Shadow

Tag: இயக்குநர் ஹரி

குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின்  நோக்கம் – இயக்குநர் ஹரி

குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின் நோக்கம் – இயக்குநர் ஹரி

சினிமா, திரைத் துளி
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எ...
சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு

சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு

சினிமா, திரைச் செய்தி
சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தேறியது. விழாவில் பேசிய நடிகர் பிரபு, “அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார்; இறக்குவார்; குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்தப் பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்” என்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பேசுகையில், “வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவது கடினமான பணி. அதிலும் கமர்ஷியல் வெற்றி பெற்ற சாமி படத்தைப்...
சிIII விமர்சனம்

சிIII விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி "சி3" ஆகிவிட்டது. ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத...