போது விக்ரம் சக்சஸில் இருந்தா...
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

சினிமா, திரைச் செய்தி
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னைத் தய...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் ப...
அவியல் விமர்சனம்

அவியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், நான்கு குறும்படங்களை ஒன்றாக்கி 132 நிமிட அவியலாக்கியுள்ளனர். நான்கும் ஒவ்வொரு விதம். மோஹித் மெஹ்ராவின் 'ஸ்ருதி பேதம்', புறத்திணைப் பிரிவுகளான பெருந்திணையையும் (பொருந்தாக் காதல்) கைக்கிளையையும் (ஒரு தலை காதல்) கலந்து கட்டிய கதை. தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. இது போன்ற பேசுப்பொருள்களை நாடகப் பாணியில் திரையில் உலவ விடுவதில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சமர்த்தர். ஆனால், மோஹித் மெஹ்ராவோ முற்றிலும் நகைச்சுவையுடன் இதை அணுகியுள்ளார். சில நிமிடங்களே எனினும், இந்தப் பேசுப்பொருள் தருகின்ற கிளர்ச்சி அலாதியானது. ஆனால், கலாச்சாரக் காவலர்களுக்கு வேலை வைக்காமல் படம் சுபமாகவே முடிகிறது. சித்தி ஸ்ருதியாக அம்ருதா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மணிரத்னம் படத்து நாயகிகளை நினைவுபடுத்துகின்றது. மற்ற ம...