Shadow

Tag: இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

சினிமா, திரைத் துளி
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாகப் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, 'ஹரா' திரைப்படத்தின் அதிரடியான டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார். இதன் காரணமாக, 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கெனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்குப் பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது ...
பவுடர் விமர்சனம்

பவுடர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர். கொரோனாக் காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாகப் படத்தை எடுத்துள்ளார். தாதா 87 படத்தில், இரண்டாம் ப...
தா தா 87 விமர்சனம்

தா தா 87 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாதாவாக (Don) 87 வயது சாருஹாசனும், அவரது காதலி கீதாவாக 80 வயது சரோஜாவும் நடித்துள்ளனர். சரோஜா, கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சாருஹாசனை முன்னிறுத்தி இயக்குநர் விஜய் ஸ்ரீ, படத்திற்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்துக் குழப்பியுள்ளார். அந்தக் குழப்பம் படத்தின் முதற்பாதி முழுவதிலுமே கூடத் தொடர்கிறது. மஞ்சள் துண்டு (பாமக), நீலத்துண்டு (விசிக) எனத் தெளிவில்லாத அரசியல், அவர்களை இயக்கும் ஆண்டவரின் அண்ணனான தாதா சத்யா, அதை விரும்பாத எம்.எல்.ஏ. என முதற்பாதி பயணிக்கிறது. பிறகு, கவிதை போன்ற இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஜெனியாக நடித்திருக்கும் ஸ்ரீபல்லவி விஸ்வரூபமெடுக்கிறார். அவரது தந்தை ஜனா நாயுடுவாக ஜனகராஜ் நடித்துள்ளார். ஜனா மகள் ஜெனி என்பது குழப்பினாலும், மகள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் மிக்க உறுதுணையான அப்பாவாக நடித்துள்ளார் ஜனகராஜ். சாய் தீனாவை ஞாபகப்படுத்த...
கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

சினிமா, திரைத் துளி
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் "தாதா 87" படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை, பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நடைபெற்றது. வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை "தாதா 87" படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. பல புதிய பரிமாணங்களுடன் உருவாகும் இப்படம், திரையரங்கில் வெளியாகும் போது இடைவேளையின்றி திரையிடப்படும் என்றும், படத்தின் முதல் காட்சி நடுஇரவு 12 மணிக்கு திரையிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் ந...
தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

சினிமா, திரைத் துளி
சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் "தாதா 87" படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது ஏ எஃப் எஃப் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது....